இயற்கை வளம், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு மிதிவண்டி பயணம்….!!
இயற்கை வளத்தை பாதுகாக்கவும், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தியும் உடுமலையில் இளைஞர் ஒருவர் 40 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் மிதிவண்டியில் பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா.இவர், இயற்கைவளத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தியும் சேலத்தில் இருந்து 40 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு மிதிவண்டி பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சேலத்தில் இருந்து தொடங்கிய இந்த மிதிவண்டி பயணத்தை, ஆந்திரா,உள்ளிட்ட மாநிலங்கள் வரை 20 ஆயிரம் கிலோ மீட்டர் வரை சென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தற்போது திருப்பூர் மாவட்டம் வந்த அவர், மிதிவண்டி பயணத்தின் நோக்கம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும், இந்த மிதிவண்டி பயணம் கர்நாடக சென்று கோவா வழியாக ஜம்மூ காஷ்மீர் சென்றடைந்து, அங்கிருந்து மீண்டும் சேலத்தில் சென்றடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.