சேலம் மாவட்டம் ஏற்காட்டில், 44-வது கொடைவிழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கியது. இந்த கொடைவிழா இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், இவ்விழாவை ஆட்சியர் ரோகிணி ராமதாஸ் தொடங்கி வைத்தார். இந்நிலையில், பூங்காவில் கண்ணை கவரும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விலங்குகள், மரங்கள் என பல உருவங்களில் உள்ளது. இதனையடுத்து வான்வீரர் அபிநந்தனை சிறப்பிக்கும் வகையில் அவர் புகைப்படத்துடன் கூடிய, மலர் விமானம் அமைக்கப்பட்டுள்ளது.
கோடை கால வெயில் வாட்டி வதைக்கும் வெளியில் சேலத்தில் அதிகமான குடிநீரை வீணாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களை கோபத்துக்குள்ளாகியுள்ளது. வெயிலின் தாக்கத்தால் பெரும்பாலான நீர்நிலைகள் வற்றி விட்டன. ஆதலால் மக்கள் தண்ணீருக்காக மிகவும் கஷ்டப்படுகின்றனர். குடிநீருக்காக பல பகுதிகளில் மக்கள் வெகுதூரம் சென்று எடுத்து வரவேண்டிய சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து ரோடு பகுதியில் பாலம் பராமரிப்பு பணிக்காக அங்கிருந்த குடிநீர் குழாயில் உள்ள அனைத்து நீரையும் வெளியேற்றினர். இதனால் அதிகப்படியான […]
தேர்தல் சமயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள் கைது செய்யப்பட்ட நிலையில் சேலம் மாவட்டம் காரிபட்டியில் சேர்ந்த பிரபல ரவுடி கதிர்வேல் .இவர் மீது பல வழக்குகள் உள்ளனர். போலீசாரின் பிடியில் சிக்காத கதிர்வேலை தேடி போலீஸ் சென்றனர். இந்நிலையில் இன்று காலை கதிர்வேலை சுற்றிவளைக்கப்பட்ட போது போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.இந்த தாக்குதலில் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் படுகாயம் அடைந்தார். ஆய்வாளரை தாக்கிய கதிர்வேல் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.இந்த சம்பவத்தில் கதிர்வேல் உயிரிழந்தார்.இதுவரை 30 ரவுடிகள் […]
ஏற்காடு வாழவந்தியை சேர்ந்தவர் துரைசாமி. இந்த இளைஞர் கடந்த 2014-ம் ஆண்டு, 14 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து இவரது பெயரில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து சேலம் மாவட்ட மகளீர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 5 வருட சிறை தண்டனை மட்டுமல்லாமல், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
இன்றைய சமூக பிரச்சனைகளில் பாலியல் பிரச்சனை என்பது மிகவும் முக்கியமான பிரச்சனையாக கருதப்படுகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம், கடம்பூர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு கிராம நிர்வாகம் அலுவலர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பெயரில் கிராம நிர்வாகம் அலுவலர் சரவணனனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். .
சேலம் பகுதியில், வெறிநாய் ஒன்று சுற்றி திரிந்துள்ளது. இந்த நாய் ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளது. இதனையடுத்து, அங்குள்ள அரசு மருத்துவமனையில், 50-க்கும் மேற்பட்டோர் குவிந்ததால், மருத்துவ மனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நாய் சாலையில் நடப்பவர்கள், நிற்பவர்கள் என அனைவரையும் விரட்டி விரட்டி கடித்துள்ளது. அந்த நாயை பிடிக்குமாறு மாநகராட்சியில் புகாரளித்த நிலையில் அவர்கள், நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. இதனையடுத்து அப்பகுதி மக்களே திரண்டு அந்த நாயை அடித்து கொன்றுள்ளனர்.
மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து மக்களும் தங்களது வாக்குகளை உற்சாகமாக பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு சிவகிரியில் வாக்களித்து விட்டு வந்த முதியவர் முருகேசன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மேலும், சேலம் வேடப்பட்டி வாக்குசாவடியில் வாக்களித்துவிட்டு வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இவர்களது, உயிரிழப்பு அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், தேர்தல் ஆணையம் இதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகினற்னர். இந்நிலையில், சேலம் மாவட்டம் மக்களவை தொகுதியில், பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒரு பெண்ணுக்கு பணம் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த எதிர்க்கட்சிகளின் புகாருக்கு மறுப்பு தெரிவித்த அதிமுகவினர், அந்த பெண்ணிடம் வாழைப்பழம் வாங்கியதற்காகவே பணம் கொடுத்ததாக அதிமுகவின் அதிகாரபூர்வ […]
சேலம் மாவட்டம் களரம்பட்டி அருகே 6 ஆம் வகுப்பு மாணவிக்கு, முதியவர் குடிபோதையில், அந்த மாணவியிடம் அத்துமீறி நடந்துள்ளார். இந்நிலையில், குடிபோதையில் அத்துமீறி நடந்த முதியவர் சின்னசாமி மகளீர் போலிஸாரால் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாகவும், பாஜகவின் தேர்தல் அறிக்கை ஜீரோவாகவும் உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், ஏழை தாயின் மகனின் ஆட்சியில், விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோர் கோடி கோடியாக கொள்ளையடித்து செல்கின்றனர். பிரதமராக இருக்கக் கூடிய மோடி […]
சம்பவத்தில் இறந்து போன சிறுமியை அங்கிருந்த ஒரு மரத்தில் தூக்கில் தொங்க விட்டு அவர்கள் தப்பியோடிவிட்டனர். பூபதி உள்ளிட்ட 5 பேரை வாழப்பாடி காவல் துறை கைது செய்து அவர்கள் மீது கூட்டு வன்புணர்வு கொலை மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சென்றாயம்பாளையத்தை சேர்ந்த பரமசிவம்.இவரின் 10 வயது மகளை மதுபோதையில் கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த்பாபு, ஆனந்தன், பாலகிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோர் அருகிலுள்ள பெருமாள் […]
தமிழக முன்னேற எம்.ஜி.ஆர் மாறும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதான் தான் காரணம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் அண்ணா பூங்காவில், 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா சிலையுடன் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தைத் இன்று அவர் திறந்து வைத்து பேசினார். இறைவனை நேரில் பார்த்ததில்லை என்றும், இருவரின் சிலையை திறப்பது தமக்கு மிகப்பெரிய பாக்கியம் எனவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், தமிழக முன்னேற எம்.ஜி.ஆர் மாறும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதான் தான் […]
முகநூல் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர், வேறொரு பெண்ணை மணமுடிக்க முயற்சிப்பதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த ஸ்ரீராமன் ராணுவத்தில் உள்ளார். அகமதாபாத்தில் பணிபுரியும் அவரும், திருவண்ணாமலையை சேர்ந்த சித்ரா என்ற பெண்ணும் முகநூல் மூலம் காதலித்து, கடந்த ஜுன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அகமதாபாத்தில் வசித்து வந்த அவர்கள், அண்மையில் சொந்த ஊர் வந்தனர். அப்போது, ஸ்ரீராமனுக்கு அவரது பெற்றோர் வேறொரு பெண்ணை திருமணம் […]
சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் 42 லட்சம் ரூபாய் செலவில் குப்பை கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இங்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால், குப்பைகள் அதிக அளவில் சேருகிறது. இவற்றின் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தின் அடிப்படையில் அதற்கான கட்டமைப்பு பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. குப்பை கழிவில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் ஏற்காடு ஏரியை […]
சேலத்தில் மதுபான பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் பொதுமேலாளர் எச்சரித்துள்ளார். பிளாஸ்டிக் பொருட்கள் தடை அமலுக்கு வந்துள்ள நிலையில், சேலம் நகர்ப்பகுதியில் உள்ள மதுபான பார்களில், டாஸ்மாக் பொதுமேலாளர் முத்துராமலிங்கம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மத்திய பேருந்து நிலையம் அருகே இருந்த பாரில் ஆய்வு செய்தபோது, முற்றிலும் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பிளாஸ்டிக் இல்லாத பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துமாறு பார் நிர்வாகிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
சேலத்தில், பெரிய நிறுவனங்களில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார். ஜனவரி 1-ம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்தநிலையில், சேலத்தில், பிளாஸ்டிக் இல்லாத புத்தாண்டு என்ற பெயரில், மாநகராட்சி நிர்வாகம், பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் இயக்கத்தை தொடங்கியுள்ளது. இதில், மாநகராட்சி ஆணையர் சதீஷ் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த […]
இயற்கை வளத்தை பாதுகாக்கவும், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தியும் உடுமலையில் இளைஞர் ஒருவர் 40 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் மிதிவண்டியில் பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா.இவர், இயற்கைவளத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தியும் சேலத்தில் இருந்து 40 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு மிதிவண்டி பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சேலத்தில் இருந்து தொடங்கிய இந்த மிதிவண்டி பயணத்தை, ஆந்திரா,உள்ளிட்ட மாநிலங்கள் வரை 20 […]
எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகின்றன என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், சாலை விபத்துக்களை தடுக்கவே பசுமை வழிச்சாலை திட்டம். ஆட்சி விரைந்து நடக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகின்றது.உயிரை பணயம் வைத்து மின் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர், துப்புரவு பணியாளர்களும் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர்.சேலத்தில் பஸ் போர்ட் ஒன்று உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.