சென்னை : சென்னை சாலையை ஆக்கிரமித்துள்ள ‘Zero is Good’ எனும் பூஜ்ஜியம் நல்லது என்ற விளம்பர பதாகைகள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த பதாகைகள் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சென்னை போக்குவரத்து காவலர்களால் அமைக்கப்ட்டுள்ளது. சென்னை மக்கள் இந்த பதாகைகள் பற்றி பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். கிட்டத்தட்ட போக்குவரத்து காவலர்கள் இந்த பதாகைகளை வைத்த நோக்கத்தை பிரதிபலிக்கும் வண்ணம் பொதுமக்களின் கருத்துக்கள் […]
சென்னை : தமிழகத்தில் மின்சார வாரியம் அதிகாரப்பூர்வமாக நாளை (ஆகஸ்ட்-5) சென்னை மாவட்டத்தில் உள்ள வடசென்னையில் அமைந்துள்ள ஒரு சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவித்துள்ளனர். அதன்படி அது எந்தெந்த பகுதிகள் என்றும், மின்தடை ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அதற்கான நேரத்தையும் பற்றி பார்க்கலாம். வடசென்னை – எண்ணூர் கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுகுபம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர்., சிவன்படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்விஎம் நகர், VOC நகர், உலகநாதபுரம், […]
கோயம்புத்தூர் : நாளை (ஆகஸ்ட் 05/08/ 2024) கோவை மாவட்டத்தில் எந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை ஏற்படும் என்பது குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதில், உங்கள் வீடு இருக்கும் பகுதி இருக்கிறதா? என்று பார்த்து அறிந்து கொள்ளுங்கள். வீட்டுக்கு தேவையான அனைத்திற்கும் முன் எச்சரிக்கைகாக செய்து கொள்ளுங்கள். வடக்கு கோவை – சரவணம்பட்டி : அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்ரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயப்ரா […]
ஈரோடு : பவானி சாகர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வறட்சி உள்ள நீர் நிலைகளுக்கு செல்லும் வகையில், அங்குள்ள விவசாயிகள் பயன்பெற அறிமுகம் செய்யப்பட்ட திட்டமே அத்திக்கடவு – அவிநாசி திட்டம். தொடர் உண்ணாவிரத போராட்டம் : இந்த திட்டத்தை விரைவில் செய்லபடுத்தி விடுவோம் என அவ்வப்போது தமிழகஅமைச்சர்கள் கூறி வருவதாகவும், ஆனால் இன்னும் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை அரசு செயல்படுத்தவில்லை என்று கூறியும் பாஜக […]
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுய உதவி குழுக்களுக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கும் பணிகளுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது தற்காலிக பணியாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளவர்கள் விண்ணப்பிக்க எதுவாக பணியின் விவரங்கள் குறித்து தற்போது மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கூடுகை மற்றும் கூட்டாண்மை பிரிவின் கீழ் வட்டார வள வல்லுநர் (BRP) மூலம் வட்டார அளவிலான கூட்டமைப்புகள் […]
திருச்சி : காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்ததன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. அதே போல திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் ஆறும் நிரம்பி வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக திருச்சி – கொள்ளிடம் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானத்தில் சேதம் குறித்து விளக்கம். கொள்ளிடம் ஆற்றின் நேப்பியர் பாலம் அருகே மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க சிறிய அளவில் தடுப்பணை கட்டப்பட்டது. அதுவும் […]
வேலூர் : நாளை (ஆகஸ்ட் 03/08/ 2024) வேலூர் மாவட்டத்தில் எந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை ஏற்படும் என்பது குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதில், உங்கள் பகுதி இருக்கிறதா? என்று பார்த்து அறிந்து கொள்ளுங்கள். சோளிங்கர் பானாவரம், கரிகால், வி.ஜி.புரம், தளிகல், எறும்பி, கொண்டபாளையம், கரிகால் மற்றும் சோளிங்கர் சுற்றுவட்டாரப் பகுதிகள் மேல்வெங்கடபுரம் கொடைக்கல், ரேனாண்டி, ஜம்புகுளம், மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், பாலகிருஷ்ணாபுரம், சூரை மற்றும் எம்.வி.புரம் சுற்றுவட்டாரப் பகுதிகள் முகுந்தராயபுரம் நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம் […]
சென்னை : நாளை (ஆகஸ்ட் 03-08-2024) சென்னை மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்ப்பட உள்ளது என்பதற்கான முழு விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நாளை சென்னயில் உள்ள வடசென்னை பகுதியில் அமைந்துள்ள ஒரு சில இடங்களில் மட்டும் மின்தடை ஏற்பட உள்ளது என மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், மின்தடை ஏற்படுத்துவதற்கான காரணங்களை பற்றியும் பார்க்கலாம். வடசென்னை – தொண்டியார்பேட்டை : திருச்சின்னக்குப்பம் மெயின் ரோடு, ராஜாக்கடை, அப்பர்சாமி கோயில் தெரு, […]
மதுரை : நாளை ஆகஸ்ட் 03-ம் தேதி மதுரை மாவட்டத்தில் எந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை ஏற்படும் என்பது குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதில், உங்கள் பகுதி இருக்கிறதா? என்று அறிந்து கொள்ளுங்கள் மக்களே. மதுரையில் உள்ள முக்கியமான பகுதியில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது. மின்தடை ஏற்படுத்துவதற்கான காரணங்களை பற்றியும் பார்க்கலாம். மதுரை மெட்ரோ : விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலாநகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, […]
