துப்பாக்கி சுடும் தளத்தில் இருந்து குண்டுகள் வந்து விழுந்ததா என போலீசார் விசாரணை. பெரம்பலூர் மாவட்டம் ஈச்சங்காட்டில் வீட்டின் முன் உள்ள தண்ணீர் தொட்டில் துப்பாக்கி குண்டு வந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெருமாள் என்பவரது வீட்டின் தண்ணீர் தொட்டியிலும், புஷபா என்பவரது வீடு வாசலும் துப்பாக்கி குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாரணமங்கலம் பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் இருந்து குண்டுகள் வந்து விழுந்ததா என போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கசாவடியில் ஊழியர்கள் மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆதரவு தெரிவித்துளளார். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது திருமாந்துறை சுங்கச்சாவடி. இந்த சுங்க சாவடி தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. கடந்த மாத இறுதியில் இந்த தனியார் நிறுவனம் , சுங்க சாவடியில் வேலைபார்த்த சுமார் 30 பேரை முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்ததாக […]
பெரம்பலூர் அருகே கவுள்பாளையத்தில் செயல்படும் கல்குவாரியில் பாறை சரிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு. பெரம்பலூர் அருகே கவுள்பாளையத்தில் உள்ள கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கல்குவாரியில் இயந்திரம் மூலம் பாறைகளை அகற்றி கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குவாரி பணியில் பாறைகளை அகற்றியபோது ஏற்பட்ட விபத்தில் சுப்பிரமணி, வினோத் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், விபத்து ஏற்பட்ட கல்குவாரி அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வகுமாருக்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த மே மாதம் 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில்,இந்த பொதுத் தேர்வு முடிவுகளை தற்போது (ஜூன் 27-ஆம் தேதி) அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.அதன்படி,தேர்வர்கள் http://tnresults.nic.in & http://dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம்,தமிழகம்,புதுச்சேரியில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.07% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அந்த வகையில்,8,43,675 பேர் தேர்வு […]
பெரம்பலூரில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் கேனிபாளையத்தில் இடி மின்னல் தாக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மரத்தின் அடியில் அமர்ந்து இருந்த சின்னத்துரை, ராமர் ஆகியோர் உயிரிழந்த நிலையில், வெங்கடேஷ் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். மேலும் காரை கிராமத்தில் இடி மின்னல் தாக்கி குமார் என்பவரின் இரண்டு பசு மாடுகளும் உயிரிழந்துள்ளது. இடி மின்னல் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர்:மருதடிஈச்சங்காடு பகுதியில் சுப்பிரமணி என்பவரது வீட்டுக் கூரையின் மற்றொரு பகுதியில் மேலும் ஒரு துப்பாக்கிக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அருகே மருதடிஈச்சங்காடு கிராமத்திற்கு அருகே துப்பாக்கி சூடு பயிற்சி மையம் உள்ளது.அங்கு அவ்வ்வப்போது துப்பாக்கிசூடு பயிற்சி நடைபெற்று வரும் நிலையில்,நேற்று முன்தினம் அந்த மையத்தில் பயிற்சி நடைபெற்றபோது, சுப்பிரமணி என்பவரது வீட்டில் மேற்கூரையை துளைத்துக் கொண்டு துப்பாக்கி குண்டு ஒன்று வீட்டிற்குள் விழுந்தது. இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில்,துப்பாக்கிக் குண்டை கைப்பற்றி போலீசார் […]
பெரம்பலூர்:அரும்பாவூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக நகரச் செயலாளர் வினோத் என்பவர் கைது. பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே பூலாம்பாடியை சேர்ந்த வினோத் என்பவர் அதிமுக நகரச் செயலாளராக உள்ளார்.இவர் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கு அடிக்கடி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.மேலும்,செல்போனில் தொடர்பு கொண்டு அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்,நேற்று மாலை சாலையில் நடந்து சென்ற அந்த பெண்ணை […]
நாய் கடித்து உயிருக்கு போராடிய குரங்கிற்கு முதலுதவி அளித்து உதவிய இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டம் ஒதியம் எனும் கிராமத்தில் குரங்கு ஒன்றை தெரு நாய்கள் விரட்டி விரட்டி கண்டித்துள்ளது. இதனால் படுகாயமடைந்த குரங்கு மரத்தில் ஏறி அமர்ந்து அங்கேயே முடியாமல் படுத்துள்ளது. இதனை பார்த்த கார் டிரைவர் பிரபு என்பவர் மரக்கிளையில் இருந்த குரங்கை பத்திரமாக கீழே இறங்கி, கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளிக்க முடிவு செய் பின் தனது நண்பர்களுடன் […]
