சேலம் ஊத்துமலை வனத்தில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஊத்துமலை வனத்தில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சேலம் மாநகரத்திற்கு அருகே உள்ள ஊத்துமலை வனத்தில், நேற்று மாலை திடீரென காட்டுத்தீ பரவியது. மலை மீதுள்ள முருகன் கோயிலுக்கு கிழக்கு பகுதியில் தீ பற்றி எரிந்து வருகிறது.
மலையில் உள்ள காய்ந்த மரங்கள், செடி, கொடிகள் கொளுந்து விட்டு எரிவதால், அந்த பகுதிக்கு யாராலும் செல்ல முடியவில்லை. தீ எரிவதை அறிந்த சமூக காடுகள் கோட்ட வனச்சரகர் வைரம் தலைமையில் 20 வன ஊழியர்கள், கிராம வனக்குழுவினர் அப்பகுதிக்குச் சென்றனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.