சேலம் : தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் சாமானிய மக்களுக்கு குறிப்பிட்ட ரேஷன் கார்டுகள் பொறுத்து அரிசி (இலவசமாக), சர்க்கரை, துவரம் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் பொருட்கள் ஒருசில இடங்களில் சுகாதாரமில்லாமல், எடை குறைவாக விநியோகிக்கபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துகொண்டு இருக்கின்றன. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு தற்போது புதிய முயற்சியை கையாண்டுள்ளது. அதன்படி, ரேஷன் பொருட்களை எடைபோட்டு அதனை பாக்கெட்டுகளில் அடைத்து […]
சேலம் : அதிமுக ஆட்சி காலத்தில் சேலம் தலைவாசலில் கால்நடை மற்றும் விலங்கியல் அறிவியலுக்கான ஒருங்கிணைந்த ஆராய்ச்சி நிலையம் அமைக்க திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், திட்டம் திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை என எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியீட்டு விளக்கம் அளித்துள்ளார். அந்த […]
Raashii Khanna: நடிகை ராஷி கண்ணா தனது புதிய படத்தின் விளம்பர தோற்றத்தால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இயக்குனர்கள் சாகர் ஆம்ப்ரே மற்றும் புஷ்கர் ஓஜா இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படம் யோதா. READ MORE – யாரையும் அதை வச்சு ‘Judge’ பண்ணாதீங்க! நடிகை லாஸ்லியா ஆவேசம்!! இந்த படத்தில், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் திஷா பதானி மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இதில், சித்தார்த் மல்ஹோத்ராவின் காதலியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இந்த திரைப்படம் […]
சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு வாகன ஓட்டுனர்கள் சூதாட்டம் விளையாடி சிக்கியுள்ளனர். தடை செய்யப்பட்ட ரம்மி சூதாட்டத்தை ஆட்சியர் அலுவலகத்திலேயே வைத்து விளையாடி அரசு வாகன ஓட்டுனர்கள் சிக்கிய சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு வாகன ஓட்டுனர்கள் அலுவலக வளாகத்தில் கார் நிறுத்துமிடத்தில் சூதாட்டம் விளையாடி வந்துள்ளனர். விஷயம் அறிந்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தவுடன் சூதாட்டம் விளையாடி கொண்டிருந்த அரசு வாகன ஓட்டுநர்கள் தலைதெறிக்க ஓடியுள்ளனர். அவர்கள் […]
கர்நாடக வனப்பகுதியில் இருந்து தமிழக பகுதிக்குள் நுழைந்த காட்டுயானைகளை கட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் முயன்று வருகின்றனர். கர்நாடகா வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் மொத்தமாக வெளியேறி அந்த காட்டு யானைகள் தமிழக பகுதிக்குள் நுழைந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பதற்றத்தில் உள்ளனர். தமிழக பகுதியான ஓசூர், நாகமங்கலம் ஏரி பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முக்காட்டுள்ளன. தகவலறிந்து வந்த தமிழக வனத்துறை அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுத்து பட்டாசு வெடித்து யானைகளை மீண்டும் வனத்திற்குள் விரட்டி வருகின்றனர்.
சென்னை, கரூர், சேலம் மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், 3.14 கோடி பெண் வாக்காளர்கள், 3.03 கோடி ஆண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 7,758 பேர் உள்ளனர் என தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலை ஒப்பிடுகையில், சுமார் 17 .69 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் […]
எடப்பாடியில் அறநிலையத்துறை வசம் இருந்த இடத்தில் அமைக்கப்பட்ட உழவர் சந்தைக்கு சீல். சேலம் மாவட்டம் எடப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோயிலை சுற்றி அமைக்கப்பட்ட உழவர் சந்தைக்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உழவர் சந்தை அமைப்பதற்கான ரூ.93 லட்சம் வழங்கப்படவில்லை என வழக்கு பதவி செய்யப்பட்ட நிலையில், சந்தைக்கு சீல் வைக்க உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. ரூ.93 லட்சம் செலுத்தும் வரை உழவர் சந்தைக்கு சீல் வைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவியிடம் அத்துமீறிய புகாரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கைது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவி அளித்ததாக கூறப்படும் பாலியல் புகாரில், பொறுப்பு பதிவாளர் கோபி கைது செய்யப்பட்டுள்ளார். விடுமுறை தினத்தில் வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக வேதியியல் ஆராய்ச்சி மாணவி குற்றசாட்டியதாக கூறப்படுகிறது. மாணவியின் புகாரின்பேரில் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கோபி மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலத்தில் ஆடித் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. சேலம், கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் அறிவித்துள்ளார். சேலத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் சேலம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்வார்கள். இந்தாண்டுக்கான ஆடி திருவிழா வருகிற […]