மேச்சேரியில் அதிக அளவில் பழங்கள் உற்பத்தி செய்யப்படுவதால், குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் மேச்சேரி – நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி. இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், சொட்டு நீர் பாசனம், வேளாண் கருவிகளுக்கு அரசு மானிய உதவிகள் வழங்குகிறது.சேலம் ஓமலூரில் காய்கறி, பழச்சந்தை அமைக்கப்படும் . மேச்சேரியில் அதிக அளவில் பழங்கள் உற்பத்தி செய்யப்படுவதால், குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் இன்றைய தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் கரை கடந்து தீவிரமாக மாறி கனமழையாக தமிழகத்தில் அனைத்து இடங்களிம் பெய்து வருவதால் தமிழகத்தில் 23 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி,கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கபட்ட நிலையில் அம்மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலை கழக தேர்வுகள் இன்று நடைபெறவிருந்த நிலையில் தொடர்மழை காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.ரத்து […]
கஜா புயலின் தீவிரம் தொடர் மழையாக மாறியுள்ளதன் காரணமாக திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (16.11.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, தஞ்சை, சிவகங்கை, அரியலூர், திருப்பூர், புதுச்சேரி, காரைக்கால், தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுள்ள நிலையில் மேலும் கஜா புயல் காரணமாக விருதுநகர், சேலம், ஈரோடு மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை […]
தமிழகமெங்கும் காய்ச்சல்கள் பரவி வருகிற நிலையில், சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியை வஹீர்ந்த ஜெயராமன் என்ற முதியவர் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். பின் இவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுசிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் முதல் முறையாக டிஜிட்டல் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை மாவட்ட ஆட்சியர் ரோகினி திறந்து வைத்தார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள கிளை நூலகத்தில் நவீன தொழிநுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் நூலகம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், சுற்றுவட்டார மாணவ, மாணவிகள் நூலகத்தை பயன்படுத்தி பயனடைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
டெல்டா பகுதிகளில் மலை பெய்வதால், அணையில் இருந்து 800 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 6,008 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 6,070 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து பாசன வசதிக்காக 800 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முதல்வராக உள்ளவர் எடப்பாடி கே.பழனிச்சாமி இவருடைய மாவட்டம் சேலம் அம்மாவட்டத்தில் அமைந்துள்ள எடப்பாடி தொகுதி மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முதல்வர் பழனிச்சாமி அதனாலே அவரை எடப்பாடி பழனிசாமி என்கின்றனர். இந்த நிலையில் முதல்வரின் சொந்த ஊரிலே விளையாட்டு விராங்கணைகள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டு ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வருகின்றனர் என்ற வேதனையான தகவல் ஒன்று வெளியாகி வருகிறது.இதனை தொகுதி எம்.எல்.ஏவும்,முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி நடைவடிக்கை எடுப்பாரா என்று சமூக ஆர்வலர்களும்,வீரங்கனைகளும் கேள்வியுடன் கோரிக்கையும் விடுத்துள்ளனர். கவுண்டம்பட்டியைச் சேர்ந்த ஜவுளி […]
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது 73 நாட்களுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 100.91 அடியில் இருந்து 99.88 அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,989 கன அடியில் இருந்து 2,538 கன அடியாக குறைந்துள்ளது.
