காஞ்சிபுரம், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் ஆய்ந்து ஓய்ந்த பிறகும் அதன் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது வடதமிழகத்தில் அங்கங்கே மழைபெய்து வந்ததால், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இதனால்ஆரம்பகட்டத்தில் 100 கனஅடி நீர் வீதம் திறக்கப்பட்டு தற்போது அது அதிகரித்து வருகிறது . அதன்படி, தற்போது காஞ்சிபுரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் 1000கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]
கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்று, ராணிப்பேட்டையில் மாவட்டத்தில் கனமழை காரணமாக நெமிலி மற்றும் அரக்கோணம் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மற்றும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கனமழை காரணமாக திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு, காஞ்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு […]
விழுப்புரத்தில் ஆட்டு கொட்டகையின் மீது புளியமரம் விழுந்ததால், 10 ஆடுகள் உயிரிழப்பு. நேற்று மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. மேலும் அதிக காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே ஆலந்தூரில் பச்சையப்பன் என்பருக்கு சொந்தமான ஆட்டு கொட்டகையின் மீது புளியமரம் ஒன்று விழுந்துள்ளது. இதனால் 10 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது.
மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் இன்று 19 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு. மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் இரண்டாவது நாளாக இன்று விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து புறப்படும் 11 விமானங்கள் மற்றும் சென்னைக்கு வரும் 8 விமானங்கள் உட்பட 19 விமானங்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயலால், முறிந்து மரங்களை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று ஒருநாள் […]
தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. – அமைச்சர் சேகர் பாபு தகவல். வங்கக்கடலில் உருவாகியிருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கரையை கடந்தது. மாமல்லபுரத்தில் கரையை கடக்கையில் புயல் காற்று வீசியதன் காரணமாக பல்வேறு மரங்கள் விழுந்தன. புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் காற்றின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் 400க்கும் மேற்பட்ட மரங்கள் பல பகுதிகளில் முறிந்து விழுந்துள்ளன. மேலும், பல இடங்கள் புயலால் சேதமடைந்துள்ளது. இந்த […]
சென்னை, மடிப்பாக்கம், ராம்நகரில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு. சென்னை, மடிப்பாக்கம், ராம்நகரில் மின் வயர் அறுந்து கிடந்துள்ளது. இந்த நிலையில், இந்த வயரை லட்சுமி(45), ராஜேந்திரன்(25) ஆகிய இருவரும் மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட தென் சென்னை பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். வங்கக்கடலில் உருவாகியிருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கரையை கடந்தது. மாமல்லபுரத்தில் கரையை கடக்கையில் புயல் காற்று வீசியதன் காரணமாக பல்வேறு மரங்கள் வீழ்ந்தன. புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் காற்றின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் 300க்கும் மேற்பட்ட மரங்கள் பல பகுதிகளில் முறிந்து விழுந்துள்ளன. மேலும், பல இடங்கள் புயலால் சேதமடைந்துள்ளது. இந்த நிலையில், மாண்டஸ் […]
ஏற்கனவே 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 16 விமானங்கள் ரத்து. தமிழ்நாட்டில் மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் 27 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது சென்னையில் மேலும் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 72 இருக்கைகள் கொண்ட ஏடிஆர் என்னும் சிறிய வகை விமானங்கள் தான் ரத்து செய்யபட்டுள்ளது. தூத்துக்குடி, மைசூரு, கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூரு, திருச்சி, மதுரை […]
மாண்டஸ் புயல் மற்றும் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு. தமிழ்நாட்டில் மாண்டஸ் புயல் எதிரொலியால் 27 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், மாண்டஸ் புயல் மற்றும் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, […]
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ளது. கரையோரத்தில் உள்ள 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்து வருவதால் பெரும்பாலான வடதமிழக பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருகிறது. அதன் முழு கொள்ளளவான 24 அடியில் , 20 அடியை தூண்டியுள்ளது. 2,695 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. மேலும் மழை […]
