சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் வழங்குபவர்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தருவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் தாது வளங்களை வெட்டி எடுக்கும் தனியாருக்கு சாதகமான திட்டமா என்ற கேள்வி கற்பனையானது.சேலம் 8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம், திட்டத்திற்கு தமிழக அரசு உதவுகிறது. 8 வழிச்சாலை அமைந்தால் விபத்துகள் குறைந்து, உயிரிழப்பு குறையும்.8வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகும்.நில உரிமையாளர்களுக்கு தேவையான இழப்பீடு பெற்றுத் தரப்படும். நிலத்தை திட்டத்திற்கு […]
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பசுமை வழிச்சாலை திட்டம் தனிப்பட்ட நலனுக்கானது அல்ல என்று தெரிவித்துள்ளார். சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பசுமை வழிச்சாலை திட்டத்தில் தமிழக அரசு சர்வாதிகாரி போல் நடந்து கொள்வதாக எம்.பி. கனிமொழி பேசி இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், பொதுமக்களுக்காகவே சாலைத் திட்டம் கொண்டு வரப்படுவதாகவும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டியது அரசின் கடமை என்றும் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதியை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தையும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று அந்த இளம்பெண் வீட்டில் குளித்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் 3 பேர் குளித்து கொண்டிருந்த அந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் 3 பேரும் அங்கிருந்து […]
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து செவ்வாயன்று வாலிபர் சங்கத்தினர் கண்டன நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆகவே, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிபோட்டுள்ள எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய மோடி அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலைகளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக […]
சேலம் நெய்க்காரப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள அடையார் ஆனந்தபவன் உணவகத்தின் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில், வாடிக்கையாளர் உள்பட இருவர் உயிரிழந்தனர். சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள அடையார் ஆனந்தபவன் உணவகத்தின் ஆஸ்பெடாஸ் மேற்கூரை சரிந்து விழுந்தது. அப்போது உணவகத்தில் இருந்த ஊழியர்கள் உள்பட அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்து வெளியேறினர். இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் […]
சேலம் நெத்திமேட்டில் அரசின் விலையில்லா மடிக்கணினி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை காவல் உதவி ஆய்வாளர் மிரட்டியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நெத்திமேடு பகுதியில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் ஜெயராணி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் லேப்டாப் வழங்காததை கண்டித்து, +2 முடித்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், மாணவிகளை கைது செய்யப்போவதாகவும், கல்லூரியில் சேர முடியாதவாறு செய்துவிடுவதாகவும் ஒருமையில் பேசினார். இதனால், மாணவிகளுக்கும், காவல் உதவி ஆய்வாளருக்கும் கடும் […]
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத விவகாரத்தில் மத்திய – மாநில அரசுகளை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே டி.டி.வி.தினகரன் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்..,
தமிழ்நாட்டில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணி விவசாயிகளின் ஒப்புதலின்றி அடாவடித்தனமாக பவர்கிரிட் கார்ப்பரேசன் செய்து வருகிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு விவசாய அமைப்புகள் தலையிட்டு மின்கோபுரம் அமைக்கும் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக மின்துறை அமைச்சரிடம் இப்பிரச்சனை தொடர்பாக, பிப்ரவரி 22ந்தேதியும், மார்ச் 6ந் தேதியும் நேரில் பேசப்பட்டது. இத்திட்டத்தை கேபிள் மூலம் செயல்படுத்த வேண்டும். நிலத்திற்கான இழப்பீடு குறித்து விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும். அதுவரை மாநிலம் […]
