மாண்டஸ் புயலில் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாலம் நாளை மீண்டும் திறக்கப்படும் என சென்னை மாநகர ஆணையர் உறுதியளித்தார். அன்மையில் வங்கக்கடலில் உருவாகி மாமல்லபுரம் கடற்கரையில் கரையை கடந்த மாண்டஸ் புயல் காரணமாக வீசிய பலத்த காற்றின் காரணமாக புதுச்சேரி முதல் சென்னை என வங்கக்கடல் கரையோர பகுதிகளில் பல்வேறு இடங்கள் சேதமடைந்தன. இதில் சென்னை மெரினாவில் கடந்த நவம்பர் 27ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அந்த புதிய சிறப்பு பலமானது மாண்டஸ் புயலில் சேதமடைந்தது. இணையத்தில் விமர்சனம் […]
ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக கடனில் சிக்கி கோவையை சேர்ந்த சங்கர் என்கிற மென்பொறியாளர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டம் விளையாட வேண்டாம் எனவும், அதற்கு அடிமையாக வேண்டாம் என அரசு அறிவுறுத்தினாலும் ஆன்லைன் சூதாட்டத்தால் நடக்கும் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதில் பெரும்பாலும் படித்த இளைஞர்கள் உயிரை மாய்த்துகொள்வது இன்னும் வேதனை அளிக்கிறது. கோவை, உப்பிலிபாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் சங்கர், 29வயதான இவர் மென்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஆன்லைன் சூதாட்டம் […]
சென்னை, பழவந்தாங்கலில் இன்று அதிகாலை வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சென்னை, பழவந்தாங்கலில் இன்று அதிகாலை வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் திடீரென தீப்பிடித்து இருந்துள்ளது. இதில் 2 கார்களும் முற்றிலுமாக தீக்கிரையானது. இந்த நிலையில், கார் எப்படி தீப்பிடித்தது என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், கரையோர மக்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து இன்று நள்ளிரவு அந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. அதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் , கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, திருத்தணி தாலுகா […]
கடலூர் புதுப்பாளையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக கூடிய டிடிஎப் வாசனின் ரசிகர்களை போலீசார் விரட்டியடித்து கலைத்துள்ளனர். யூடியூபில் விதமான பைக்குளில் வெவ்வேறு இடங்களுக்கு சென்று வீடியோ பதிவிட்டு இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக 2K கிட்ஸ்கள் மத்தியில் மிக பிரபலமான யு-டியூர் டிடிஎஃப் வாசன். இவர் இன்று கடலூர் புதுப்பாளையம் அருகே வந்துள்ளார். இவரை காணுவதற்காக அப்பகுதியில் உள்ள இவரது ரசிகர்கள் குவிந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் வந்து போக்குவரத்தை சரிசெய்யும் […]
சொத்து குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன் விடுவிப்பு. சொத்து குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன், அவரது தம்பி ஜெகன் உள்பட 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேயர் ஜெகன் உள்ளிட்டோரையும் வழக்கில் இருந்து விடுவித்தது தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம். 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக அப்போது இருந்த அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை பெரியசாமி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.31 கோடி சொத்து குவித்ததாக […]
மதுரை ஆதீனமடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை விமான நிலைத்திற்கு அருகே உள்ள மதுரை ஆதீனமடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலமானது புதுச்சேரியை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில், மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை […]
ஆனிக்கல் காட்டாற்று வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரணம். – நீலகிரி மாவட்ட ஆட்சியர். உதகமண்டலம் (ஊட்டி) அருகே ஆனிக்கல் ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவில் நேற்று இரவு விழா முடிந்து பக்தர்கள் வீட்டிற்கு திரும்பும்போது, காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டது. அதில், 4 பெண் பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இரவு […]
நீலகிரி மாவட்டத்திற்கு ஜனவரி 4-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. நீலகிரி மாவட்டத்திற்கு ஜனவரி 4-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெத்தைஅம்மன் பண்டிகை காரணமாக உள்ள விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி 4 விடுமுறை ஈடுகட்ட ஜனவரி 21ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனிக்கல் ஆற்றில் ஏற்றப்பட்ட வெள்ளத்தில் சிக்கிய பெண்களில் 3 பெண்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஒரு பெண்ணை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மழை வரத்து காரணமாக உதகமண்டலம் ஆனிக்கல் ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. அப்போது நேற்று இரவு விழா முடிந்து பக்தர்கள் வீட்டிற்கு திரும்பும்போது, திடீரென காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு 4 பெண் பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். உடனடியாக […]