மாண்டஸ் புயலின் தாக்கத்தை பொறுத்து பாதுகாப்பு தேவை இருப்பின் இரவு நேரத்தில் ரயில்கள் தாமதமாக புறப்படும். – தென்னக ரயில்வே. மாண்டஸ் புயல் இன்றிரவு கரையை கடக்கும் என்பதால் வடதமிழகத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்று 6 மாவட்டங்களில் இரவு நேர பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன் பிறகு புயலின் தாக்கம் உள்ள பகுதிகளில் மட்டும் பேருந்து சேவை நிறுத்தப்படும் எனவும் மற்ற பகுதிகளில் சேவை வழக்கம்போல இருக்கும் […]
அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக செங்கல்பட்டு பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு. வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள தீவிர புயல் மாண்டஸ் வலுவிழந்து, சாதாரண புயலாக மாறியுள்ளது. இந்த மாண்டஸ் புயல் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. காரைக்காலில் இருந்து 180 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 260 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்றிரவு முதல் நாளை காலை வரை மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும். மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் […]
வங்கக்கடலில் தீவிர புயலாக நிலவி வந்த மாண்டஸ், புயலாக வலுவிழந்தது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள தீவிர புயல் மாண்டஸ் வலுகுறைந்து, சாதாரண புயலாக மாறியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் காரைக்காலில் இருந்து 180 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 260 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் தீவிர புயலாக நிலவி வந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்த நிலையில், புயல் […]
பள்ளி மற்றும் அலுவலக நேரத்தில் காலை மற்றும் மாலையில் குப்பை லாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. காலை பள்ளி அலுவலக நேரத்திலும், மாலையில் அதே போல நேரத்திலும் சென்னையில் குப்பை லாரிகளை இயக்குவதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போக்குவரத்து சிரமம் ஏற்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனை குறித்து ஆனந்த் என்பவர் அந்த மனுவை சென்னை உய்ரநீதிமன்றத்தில் அளித்துள்ளார். இதனால், பள்ளி மற்றும் அலுவலக நேரத்தில் காலை […]
அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல். சென்னையில் மாண்டஸ் புயலால் காற்றுடன் மழை பெய்வதால் அவசியமின்றி வாகன ஓட்டிகள் வெளியே வர வேண்டாம் என போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. புயல் காரணமாக, மிக மிக அவசியமான காரணங்களுக்கு மட்டுமே பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தற்போது வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இன்று இரவு புயல் கரையினை கடக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் வங்ககடலில் புயல் உருவாகியுள்ள காரணத்தால் தமிழக கடலோர மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழையானது தென் தமிழகம் பகுதியில் அங்கங்கே பெய்து வருகிறது. மேலும் […]
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து 7 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தற்போது கரையை கடந்து வருவதால் சென்னை உள்ளிட்ட வடதமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், புயல் காரணமாக பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால், சென்னை விமான நிலையத்தில் இருந்து 7 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதில், கொழும்பு, கடப்பா, தூத்துக்குடி, மும்பை ஆகிய ஊர்களுக்கு […]
மாண்டஸ் புயல் கரையை நெருங்கி வருவதால், தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் தமிழகத்தை நெருங்கி வருவதால் இன்று 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மாண்டஸ் புயல் கரையை நெருங்கி வருவதால், தமிழகத்தின் செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பிஅய்க்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. […]
கடல் சீற்றத்தால், மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளது. மாண்டஸ் புயல் எதிரொலியால் சென்னை மெரினா கடற்கரை சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் சீற்றத்தால், மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளது. மெரினா, காசிமேடு கடல் பகுதியில் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது. மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
கடலூரில் தரைக்காற்று வீசும் வேகம் அதிகரித்துள்ளது. அங்கு கடலோர பகுதிகளில் மணிக்கு சுமார் 60கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது. சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 270 கி.மீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. காரைக்காலில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 200 கி.மீ தொலையில் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 13 கி.மீ வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் அடுத்த 3 மணி நேரத்தில் சாதாரண […]