உள்ளூர் செய்திகள்

சென்னை : கொசு விரட்டும் மருந்து இயந்திரத்தால் தீ விபத்து.? ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மூச்சுத்திணறி பலி.!

சென்னையை அடுத்த மணலி பகுதியில் எம்எம்டிஏ குறுக்கு தெருவில் வசிக்கும் ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர் உடையார் என்பவரது வீட்டில் கொசு விரட்டியால் தீ விபத்து ஏற்பட்டு 3 குழந்தைகள், ஒரு மூதாட்டி என 4 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உடையார் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்ததால், அவரை கவனித்து கொள்ள அவரது மனைவி உடன் இருந்துள்ளார். இதனால் குழந்தைகளை பார்த்துக்கொள்ள பாட்டி சந்தான லட்சுமி வீட்டில் இருந்துள்ளார். நேற்று இரவு படுக்கையில், கொசு விரட்டி […]

4 Min Read
Died

கோயம்பேடு சந்தையை வேறு இடத்திற்கு மாற்றமா..? – சிஎம்டிஏ விளக்கம்

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் , சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் காய்-கனி சந்தையை முழுமையாகவோ, பகுதியாகவோ திருமழிசைக்கு மாற்றி விட்டு, சந்தையை வணிக மையமாக மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னை, கோயம்பேடு சந்தையை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம் இல்லை. எதிர்கால வளர்ச்சி, வாகன நெரிசலை கருத்தில் கொண்டே முதற்கட்ட ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என விளக்கமளித்துள்ளது.

2 Min Read
Tomato

இந்த மாவட்டத்தில் 8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பு..!

தென்காசி மாவட்டத்தில் புலித்தேவரின் 308-வது பிறந்தநாள் மற்றும் ஒண்டிவீரனின் 252 வது வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர். இதனையடுத்து, தென்காசி மாவட்டத்தில் 8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒண்டிவீரன் வீரவணக்க நாள் நிகழ்ச்சிக்காக இன்று முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]

2 Min Read
144 section

பிச்சை எடுக்க குழந்தைகளை வாடகைக்கு எடுக்கவில்லை – ஆட்சியர் விளக்கம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவது உண்டு. இந்த நிலையில் இந்த கூட்டத்தை பயன்டுத்தி, குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளன்ர். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் 70-க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து விசாரித்த போது ரூ.500 குழந்தைகளை வாடகைக்கு வாங்கி பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார் விளக்கமளித்தார். அவர் […]

3 Min Read
child

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு டெண்டர் வெளியீடு… விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும்.!

மதுரை தோப்பூர் பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் மோடி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை அதன் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் இருந்து வருகிறது. இது குறித்து மாநில அரசுகள் அவ்வபோது மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு அப்போது 2600 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் 82% தொகையை ஜப்பான் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து […]

3 Min Read
Madurai AIIMS

தூண்டில் வளைவு பாலம் அமைக்கக்கோரி 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் – பேச்சுவார்த்தைக்கு அழைப்பு..!

திருச்செந்தூர் அமலிநகரில் சுமார் 1000 மீனவ குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், 200 நாட்டுப்படைகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த மீனவர்கள், தூண்டில் வளைவு அமைக்க கோரி கடந்த பத்து நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் குறித்து மீனவர்கள் கூறுவையில், கடல் சீற்றத்தின் காரணமாக மண்ணரிப்பு ஏற்படுவதால், மீன்பிடி தொழிலுக்கு சென்று விட்டு மீண்டும் கரைக்கு திரும்பும் போது படகுகளில் நிறுத்துவதில் சிரமம் ஏற்படுவதாகவும், இங்கு தூண்டில் வளைவுபாலம் […]

3 Min Read
strike

நெல்லை : 3 சிறுவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சோகம்.! இரங்கல் கூறி நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர்.!