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. தருமபுரி மாவட்டம் அரூர், செல்லம்பட்டி, எட்டிப்பட்டி, காட்டூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே மழை பெய்து வருகிறது.அதே போல சேலம், திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தகவல் தெரிவித்திருந்த நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த உதவி ஆய்வாளரின் மொபட்-பைக் எடிஎம் கார்டு போன்றவற்றை திருடி போலீசார்க்கு தண்ணீர் காட்டிய சம்பவம் அரேங்கேறியுள்ளது. பெரம்பூரில் செம்பியம் போக்குவரத்து உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் பாலமுரளி ஆவார்.இவரும் காவலர் ஒருவரும் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வாகன சோதனையின் போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை மடக்கி பிடித்த ஆய்வாளர் இருவரும் மது போதையில் தள்ளாடி வந்தது தெரிந்தது. மதுக்குடித்த அளவினைஉறுதி செய்யும் கருவியை கொண்டு அவர்களிடம் […]
பாஸ்ட்ஃபுட் வாங்கி தாருங்கள், இல்லையென்றால் பட்டினி கிடப்பேன் என அடம் பிடித்த சிறுவனுக்கு பெரம்பலூரில் நிகழ்ந்த சோகத்தை பாருங்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சண்முகம் கீதா ஆகிய தம்பதிக்கு ஹரிகுமார் என்னும் மகன் ஒருவன் உள்ளார். சிறு வயது பையன் என்பதால் பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில், மற்ற உணவுகளை கொடுக்கும் பொழுது நான் சாப்பிட மாட்டேன் எனக்கு அந்த உணவு தான் வேண்டும் எனவும், அவ்வாறு […]
பெற்றோர்களுக்கான நிலத்தகராறால் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் மகன். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டமாந்துறை பூஞ்சோலை என்ற பகுதியை சேர்ந்த ஜோசப் அன்னமேரி என்பவரின் மகள்தான் பிரியா, இவருக்கு 26 வயதாகிறது. ஹோம் நர்சிங் துறையில் பணியாற்றி வந்த இவர், ஊரடங்கால் தற்பொழுது வீட்டில் இருக்கிறார். ஏற்கனவே இவர் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் குடும்பத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த செங்கோடன் மல்லிகா என்பவர் குடும்பத்திற்கும் நில சம்பந்தமான பிரச்சனை நீண்டகாலமாகவே இருந்து […]
செல்போன் இல்லாமையால் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள இயலாத 16 ஏழை மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பில் செல்போன்கள் வாங்கி கொடுத்த ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. எனவே மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைப்பெற்று வருகிறது. மொபைல், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்டவைகள் வாங்க இயலாமல் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாமல் பல மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த […]
பெரம்பலூரில் மறுஉத்தரவு வரும்வரை முழு பொதுமுடக்கம் நீட்டிக்கப்படும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள 8 கிமீ அளவுக்கு முழு பொதுமுடக்கத்தை இன்று வரை அம்மாவட்ட ஆட்சியர் […]
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், வெளியூர் சென்றவர்கள் மீண்டும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், பெரம்பலூர் பகுதியில் இருந்து 56 முதியவர்கள் காசிக்கு யாத்திரை சென்றுள்ளனர். ரயில் மூலமாக சென்ற நேரத்தில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டதால் அவர்களால் தமிழகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். […]
பெரம்பலூரில் தமிழக அரசின் திருமண உதவித்திட்டத்திற்கு பரிந்துரைக்க பெண்ணிடம் ரூ.2000 லஞ்சம் கேட்டதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து தாலிக்கு தங்கம் வாங்கும் திட்டத்திற்காக ரூ.2000 லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை அலுவலரை பெரம்பலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கையும், களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், எறைய சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் சதீஷ் என்பவருக்கு, அதே கிராமத்தை சேர்ந்த ஷாலினி என்ற […]
பெரம்பலூரில் தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் சரவணன் மற்றும் மனைவி அன்பரசி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த மனைவி, கிணற்றுக்குள் குழந்தையை போட்டுவிட்டு அவரும் தற்கொலை முயற்சி, குழந்தை உயிரிழந்தது, தாய் உயிர் தப்பினார். பெரம்பலூர் எம்.ஆர் நகரை சேர்ந்த கணவன் சரவணன் மற்றும் மனைவி அன்பரசி இருவரும் அங்குள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. அவ்வப்போது இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு […]
மொட்டை மாடியில் செல்லில் பேசிக்கொண்டிருக்கும் போது தவறி விழுந்தார். தாய் வீட்டில் நடந்த சோக சம்பவம். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணனின் மனைவி செல்வி ஆகிய இருவருக்கும் 8 மாத குழந்தை ஒன்று உள்ள நிலையில், புதுச்சேரிக்கு தாய் வீட்டுக்கு வந்துள்ளார். இவரது கணவர் திருப்பூரில் வேலை செய்து வாருகிறார்.கணவன் அங்கு இருப்பதால் 17ஆம் தேதி இரவு வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டு சரவணனுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார் செல்வி அப்போது நிலை தடுமாறி அங்கிருந்து விழுந்ததாகக் […]