சேலம் மாவட்டத்தில் உள்ள ஊத்துமலை வனத்தில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சேலம் மாநகரத்திற்கு அருகே உள்ள ஊத்துமலை வனத்தில், நேற்று மாலை திடீரென காட்டுத்தீ பரவியது. மலை மீதுள்ள முருகன் கோயிலுக்கு கிழக்கு பகுதியில் தீ பற்றி எரிந்து வருகிறது. மலையில் உள்ள காய்ந்த மரங்கள், செடி, கொடிகள் கொளுந்து விட்டு எரிவதால், அந்த பகுதிக்கு யாராலும் செல்ல முடியவில்லை. தீ எரிவதை அறிந்த சமூக காடுகள் கோட்ட வனச்சரகர் வைரம் தலைமையில் 20 […]
சேலம் : சேலம் மாவட்டத்தில் உள்ள வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையில் திடிரென பிடித்த தீ 4 மணி நேரமாக எரிந்து வருகின்றது. தீ பிடித்த உடன் தீ அணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த 50 தீயணைப்பு வீரர்கள் தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பத்துக்குப் பத்து அளவுக் கூட அந்த வீடு இருக்காது. இங்கிருந்து தான் டெல்லி ஜெவஹர்லால் பல்கலைக் கழகத்தின் ஆய்வு மாணவனாய்,ரோஹித் வெமுலாவின் உற்றத் தோழனாய் வாழ்ந்து பல்கலைக் கழகங்களின் சாதி வெறியை நமக்கு அடையாளம் காட்டிச் சென்றான் சேலத்தை சேர்ந்த முத்துக் கிருஷ்ணன். மஞ்சல் சேகரித்து விற்ற வருமானத்தில்,கண் விழித்து செக்ரூட்டி வேலைப் பார்த்த பெற்றோரின் வருமானத்தில் தான் முத்துக் கிருஷ்ணனும் அவரது மூன்று தங்கைகளும் எம்.பில்,பி.ஏ.தமிழ் இலக்கியம்,செவிலியர் என படித்தார்கள்.இவர்கள் மலையாய் நம்பிய முத்துக்கிருஷ்ணனின் உசுரு […]
சேலம் : ஏற்காடு, குண்டூர் ஆனைவாரி முட்டல், வழக்குப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மலையேற்ற பயிற்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வனப்பகுதியில் தீ வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மலை வாழ் மக்களை பாதுகாக்க கோரியும் ஆந்திராவில் படுகொலை செய்யபட்ட தமிழக மலைவாழ் மக்களுக்கு நீதி கேட்டும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மலைவாழ் மக்கள் இளைஞர் சங்கம் சார்பில் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.பாலா மற்றும் மலைவாழ் மக்கள் இளைஞர் சங்கத்தின் மாநில செயலாளர் பிரவீன்குமார் உள்ளிட்டு ஏராளமான வாலிபர்கள் பங்கெடுத்தனர்.
உடல் உறுப்புகள் விற்பனை சேலம் மணிபால் மருத்துவமனையில் நடைபெறுவதாக எழுந்த புகாரின் பேரில் அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை மேற்கொண்டனர். சேலத்தில் விபத்தில் மூளைச்சாவடைந்த இளைஞர் ஸ்ரீரங்கனின் குடும்பத்தினர் சிகிச்சைக் கட்டணமான 50 ஆயிரம் ரூபாயை செலுத்த முடியாமல் தவித்த நிலையில், அவரது உடல் உறுப்புகளுக்கு மணிபால் மருத்துவமனை நிர்வாகம் 2 லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ரோகிணி உத்தரவின் பேரில், சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் […]
சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி.பின்னர் அந்த ரூ.21.97 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்டும் பணியை தொடங்கிவைத்தார் பின்பு செய்தியாளர்களை சந்திப்பின் போது “போக்குவரத்து நெரிசலற்ற மாநகரமாக சேலம் மாநகரம் உருவாக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார் முதல்வர் பழனிசாமி.
சமூக அநீதியான நீட் தேர்வைக் கைவிடக் கோரி சேலத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஏ.கலியபெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.குழந்தைவேலு, அஇஜ மாதர் சங்க மாவட்ட தலைவர் டி.பரமேஸ்வரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் என்.பிரவீன்குமார் ஆகியோர் கண்டனவுரை நிகழ்த்தினர். சிபிஐஎம் மாநிலக்குழு உறுப்பினர் பி.தங்கவேலு, சேலம் வடக்கு மாநகர செயலாளர் எம்.முருகேசன், மேற்கு மாநகர […]
அண்ணா பல்கலைகழத்தை தொடர்ந்து சேலம் பெரியார் பல்கலைக்கழகமும் தங்களுடைய மாணவர்களுக்குக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 1ஆம் தேதி வெளியிடுகிறது. இந்த தேர்வு முடிவுகள் அனைத்தும் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் என பெரியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ரயில் பயணிகள் அதிகமாக செல்லும் மாநகரங்களின் ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது, சேலம் ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால், சேலம் ரயில் நிலையத்தில், 5 நடைமேடைகளிலும் இலவச வைஃபை வசதி ஏற்படுத்த நிர்வாகம் முடிவு செய்து இருந்தது. அதன் படி இன்று முதல் சேலம் வைஃபை வசதி செயல்படும் என நிர்வாகம் அறிவித்ததுள்ளது. source : dinasuvadu.com