தனது மனைவியுடனான கருத்து வேறுபாடு காரணமாக சேலத்தை சேர்ந்த நபர் ஒருவர், தனது 2 குழந்தைகளை கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள ஒரு ஹோட்டலில் பணியாற்றி வரக்கூடிய நபர் தான் முருகன். முருகனுக்கும் அவரது மனைவி முருகேஸ்வரிக்கும் கடந்த சில தினங்களாக கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் 9 வயதில் மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர். தனது மனைவியுடன் […]
பண மோசடி புகார் காரணமாக சேலத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் உண்டு உறைவிடப் பள்ளியில் வெங்கடேசன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வாருகிறார். இந்நிலையில், தலைமை ஆசிரியர் வெங்கடேசன் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இது குறித்து, இவர் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் பல புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சேலம் மாவட்டம் […]
சேலத்தில் ரேவதி என்ற பெண் மீது அவரது கணவர் ஆசிட் வீசியுள்ளார். இதில் அப்பே சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம் குகை பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ். இவரது மனைவி ரேவதி இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக அவரது மனைவி விவாகரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் இன்று சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே ரேவதி தனது […]
சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது காவலர் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புக்கு காரணமான காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் மதுக்கடைகளை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் உள்ளது. எனவே சேலம் மாவட்டத்தி சேர்ந்த குடிமகன்கள் தர்மபுரிக்கு சென்று தங்களுக்கு தேவையான சாராயங்களை வாங்கி வந்து அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் மளிகை கடை […]
பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான புகார்கள்,கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதனால்,பள்ளிகளில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில்,சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென்று நேற்று ஆய்வு மேற்கொண்டார். […]
நேற்று முதல்வர் கல்லணையை தூர்வாரும் பணியை பார்வையிட திருச்சி சென்றிருந்தார். இன்று மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறந்து விட சேலம் செல்கிறார். நேற்று முதல்வர் திருச்சியில் உள்ள கல்லணையில் தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக திருச்சி சென்றிருந்தார். கல்லணையை பார்வையிட்ட பின்பதாக டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி இருந்தார்.அதன் பின்பாக நேற்று திருச்சியில் ஓய்வெடுத்த முதல்வர், இன்று சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த […]
ஆண்மைக் குறைவு மற்றும் நரம்பு தளர்ச்சி ஆகிய சித்த மருத்துவத்தில் பிரபலமான டாக்டர் சிவராஜ் சிவகுமார் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக இன்று நள்ளிரவு 12 .5 மணியளவில் உயிரிழந்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கக் கூடிய சித்த வைத்திய நிபுணர் ஆக விளங்கியவர் தான் டாக்டர் சிவராஜ் சிவகுமார். சேலத்தை தலைமை இடமாக கொண்டு இந்தியாவில் ஏழு தலைமுறைகளாக 206 வருடங்களுக்கு மேலாக சித்த மருத்துவத்தில் […]
800 க்கு 553 மதிப்பெண்கள் பெற்று சி.ஏ தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ள சேலம் மாணவர் இசக்கி ராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றி வரக்கூடியவர் தான் சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன முனியப்பன் கோவில் பகுதியில் வசிக்கும் ஆறுமுகம். இவரது மகனமகன் இசக்கி ராஜா சாட்டர்ட் ஆக்கவுண்டன்ட் இன்ஸ்டிடியூட்டில் படித்து வந்தார். கடந்த நவம்பர் மாதம் இவர் எழுதிய தேர்வு குறித்த மதிப்பெண் தற்பொழுது வெளியாகியுள்ள நிலையில், […]
வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தலில் மாற்றத்தை உருவாக்க மக்கள் தயாராகி விட்டார்கள் என சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் அவர்கள் கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களுக்கான வாக்குகளை சேகரிப்பதற்காக தற்பொழுது பிரச்சாரத்தை துவங்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், முதல்கட்டமாக மதுரையில் பிரச்சாரத்தை துவங்கிய மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் அவர்கள், அதன் பிறப்பதாக விமானம் மூலம் சேலம் சென்றடைந்தார். அங்கு […]
சேலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது பல்வேறு இடங்களிலும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பலரும் பிரச்சாரத்தில் ஈடுபட துவங்கி உள்ளனர். இந்நிலையில், தனது கட்சிக்கு ஆதரவாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்களும், மூத்த நிர்வாகிகளும் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ் […]
