பராமரிப்பு பணிகளுக்காக டிசம்பர் 31 வரையில் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. – ரயில்வே துறை. ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் அதன் தரத்தை பொறியாளர்கள் ஆய்வு செய்வார்கள். அதன் பிறகு அதில் பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதன் படி, தற்போது ரயில்வே பொறியாளர்கள் மற்றும் ஐஐடி வல்லுநர்கள் இணைந்து ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக டிசம்பர் 31 வரையில் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து […]
ராமேஸ்வரம், பாம்பன் பகுதி விசைப்படகுகளுக்கு நாளை மீன்பிடி அனுமதிசீட்டு வழங்கப்படாது என அறிவிப்பு. ராமேஸ்வரம், பாம்பன் பகுதி விசைப்படகுகளுக்கு நாளை மீன் பிடிக்க அனுமதியில்லை என்று தமிழக மீன்வளத்துறை அறிவித்துள்ளது. நாளை மீன்பிடி அனுமதிசீட்டு வழங்கப்படாது. கடலில் 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், மீன்பிடிக்க அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுப்படகு மீனவர்களும் நாளை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
ராமேஸ்வரம்:மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது. தமிழகத்தில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.ராமேஷ்வரத்திலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில்,நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர்,எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி 12 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளதாகவும், மேலும்,அவர்களது ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.தொடர்ந்து இலங்கை கடற்படை இவ்வாறு கைது நடவடிக்கையை மேற்கொள்வது தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. […]
ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 16 மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம்,மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இருந்து சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நிலையில்,நெடுந்தீவு அருகே ஒரு விசைப்படகில் மீனவர்கள் மீன்படித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படை நள்ளிரவில் கைது செய்தது. மொத்தம் 16 பேர்: அதைபோல்,தலைமன்னார் அருகே மற்றொரு விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.குறிப்பாக,எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி […]
கச்சதீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து 80 பக்தர்கள் இன்று கச்சத்தீவு செல்கின்றனர்.3 விசைப்படகுகள்,ஒரு நாட்டுப் படகில் இன்று காலை 9 மணிக்கு 80 பேரும் உரிய பாதுகாப்புடன் கச்சத்தீவு பயணம் மேற்கொள்கின்றனர். கச்சதீவில் உள்ள புனித அந்தோணியார் திருவிழா இன்று மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.அதன்படி, அந்தோணியார் உருவம் பொறித்த கொடியேற்றப்படவுள்ளது. அதன் பின்னர்,சிலுவைப்பாதை திருப்பலை மற்றும் அந்தோணியார் தேர்பவனி நடைபெறுகிறது.இதனைத் தொடர்ந்து,நாளை காலை 7 மணிக்கு திருப்பலி […]
ராமேஸ்வரம் மீனவர்கள் 11 ண்டகளாக நடத்தி வந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிப்பு. ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தங்கச்சிமடம் மீனவர்கள் 48 பேரையும், 10 விசைப்படகுகளையும் மீன்பிடி கலன்களுடன் இலங்கை கடற்படை கைது செய்திருந்தது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 48 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 10 நாட்களாக நடந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஆட்சியர் சங்கர்லால் குமாவத் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். […]
ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையினாரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக் கோரி மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த டிச.18 ஆம் தேதியன்று ராமேஸ்வரத்திலிருந்து 570 விசைப்படகுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் அனுமதி பெற்று மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குள் சென்றனர்.அவர்கள் கச்சத்தீவு அருகே இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது வந்த இலங்கை கடற்படையினர் 6 விசைப்படகுகளுடன் 43 மீனவர்களைச் சிறைபிடித்து […]
ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையினாரால் சிறைபிடிக்கப்பட்ட 55 மீனவர்களை விடுதலை செய்யக் கோரி மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாளை மறுநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த டிச.18 ஆம் தேதியன்று ராமேஸ்வரத்திலிருந்து 570 விசைப்படகுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் அனுமதி பெற்று மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குள் சென்றனர்.அவர்கள் கச்சத்தீவு அருகே இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது வந்த இலங்கை கடற்படையினர் 6 விசைப்படகுகளுடன் 43 […]
ராமேஸ்வர மீனவர்கள் இந்திய கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி தமிழக மீனவர்களை விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. ராமேஸ்வரத்திலிருந்து 750க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுடன் 4000க்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்திய கடலில் மீன்பிடிக்க சென்றனர். மீனவர்கள் தனுஷ்கோடி அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அப்போது ஜேசு அலங்காரம் என்ற மீனவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. மேலும் இலங்கை படையினர், தமிழக மீனவர்களை […]
ராமேஸ்வரம் மீனவர்கள் 1000 பேர் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டனர். எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருப்பதாகவும், உடனடியாக திரும்பிச் செல்லுமாறும் எச்சரிக்கை. ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஆயிரம் மீனவர்கள், 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கச்சத்தீவு அருகே இந்திய எல்லையையொட்டி உள்ள கடல் பகுதியில் அதிகாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், இது சர்வதேச கடல் எல்லை, எனவே மீன்பிடிக்க அனுமதி இல்லை, உடனே இங்கிருந்து செல்லுங்கள் என […]
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் ஆகிய பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் அனைத்தும் சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன. பாம்பன் பாலம் மற்றும் கடல் பகுதியில் அதிக அளவு பனிமூட்டம் காணப்பட்டதால் பாம்பன் பாலத்தில் செல்லக்கூடிய ரயில்கள் மற்றும் தீவுகளை சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
மதுரை-ராமேஸ்வரம் இடையே தினமும் கடைசி ரயில் மதுரையில் இருந்து மாலை 6.15-க்கும், ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 5.45 மணிக்கும் ரயில் இயக்கப்படுகிறது. முன்பு மதுரையில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கும் , ராமேஸ்வரத்தில் இருந்து நள்ளிரவு 12.05 மணிக்கும் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் பொதுமக்கள் மற்றும் பல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றுகொண்டு கடந்த 2013-ம் ஆண்டு முதல் மதுரையில் இருந்து மதியம் 12.15 மணிக்கும், ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 12.10க்கும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு […]