சேலம் மாநகர காவல்துறையின் வறம்பு மீறிய செயல்களை வன்மையாக கண்டித்த பொதுமக்கள்..!
உயிர் பலியை தடுக்க ஹெல்மேட் அணிய வலியுறுத்துவது அவசியம் தான்…
ஆனால் சேலத்தில் இதற்காக காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கை என்பது பொதுமக்களை அச்சுறுத்துவதாக உள்ளது.
உயிர் பலியை தடுப்பதற்காக சோதனை மேற்கொள்ளாமல் உயர் அதிகாரிகளின் உத்தரவிற்காக ( நாள் ஒன்றுக்கு 100 வழக்கு பதிவு செய்ய வேண்டும் ) போக்குவரத்து காவல்துறையினர், சாதாரண காவலர்களின் உதவியோடு பிரதான சாலைகளின் குறுக்கே நின்று குற்றவாளிகளை பிடிப்பது போன்று துரத்தி, துரத்தி பிடித்து வழக்கு பதிவு செய்வது வருத்தப்பட வைக்கிறது.
இன்று காலை அண்ணா பூங்கா எதிரில் நின்று கொண்டிருந்த 10க்கும் மேற்பட்ட காவலர்கள் மேம்பாலத்தில் இருந்து வந்தவர்களை துரத்தி துரத்தி பிடித்து வழக்கு பதிவு செய்த காட்சி மிகவும் கண்டிக்க தக்கது.
துரத்தி, துரத்தி பிடித்ததில் பலர் காவலர்கள் முன்னிலையிலேயே விபத்திற்குள்ளானர்கள்.
( விபத்தை தடுக்க வேண்டியவர்களே விபத்தை ஏற்படுத்தியது தனி கதை )
இது போன்ற சோதனைகளை தவிர்க்க வேண்டும் என்பது பொதுவானவர்களின் கருத்தாக உள்ளது.