சேலம், தாடிக்காரனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சுகன்யாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்துள்ளது. இவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமைச்சர் ஜெயக்குமாரை ரங்க நாதன் என்பவர் யூடியூபில் விமர்சித்துள்ளார். தினகரனின் ஆதரவாளரான தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ரங்கநாதனை ஓமலூர் அருகே தாராபுரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் தினகரனின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் அருகே, எட்டாம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது மட்டுமின்றி அவரைக் கொடூரமாக படுகொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி சுந்தர புரத்தைச் சேர்ந்த சாமிவேல் – சின்னப்பொண்ணு தம்பதியின் இளைய மகள் ராஜலட்சுமி. எட்டாம் வகுப்பு பயின்று வந்த இம்மாணவியை, அதே பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் என்கிற கார்த்தி என்பவர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு கொடூரமாக கழுத்து அறுத்து கொலை […]
மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் அனைத்து இடங்களிலும் காய்ச்சல் பரவி வருகிற நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு பரிசோதனை செய்ய ஆய்வுகூடம் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கூறியுள்ளார். 4 மணி நேரத்தில் சோதனை செய்யப்படும் என்றும், காய்ச்சல் பரவுவதை பயன்படுத்தி தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
மழை காலங்களில் மக்களுக்கு ஏற்படும் காச்சல் மற்றும் மர்மமான நோயாளில் இருந்து மக்களை காக்க அரசு பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. நிலையில், காய்ச்சலால் வரும் மக்களுக்கு உடனடியாக ஊசி போடாமல், மாத்திரை கொடுக்க வேண்டும். தொடர்ந்து காய்ச்சல் நீடித்தால், இரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்று அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு அறிவுறுத்த்ப்பட்டுள்ளது.மேலும், அனைவருக்கும் கசாயம் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் அருகே குடும்பத் தகராறு காரணமாக போட்டி போட்டுக் கொண்டு விஷம் குடித்த மாமியார் பலியானார். மருமகளுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சரஸ்வதி. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த நிலையில் தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக சரஸ்வதிக்கும் அவரது மாமியார் சாந்திக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. […]
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியுள்ளது.இதனால் மக்கள் மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் குமரி, நாகை, தர்மபுரி மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ள நிலையில், சேலத்தில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.இந்நிலையில் சேலத்தில் வெயில் வாட்டிய நிலையில் இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். மேலும் தர்மபுரிமாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் நேற்றுமாலை கனமழை பெய்தது. சுமரர் ஒருமணி நேரம் […]
சேலத்தில் காயத்ரி என்ற திருமணமான பெண் சீனிவாசன் என்பவரோடு தொடர்பு வைத்ததாக தெரிகிறது.இதனால் அந்த பெண்ணின் பெற்றோர்கள் காயத்திரியை கண்டித்துள்ளனர்.இதனால் அந்த பெண் சீனிவாசனுடன் உள்ள தொடர்பை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வந்ததால் ஆத்திரமடைந்த சீனிவாசன் இன்று காலை காயத்திரி மீது ஆசிட்டை வீசி தப்பி சென்றுள்ளார். காயத்திரி மீது ஆசிட் வீசியதை பார்த்து அதிர்ந்து போனவர்கள் காயத்திரியை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து செவ்வாய்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். […]
திட்டமிட்டபடி நவம்பர் 27ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்குவது உறுதி என்று தமிழ்நாடு ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரணியம் கூறுகையில்,சேலத்தில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதில் இருந்தும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்கிறார்கள்.எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் திட்டமிட்டபடி நவம்பர் 27ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்குவது உறுதி. ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது என்றும் தமிழ்நாடு […]
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில், கர்ப்பிணி பெண் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில், கர்ப்பிணி பெண் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். 18 வயதே ஆன காவியா என்ற அந்த பெண், அதே பகுதியை சேர்ந்த வசந்த குமார் என்பவரை தனது பள்ளி பருவத்திலேயே காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. தற்போது […]
கல்வராயன் மலையில் உள்ள அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது இந்த கல்வராயன் மலை இதில் உள்ள அருவியில் எதிர்பாராத விதமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது சுதரித்து கொண்ட சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேறியதால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த ஏராளமானோர் தப்பினர். இந்நிலையி 10 அடி உயரம் கொண்ட இந்த அருவியில் விழும் நீரானது, அடிவாரத்தில் உள்ள முட்டல் ஏரியைச் சென்றடையும். சுற்றுலாத் தலமான இங்கு, விடுமுறை தினம் என்பதால் கூட்டம் அலைமோதிய […]
நீர்வரத்து விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடியாக மேட்டூர் அணைக்கு அதிகரித்துள்ளது. கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 23ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்வரத்து காலை 8மணிக்கு நேரப்படி விநாடிக்கு ஐயாயிரத்து 23கனஅடியாக இருந்தது. கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் காவிரியில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்ததுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மாலை 5மணி நிலவரப்படி து நொடிக்கு 23ஆயிரம் கனஅடியாக […]