சென்னை : சென்னையில் அரசு கலைத்துறை சார்பில் ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை நாளை முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஓவியம் மற்றும் கலை வல்லுனர்களின் படைப்புகள் ஆகியவை விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பில், கலை பண்பாட்டுத் துறை மற்றும் சென்னை அரசு கவின்கலைக் கல்லூரி சார்பில் தமிழக ஓவியச் சிற்பக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதரம் மேம்படும் வகையில் “சென்னையில் […]
கன்னியாகுமரி : தமிழக மின்சாரவாரியம் நாளை ஆகஸ்ட் 02/08/2024 கன்னியாகுமரியில் பல இடங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்புபணி காரணமாக நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள். நாகர்கோவில் பெருவிளை, ஆசாரிபள்ளம், பார்வதிபுரம், அலம்பரை ஆகிய இடங்களில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். தடிக்காரன்கோணம் கிரிபாரி, கடுக்கரை, பூதபாண்டி காலை ஆகிய பகுதிகளில் 8 மணி முதல் […]
சென்னை : நாளை (ஆகஸ்ட் 02-08-2024) சென்னை மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான முழு விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். சென்னயில் உள்ள வடசென்னை பகுதியில் அமைந்துள்ள ஒரு சில இடங்களில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது. மின்தடை ஏற்படுத்துவதற்கான காரணங்களை பற்றியும் பார்க்கலாம். வட சென்னை வீரராகவன் சாலை, NT சாலை, ஃபிஷிட் துறைமுகத்தின் ஒரு பகுதி, செரியன் நகரில் 1 முதல் 4 வது […]
சேலம் : தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் சாமானிய மக்களுக்கு குறிப்பிட்ட ரேஷன் கார்டுகள் பொறுத்து அரிசி (இலவசமாக), சர்க்கரை, துவரம் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் பொருட்கள் ஒருசில இடங்களில் சுகாதாரமில்லாமல், எடை குறைவாக விநியோகிக்கபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துகொண்டு இருக்கின்றன. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு தற்போது புதிய முயற்சியை கையாண்டுள்ளது. அதன்படி, ரேஷன் பொருட்களை எடைபோட்டு அதனை பாக்கெட்டுகளில் அடைத்து […]
சென்னை: கடந்த 2017இல் அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் தமிழக சட்டப்பேரவைக்குள் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை எடுத்து சென்றனர். தமிழகத்தில் புகையிலை, குட்கா பயன்பாடு அதிகரித்துள்ளது எனும் குற்றசாட்டை தமிழக சட்டப்பேரவையில் குறிப்பிட குட்கா கொண்டுசெல்லப்பட்டதாக கூறினர். சட்டப்பேரவையில் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு சென்றதாக அப்போதைய சட்டமன்ற உரிமை மீட்பு குழு , மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் பதில் அளிக்க வேண்டும் என […]
சேலம் : அதிமுக ஆட்சி காலத்தில் சேலம் தலைவாசலில் கால்நடை மற்றும் விலங்கியல் அறிவியலுக்கான ஒருங்கிணைந்த ஆராய்ச்சி நிலையம் அமைக்க திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், திட்டம் திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை என எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியீட்டு விளக்கம் அளித்துள்ளார். அந்த […]
மதுரை: மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கப்பலூர் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் கடந்த 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நடைமுறையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக நேற்று தமிழக அரசும் ஓர் செய்தி குறிப்பை வெளியிட்டு இருந்தது. அதில், கப்பலூர் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள உள்ளூர் மக்கள் முன்வைத்த கோரிக்கை குறித்து தமிழக […]
சென்னை: கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது நடந்த வன்முறையில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரித்து முடித்து வைத்திருந்தது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்டு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. […]
சென்னை : மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த 27ஆம் தேதி சென்னையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் சென்று அங்கிருந்த்து கடல்வழியாக இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்த உள்ளதாக மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி சென்னை கிளாம்பாக்கத்தில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அவர் பெயர் பைசல் ரகுமான் என்பதும், அவரிடம் […]
சென்னை : தமிழகத்தில் இயங்கும் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கடுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. மொத்தம் 450க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இணைப்பில் உள்ளது. இந்த இணைப்பை பெறுவது தொடர்பாக பல்வேறு கல்லூரிகள் சட்டவிரோதமாக பேராசியர்கள் கணக்கு காட்டி வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக தன்னார்வ அமைப்பான அறப்போர் இயக்கம் முன்னதாக நடத்திய ஆய்வறிக்கையில் தமிழகத்தில் உள்ள 224 தனியார் சுயநிதி கல்லூரிகளில் சுமார் 350க்க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், வெவ்வேறு காலகட்ட போட்டோக்கள், […]
கோவை : அண்மையில் நாடாளுமன்றத்தில் நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது . இதில், பாஜக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களான பீகார் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில், தமிழ்நாடு, கேரளா, டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கூடுதல் நிதி, சிறப்பு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது எதிர்க்கட்சிகள் மத்தியில் விமர்சனங்களை பெற்றது. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் இல்லை என இன்று திமுக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. […]