ஊட்டி ஆனிக்கல் காற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பெண்கள் மாயம். வடகிழக்கு பருவமழை இன்னும் ஓயாத காரணத்தால் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகமாகவே இருந்து வருகிறது. இதனால் உபரி நீர் வெளியேறும் அளவும் அதிகரித்து வருகிறது. அப்படி உதகமண்டலம் ஆனிக்கல் ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. அப்போது நேற்று இரவு விழா முடிந்து பக்தர்கள் வீட்டிற்கு திரும்பும்போது, திடீரென காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டது. […]
ஒரே குடும்பத்தை சேர்த்த 6 பேர் கொலை செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு. திருவண்ணாமலை மாவட்டம் ஒரேவந்தவாடி அருகே குடும்ப தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். மனைவி மகன் மற்றும் நான்கு மகள்களை கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை. தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மழையின் காரணமாக, சமீப நாட்களாக சில மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் 5 கண் மதகுகளில் 3 ஷட்டர்களிம் வழியாக 3000 கனஅடி நீர் வெளியேறி வருகிறது. கனமழை காரணமாக வடதமிழகத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இதனால், ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து வருவதை பொறுத்து 100 கனஅடி நீர் திறக்க தொடங்கியது இன்று காலை 1000 கனஅடியாக இருந்தது. இந்நிலையில், தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு 4297 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 3645 கனஅடி நீர் கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி, தற்போது […]
தருமபுரி ஆட்சியரிடம் குடும்பத்துடன் சென்று வீட்டிற்கு ஹெலிகாப்டரில் சென்று வர அனுமதி வழங்க வேண்டும் என மனு. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கணேசன் (57) என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்துடன் சென்று வித்தியாசமான மனு ஒன்று அளித்துள்ளார். அதில் தான் குடியிருந்து வரும் வீட்டிற்கு ஹெலிகாப்டரில் சென்று வர அனுமதி வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். தங்களுக்கு நடந்து செல்ல வழி விடாமல் வீட்டின் நான்கு புறமும் அக்கம் பக்கத்தினர் சுற்றுச்சுவர் எழுப்பியதால் கடந்த நான்கு […]
திருவள்ளூரில் இன்று மதியம் மற்றும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை. தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மதியம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் திருவள்ளூரில் இன்று மதியம் மற்றும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பிற்பகல் 3 மணிக்குள் வகுப்புகளை முடித்துக் கொள்ளுமாறும்அறிவுறுத்தியுள்ளார்.
கொற்றலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், திருவள்ளூர் மாவட்டத்தில் 2 கிராமங்கள் தனித்தீவாக காட்சியளிக்கின்றன. மாண்ட்ஸ் புயல் காரணமாக பெய்த கனமழையால் வடதமிழகத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி விட்டன. இதனால், பல்வேறு சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நீர்நிலைகளில் உபரிநீரை திறக்கபட்டு வருகின்றன. பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீர் வீதம் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், கொற்றலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூரை அடுத்து உள்ள சுப்பாரெட்டி பாளையம், பள்ளிபுரம் கிராமத்து மக்கள் மீஞ்சூருக்கு […]
தூத்துக்குடி ஆட்சியரிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் மனு அளித்துள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் புகைப்படங்களுடன் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி, தூத்துக்குடி ஆட்சியரிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு மற்றும் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் […]
தொடர் மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் அரைநாள் விடுமுறை. – காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மதியத்திற்கு பின் அரைநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் அரைநாள் விடுமுறை என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவித்துள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் தொடர்ந்து நீர் வரத்து உயர்ந்து வருவதால் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட உள்ளதாக காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். சமீப நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்காங்கே உள்ள அணைகள் ஏரிகள் நிரம்பி வழிந்து வருகிறது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் தொடர்ந்து நீர் வரத்து உயர்ந்து வருவதால் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட உள்ளதாக காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காலை 9 மணி முதல் வினாடிக்கு […]