இராமநாதபுரம் மாவட்டத்துக்கு 13ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
இராமநாதபுரம் மாவட்டத்துக்கு 13ம் தேதி உள்ளூர் விடுமுறை.
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா ஜூன் மாதம் 13ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார். சந்தனக்கூடு திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
எர்வாடி சந்தனக்கூடு விழா என்பது எர்வாடி தர்காவில் சுல்தான் சையத் இப்ராஹிம் ஷஹீத் பாதுஷா ஓலியல்லாஹ்வின் ஆண்டு நினைவைக்கொண்டாடும் ஒரு திருவிழா ஆகும். இது இஸ்லாமிய மாதமான து-அல்-கியாதாவில் கொண்டாடப்படுகிறது.