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நவலடி பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பங்கேற்க வந்த பள்ளி சிறுவர்கள் 4 பேர் நேற்று இரவு அருகில் உள்ள கடலில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது கடல் அலை இழுத்து சென்றதில் ஆகாஷ், ராகுல், முகேஷ் ஆகிய மூவரும் கடலில் மூழ்கியுள்ளனர். மீதம் உள்ள ஒரு மாணவன் மட்டும் கரை சேர்ந்துள்ளான். கடலில் இழுத்து செல்லப்பட்ட மீதம் உள்ள சிறுவர்களை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சபாநாயகர் அப்பாவு நேரில் […]

3 Min Read
Tamilnadu cm mk stalin

சோகம்…! தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் விபத்தினால் 9 பேர் பலி!

தமிழ்நாட்டில் இன்று 4 வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உவரி கடலில் குளித்துக்கொண்டிருந்த 3 பள்ளி மாணவர்கள் நேற்று மாயமான நிலையில், இன்று உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உவரி கடலில் நேற்று குளிக்க சென்ற போது, மாயமான ஆகாஷ், ராகுல், முகேஷ் ஆகியோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்த நிலையில், மூன்று பேரின் உடல்களும் இன்று கரை ஒதுங்கின. ஒரே நேரத்தில் […]

3 Min Read
Bus Accident

இன்று மாலை மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு 3 நாள் பயணமாக இன்று மாலை மதுரை செல்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். மதுரையில் பிரபல பின்னணி பாடகர் T.M சௌந்தரராஜன் திருவுருவச் சிலை திறந்து வைக்கிறார். பின்னர், மதுரையில் உள்ள தனியார் உணவு விடுதியில் இரவு தங்குகிறார். இதனை தொடர்ந்து, நாளை காலை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் செல்கிறார் முதலமைச்சர் வருகையையொட்டி மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் தென் மண்டல ஐஜி தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. […]

2 Min Read
Tamilnadu CM MK Stalin

தீவிரவாதிகளை கண்காணிக்கும் உளவுப்பிரிவு போல சாதிய வன்முறையை தடுக்க தனிப்பிரிவு.! திருமாவளவன் பேட்டி.!

சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தையே பரபரப்பாகிய சாதிய வன்முறை சம்பவம் தான் நாங்குநேரியில் பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கையை சக மாணவர் கும்பல் வெட்டிய சம்பவம். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன. தாக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது தங்கை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் மாணவர் மற்றும் மாணவரின் தங்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அதற்கு […]

6 Min Read
VCK Leader Thirumavalavan

#BREAKING : நாங்குநேரி சென்று கருத்துக்கள் கேட்கப்படும் – நீதியரசர் சந்துரு

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பள்ளி மாணவன் சின்னத்துரை மற்றும் அவனது தங்கை இருவரும் சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் வெட்டப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய ஒரு முக்கியமானப் பிரச்சினை என்பதால், இதில், அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் […]

3 Min Read
chandru

உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீட் தோல்வியால் மாணவரும், அந்த சோகத்தில் அவரது தந்தையும் தற்கொலை செய்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் வயது 19, நீட் தேர்வில் தொடர் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், மகன் தற்கொலை செய்து கொண்ட சோகம் தாங்காமல், நேற்றிரவு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட தந்தை – மகனுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டு இருக்கிறார். […]

5 Min Read
mk stalin

சென்னையில் விடிய விடிய மழை: பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

சென்னையில் இடி, மின்னலுடன் மழை பெய்த நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் விடிய விடிய மழை பெய்த நிலையில், அம்பத்தூர், பாடி, கொரட்டூர், கள்ளிகுப்பம். மதுரவாயல், போரூர், ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, வானகரம், ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தற்போதும், மழை பெய்து கொண்டிருக்கிறத, இதனால் விடுமுறை அளிக்கப்படுமா என்று […]

2 Min Read
School Leave

உணவு என்பது தனிப்பட்ட உரிமை.! ஆளுநர் ரவியின் கருத்துக்கு அமைச்சர் ஏ.வ.வேலு பதிலடி.!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று இருந்தார். கிரிவலப்பாதை சுற்றிவந்த அவர் கூறுகையில், கிரிவலப்பாதையில் இருக்கும் அசைவ உணவகங்களை அகற்ற வேண்டும் என கூறியிருந்தார். ஆளுநரின் கருத்துக்கு பலவேறு தரப்பினர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் இன்று திருவண்ணாமலையில் அமைச்சர் ஏ.வ.வேலு செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில், உணவு என்பது தனிநபர் உரிமை. எதனை சாப்பிட வேண்டும் சாப்பிட கூடாது என மக்களுக்கு அரசு உத்தரவிட முடியாது. பௌர்ணமி நாட்களில் கிரிவலப்பாதையில் உள்ள […]

3 Min Read
Tamilnadu Governor RN Ravi - Minister EV Velu

சுதந்திர தினம் 2023 – சென்னையில் 9ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையில் 9,000 காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு வருகிற 15ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று 76வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினவிழா பேருரையாற்றுகிறார். அதன்பேரில், சுதந்திரன தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கொண்டு 5 அடுக்கு பாதுகாப்பு […]

3 Min Read
Independence Day 2023

கோவையில் பரபரப்பு..! திமுக பெண் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு.!

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி ஊராட்சி மன்ற 3வது வார்டு கவுன்சிலராக பொறுப்பில் இருப்பவர் திமுகவை சேர்ந்த சித்ரா. இவர் அவ்வை நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு 10.30 மணியளவில், அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் திமுக பெண் கவுன்சிலர் சித்ரா, கணவர் ரவி, மற்றும் மகன் என 3 பேரையும் அந்த கும்பல் வெட்டியுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பல் உடனடியாக அங்கிருந்து தப்பியோடிவிட்டது. அரிவாள் வெட்டு பட்ட 3 பேரும் மருத்துவமனையில் […]

2 Min Read
DMK Counsilor on attack in coimbatore

நாங்குநேரி சம்பவம் : 6 பள்ளி மாணவர்களை அடுத்து மேலும் ஒருவர் கைது.!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் முனியாண்டி என்பவரது மகன் சின்னதுரை (வயது 17) வள்ளியூரில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவரது மகள் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் சின்னதுரை படிக்கும் பள்ளியில் பயிலும் சில சக மாணவர்கள் அவர் மீது சாதிய ரீதியாக பாகுபாடு காட்டி துன்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த சின்னத்துரை பள்ளி செல்ல மறுத்து வீட்டில் இருந்துள்ளார். இந்த விவரம் அறிந்த ஆசிரியர் சாதிய ரீதியில் பாகுபாடு காட்டிய சக மாணவர்களை […]

4 Min Read
Arrest

கோவை மாவட்டத்திற்கு 29-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி, ஓணம் பண்டிகையையொட்டி,  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு வரும் ஆக.29 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் செப்டம்பர் 2 ஆம் தேதி சனிக்கிழமை பணிநாளாக செயல்படும் என கோவை மாவட்ட ஆட்சியர்  அறிவித்துள்ளார்.

1 Min Read
june holiday

#BREAKING : பட்டாசு குடோனை ஆய்வு செய்த வெடித்த பட்டாசுகள்..! அதிகாரிகள் காயம்..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, அங்கு செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில், 9 பேர்  உயிரிழந்தனர். இதில் உணவகத்தில் உள்ள சிலிண்டர் கசிந்ததன் காரணமாக, அருகிலிருந்த பட்டாசுக்கடையிலும் தீப்பிடித்து வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இன்று பட்டாசு குடோனை மாவட்ட வருவாய் அலுவலர், தாசில்தார் மற்றும் பட்டாசு குழு மேலாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திடீரென்று அங்கு பட்டாசுகள் […]

2 Min Read
CrackerGoodownFire

அனுமதி இல்லை.! விருதுநகர் பாஜக அலுவலகத்தில் இருந்து பாரத மாதா சிலை அகற்றம்..

ஒரு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சாலை சந்திப்பு அருகே பாஜக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு ஐந்தடி உயரத்தில் பாரதமாதா சிலை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சிலையை நேற்று நள்ளிரவு காவல்துறையினர் உதவியுடன் வருவாய்த்துறையினர் அகற்றி உள்ளனர் அலுவலகம் முன்பு பாரதமாதா சிலை வைப்பதற்கு அரசாங்கத்திடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை என கூறப்படுகிறது.இதன் காரணமாக பாஜகவினர் வைத்திருந்த பாரத மாதா சிலை அகற்றப்பட்டு வருவாய் துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து […]

3 Min Read
Viruthunagar BJP Offfice