சேலம் கன்னங்குறிச்சி அண்ணாநகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், தனது மனைவி சித்ரா பெயரில் ஆன்லைனில் பிட் காயின் (சர்வதேச கரன்சி) வாங்கி, அதன்மூலம் வருவாய் ஈட்டும் தொழிலை செய்து வந்தார். அந்த வகையில் ஆன்லைன் மூலமாக பிட் காயின் நிறுவனத்தில் முதற்கட்டமாக ரூ.13 லட்சத்தை சக்திவேல் முதலீடு செய்தார். மேலும், தனது வருமானத்தை பெருக்க வேண்டி மீண்டும் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் முதலீடு செய்ததாக […]
சேலம்: மேட்டூர் அருகே உபரி நீர் கால்வாயில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை மீட்க தீயணைப்புத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சேலம் அரசு கலை கல்லூரி வளாகத்திலுள்ள கிணற்றிலிருந்து 10 வயதுள்ள சிறுவன் உடல் கண்டெடுப்பு; சிறுவன் யார், உயிரிழப்புக்கான காரணம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை.
உயிர் பலியை தடுக்க ஹெல்மேட் அணிய வலியுறுத்துவது அவசியம் தான்… ஆனால் சேலத்தில் இதற்காக காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கை என்பது பொதுமக்களை அச்சுறுத்துவதாக உள்ளது. உயிர் பலியை தடுப்பதற்காக சோதனை மேற்கொள்ளாமல் உயர் அதிகாரிகளின் உத்தரவிற்காக ( நாள் ஒன்றுக்கு 100 வழக்கு பதிவு செய்ய வேண்டும் ) போக்குவரத்து காவல்துறையினர், சாதாரண காவலர்களின் உதவியோடு பிரதான சாலைகளின் குறுக்கே நின்று குற்றவாளிகளை பிடிப்பது போன்று துரத்தி, துரத்தி பிடித்து வழக்கு பதிவு செய்வது வருத்தப்பட வைக்கிறது. […]