பத்துக்குப் பத்து அளவுக் கூட அந்த வீடு இருக்காது. இங்கிருந்து தான் டெல்லி ஜெவஹர்லால் பல்கலைக் கழகத்தின் ஆய்வு மாணவனாய்,ரோஹித் வெமுலாவின் உற்றத் தோழனாய் வாழ்ந்து பல்கலைக் கழகங்களின் சாதி வெறியை நமக்கு அடையாளம் காட்டிச் சென்றான் சேலத்தை சேர்ந்த முத்துக் கிருஷ்ணன்.
மஞ்சல் சேகரித்து விற்ற வருமானத்தில்,கண் விழித்து செக்ரூட்டி வேலைப் பார்த்த பெற்றோரின் வருமானத்தில் தான் முத்துக் கிருஷ்ணனும் அவரது மூன்று தங்கைகளும் எம்.பில்,பி.ஏ.தமிழ் இலக்கியம்,செவிலியர் என படித்தார்கள்.இவர்கள் மலையாய் நம்பிய முத்துக்கிருஷ்ணனின் உசுரு தூக்குக் கயிரில் சுருக்கப்பட்ட போது இவர்களின் வாழ்வே இருண்டு போனது.
துக்கம் விசாரிக்கும் சாக்கில் வாக்கு சேகரிக்க வந்த ஜந்துக்கள் எல்லாம் ” உங்களுக்கு வேலை தருகிறேன்” என ஊடகங்களுக்கு முன்னால் முழங்கி பின்னால் இவர்களுக்கு கல்விக்கு தகுந்த அரசு வேலை தராமல் அலைகழித்து ரசித்தது. நேர் வாசல் வழியே அரசு சார்பில் மூன்று லட்ச ரூபாயை இழப்பீடாகக் கொடுத்து விட்டு கல்விக்காக வாங்கிய கடனை வங்கி மூலம் புற வாசல் வழியே பிடுங்கியிருக்கிறது மத்திய அரசு.மூன்று பெண்களோடு தவிக்கிறார்கள் முத்துக் கிருஷ்ணனின் பெற்றோர்.ஆனாலும் அவர்கள் கோருவது முத்துக் கிருஷ்ணன் கொலைக்கான நீதியையே…!
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…