பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் மயங்கி விழுந்த தந்தை. சேலம் மாவட்டத்தில் உள்ள அன்னதானப்பட்டி எனும் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி தான் ஜேம்ஸ். கடந்த 2015 ஆம் ஆண்டு தனது 9 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஜேம்ஸின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக ஜேம்ஸ் போக்சோ சட்டத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது இதற்கான வழக்கு விசாரணை சேலம் […]
மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு வினாடிக்கு 9,160 கன அடியிலிருந்து, 5,938 கன அடியாக குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை கர்நாடக மாநிலத்தில் தீவிரமடைந்து இருந்ததால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வழிந்தன. இதையடுத்து இந்த இரண்டு அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், ஒரு கட்டத்தில் வினாடிக்கு ஒரு லட்சத்து இருப்பது ஆயிரம் கன அடி என்ற அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விரைவில் மேட்டூர் அணை நிரம்பி வழிந்தது. […]
லஞ்சம் கொடுக்காத விவசாயிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வனத்துறை அதிகாரி அன்பழகன் வன அலுவலர் முருகனால் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள ராமநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் காட்டு விலங்குகள் விளை நிலங்களுக்குள் வந்து பயிர்களை சேதப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக பள்ளம் தோண்ட வனத்துறையிடம் அனுமதி கேட்டுள்ளனர். இதற்காக வனத்துறை பணியாளர் விவசாயிகளிடம் 5 லட்சம் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் விவசாயிகள் தங்களால் முடிந்த மூன்று லட்சத்தை கொடுத்துள்ளனர். இந்நிலையில் மீதி பணத்தை தருமாறு […]
தொடர்ச்சியான மழை பெய்து வருவதால் நீர் தேவை குறைந்துள்ள காரணத்தால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி குருவை சாகுபடிக்காக நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்கள் அனைத்திலும் தொடர்ச்சியான மழை பெய்து வருவதால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைந்துள்ளது. எனவே கடந்த 15ம் தேதி நீர்திறப்பு 12 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. மேலும் 16 ஆம் […]
பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மக்கள் வெளியே சென்றால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு, […]
மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால், 1.5 ஆண்டுக்கு பின்னர், நந்தீஸ்வரரின் தலை வெளியே தெரியும் நிகழ்வு கண்கொள்ளாக் காட்சியாகி உள்ளது . மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடியாகும். அணையின் பண்ணவாடி நீர்பரப்பு பகுதியில் அருள்மிகு சுவாமி ஜலகண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது உள்ளது. அணையின் நீர்மட்டம், 69 அடிக்கு மேலே உயரும்போது கோவில் நந்தியின் சிலையானது மூழ்கி விடும். கடந்த ஆண்டு பிப்ரவரிமாத இறுதியில் அணை நீர்மட்டம், 69 அடிக்கு கீழ் சரிந்ததால், நந்தி சிலை […]
சேலம் மாவட்டத்தில் கொரோனா தனிமை சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் உள்ள கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த மாரியம்மாள் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உறவினருக்கு கொரோனா இருந்ததால் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக ஒன்பதாம் பாலி எனும் பகுதியை சேர்ந்த மாரியம்மாளும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் திடீரென இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து […]
போலீசாரை எட்டி உதைத்த முன்னாள் எம்.பி அர்ஜுனன். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, தமிழகத்தில் சில மாவட்டங்களில், பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் 27 இடங்களில் காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த முன்னாள் எம்பி […]
சமூக வலைத்தளங்களில் பொதுமுடக்கம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் இதுவரை, இந்த வைரஸ் தாக்கத்தால், 19,372 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 145 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்,தமிழகத்தில் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிற நிலையில், சேலத்தில் சமூக வலைதளங்களில், பொதுமுடக்கம் பற்றி வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக […]
சேலம் அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் வெளிமாநில தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களில் சிலர் மருத்துவர்களிடம் அசைவ உணவு கேட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 80-கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் வெளிமாநில தொழிலாளர்கள் சிகிச்சை […]
சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள உரிமையியல் நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள உரிமையியல் நீதிமன்ற […]
சேலத்தில் சிண்டிகேட் வங்கி பெண் அதிகாரிக்கு கொரோனா தொற்று. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சிறியவர்கள், பெரியவர்கள் என வேறுபாடு இல்லமால், பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே இந்த நோய் தாக்கி வருகிறது. இந்நிலையில், சேலத்தில் சிண்டிகேட் வங்கி […]
ஊரடங்கு உத்தரவால் தாயின் இறுதி சடங்கை வீடியோக்காலில் பார்த்து கதறி அழுத்த ராணுவ வீரர். கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவசரத் தேவைக்குக் கூட, வெளி மாநிலங்களில் இருந்து வரவோ, அல்லது இங்கு இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லவோ இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்த புக்கம்பட்டி, அழகா கவுண்டன் ஊரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி மாது(65). இவர்களது மகன் சக்திவேல்(42). […]
ஊரடங்கில் கறிவிருந்து சமைத்து சாப்பிட்ட இளைஞர்களை கைது செய்த போலீசார். பின் ஜாமினில் விடுவிப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், சேலம் மாவட்டம். வீராணம் பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கறிவிருந்து சமைத்து, தனிமனித விலகல் இன்றி […]
வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து சேலம் வருவோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் வெளியில் வரவேண்டாம் என்றும், முக கவசம் அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், சேலம் மாநகர ஆணையர், வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து சேலம் வருவோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். […]
சேலம் மாவட்டத்தில் மருந்து கடைகள் தவிர அனைத்து அத்தியாவசிய கடைகளும் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இன்று மதியம் 1 மணி முதல் திங்கட்கிழமை காலை வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் மருந்து கடைகள் தவிர அனைத்து அத்தியாவசிய கடைகளும் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் […]
முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த சேலம் வாசிகளிடம் 30,000 அபராதம் வசூல். உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் காரணமாக அந்தந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அடிப்படையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றுபவர்களுக்கு ரூபாய் 500 வீதம் அபராதம் வசூலிக்கப்படும் என ஏற்கனவே அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து […]
சேலம் மாநகராட்சியில் நாளை முதல் அம்மா உணவகங்களில் காலை, மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். சேலம் மாநகராட்சியில் நாளை முதல் அம்மா உணவகங்களில் காலை, மதிய உணவு இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த உணவுக்கான செலவை சேலம் மாநகர், புறநகர் மாவட்ட அதிமுக ஏற்கும் என தெரிவித்துள்ளார். மேலும் மாநகராட்சி, ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனையில் வேலை செய்து வரும் தூய்மை பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும், 10 கிலோ அரிசி மற்றும் […]
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, தமிழகத்தில், மக்கள் நலனை கருத்தில் க்கொண்டு தமிழக முதல்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறதா. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி , கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நாளை சேலம் செல்கிறார். இவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக தற்போது இந்தியா முழுவதும் 21 நாளைக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடைகள், ஆலயங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளன. சில சந்தைகள் மருத்துவமனைகள் என பொதுமக்களுக்கு அத்தியாவசியமான இடங்கள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்பொழுது சேலம் ஆத்தூர் அருகே உள்ள புதுப்பேட்டையில் இயங்கிவந்த உழவர் சந்தை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது பேருந்து நிலையம் அருகே இந்த உழவர் சந்தையில் இட மாற்றம் செய்துள்ளனர். இந்த சந்தையில் தினசரி […]