உழைக்கும் வர்க்கத்தினருக்காக அம்மா மினி கிளினிக் செயல்படும் என கூறி, சேலத்தில் நேற்று முதல்வர் மினி கிளினிக்குகளை திறந்து வைத்துள்ளார். ஏழை, எளிய மக்களுக்கு நேரில் சென்று மருத்துவ சேவை அளிக்கும் வகையில் மினி கிளினிக்குகள் திட்டம் கொண்டுவரப்படும் என அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்திருந்தார். அதன்படி 1,400 கிராமப்புறங்களிலும், 200 பெருநகர சென்னை மாநகராட்சிகளிலும், 200 நகர்ப்புறங்களிலும், 200 நகரும் கிளினிக்குகள் என மொத்தம் தமிழகத்தில் 2000 மினி கிளினிக்குகள் தொடங்க திட்டமிடப்பட்டு இதற்கானவேலைகளும் […]
மூத்த மகன் புற்றுநோயால் உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் தங்களது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு கணவன் மனைவி தற்கொலை செய்து உயிர் இழந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னம்மாபேட்டை வாய்க்கால் பட்டறை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 38 வயதுடைய முருகன் என்பவர் சலூன் கடையில் வேலை பார்த்து வருபவர். இவரது மனைவி கோகிலா வீட்டில் குழந்தைகளை பராமரித்து வருகிறார். இவர்களுக்கும் மதன்குமார், வசந்தகுமார், கார்த்திக் எனும் மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் முருகனின் மூத்த மகன் […]
சீர்மிகு நகர திட்டப்பணிகளை செயல்ப்படுத்துவதற்கான தரவரிசை பட்டியலில் 70.7 புள்ளிகளை பெற்று சேலம் மாநகராட்சி தேசிய அளவில் எட்டாமிடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசின் நகர்புற வளர்ச்சித்துறை சார்பில், சீர்மிகு நகர திட்டத்துக்கு சேலம், கோவை, சென்னை உள்பட 100 நகரங்களை தேர்வு செய்தனர். அதில் தமிழகத்தில் உள்ள 11 மாநகராட்சிகள் சீர்மிகு நகர வளர்ச்சி திட்ட பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதில் […]
சேலத்திலிருந்து சென்னைக்கு அனைத்து நாட்களும் இயக்கப்பட்டு வந்த விமான சேவை மாற்றம் செய்யப்படுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்பட்டு வந்த சேலம்Toசென்னை விமான சேவை அக்,.25 முதல் செவ்வாய்,புதன் ஆகிய தினங்களில் இயக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட இரண்டு கிழமைகள் தவிர மற்ற 5 நாட்களும் விமானம் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து காலை 8.15க்கும் புறப்படும் விமானம் 8.15 சேலத்திற்கு சென்றடையும் என்றும் மறுமார்க்கமாக சேலத்திலிருந்து 8.36க்கு புறபட்டு சென்னை 9.35க்கு […]
சேலம் அருகே முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதி காயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் வழியாக சென்னை சென்று கொண்டிருந்த முதல்வர் அவர்களின் பாதுகாப்பு வாகனம் கடந்த 18 ஆம் தேதி அவ்வழியே சென்று கொண்டிருந்த சௌந்தரம் என்னும் 64 வயது பெண் மீது மோதியுள்ளது. இதனால் அந்தப் பெண் படுகாயம் அடைந்துள்ளார். காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று இந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. தருமபுரி மாவட்டம் அரூர், செல்லம்பட்டி, எட்டிப்பட்டி, காட்டூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே மழை பெய்து வருகிறது.அதே போல சேலம், திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தகவல் தெரிவித்திருந்த நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
ஆபிஸை சுடுகாடாக்கி விடுவேன் துணை ஆட்சியர்க்கு மிரட்டல் விடுத்த ஊழியரின் ஆடியோ வாட்ஸ் ஆப்-பில் தீயாக பரவி வருகிறது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர்க்கு வருவாய் ஆய்வாளர் செல்போனில் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகம் இயங்குகிறது.இவ்வலுவலகத்தில் துணை ஆட்சியராக சாந்தி என்பவர் பணியாற்றுகிறார். தாலுக அலுவலகங்கள் ஒவ்வொரு மாதம் 5ந்தேதிக்குள் கணக்கு விவரங்களை எல்லாம் சமர்பிக்க வேண்டும் […]
மேட்டூர் அணை நீர்வரத்து 61,000-லிருந்து 49,000 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு கடந்த இரு தினங்களாக மேட்டூர் அணைக்கு வந்து சேர ஆரம்பித்து உள்ளது. இதனால் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் அடியாக ஆரம்பத்தில் இருந்தது. இந்நிலையில் 91.45 அடி ஆக அணை நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 60,000 கன அடியிலிருந்து 49,000 கன அடியாக நீர்வரத்து […]
தாரமங்கலம் அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 15 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாரமங்கலம் அருகே 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து விசாரித்த போலீசார் ஏற்கனவே இரண்டு வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தாரமங்கலம் அம்பேத்கர் நகரில் வசித்து வரக்கூடிய 15 வயது சிறுமியை கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் வயிற்று […]
சேலத்தில் வீடுகளை சூழ்ந்துகொண்ட தண்ணீரால் மக்கள் அவதி. கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக சேலம் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஏரி குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து,விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. பல்வேறு இடங்களில் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடி உள்ளது, அம்மா உணவகத்திற்கு ஊழியர்கள் செல்ல முடியாத அளவிற்கு சாலை ஓரங்களிலும் வளாகத்திற்குள்ளும் […]