சின்னாளம்பட்டி பகுதியில் டீக்கடை ஒன்றில் வாங்கிய வடைக்குள் கருகிய நிலையில் சுண்டெலி இருந்துள்ளது. திண்டுக்கல் சின்னாளம்பட்டி பகுதியில் டீக்கடை ஒன்று உள்ளது. அந்த டீக்கடையில் பலகாரங்களை பொதுமக்கள் வாங்கி சொல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று அந்த கடையில் 10 வயது சிறுமி ஒருவர் வடை வாங்கி சென்றார். பருப்பு வடையை எடுத்து சாப்பிடுவதற்க்காக வடையை பிய்த்துள்ளார். அப்போது அந்த வடைக்குள் கருகிய நிலையில் சுண்டெலி ஒன்று இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி, பெற்றோரிடம் காண்பித்துள்ளார். […]
தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கரும்பு விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் தனியார் கரும்பு ஆலை, விவசாயிகளின் பெயரில் சுமார் 300 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும் , அதனை அடைத்து விவசாயிகளின் பெயரில் உள்ள கடனை அடைக்க வேண்டும் எனவும், இதில் தமிழக அரசு தலையிட்டு ஆலையை அரசே எடுத்து நடத்த வேண்டும் எனவும் கரும்பு விவசாயிகள் கடந்த 21 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். […]
சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் என கூறி 20 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த கும்பல் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். சென்னை பிரட்வே, பார்டர் பஜாரில் கடை நடத்தி வருபவர் அப்துல் ஜமால். இவர் வீடு அருகில் மலையப்பன் தெருவில் இருக்கிறது. அங்கு கடந்த 13ஆம் தேதி 6 பேர் கொண்ட கும்பல் தங்களை தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ அதிகாரிகள் என கூறி சோதனை செய்துள்ளார். கடைகளிலும் சோதனை செய்துள்ளனர். அந்த சமயம் 20 லட்ச ரூபாயை கொள்ளையடித்துவிட்டு […]
குண்டர் தடுப்பு சட்டத்தை காவல்துறையினர் இயந்திரத்தனமாக செயல்படுத்தி உள்ளனர் என நீதிபதிகள் குற்றச்சாட்டு. கொலை வழக்கில் கைதான திண்டுக்கல்லை சேர்ந்த 5 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஸ்ரீதர், ராஜ்குமார், ராஜேஸ்வரன், கருணாகுமார், ரஞ்சித் ஆகியோர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. குண்டர் தடுப்பு சட்டத்தை காவல்துறையினர் இயந்திரத்தனமாக செயல்படுத்தி உள்ளனர் என்றும் குண்டர் தடுப்பு காவல் விதிகளை மனதில் கொள்ளாமல் […]
தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு. தூத்துக்குடி கோவில்பட்டி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் மூன்று கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் காரில் சென்ற கீர்த்திக், அவரது நண்பர்கள் செந்தில்குமார், அஜய் ஆகியோர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
213-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. சர்வதேச சந்தையில் கட்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்பொழுது கடந்த 200 நாட்களைக் கடந்தும் எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் 213-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும் , டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனையாகி […]
முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் உரை. சென்னை கிறித்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தாம் பயின்ற பள்ளியில் முன்னாள் மாணவராக பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நான் கோபாலபுரத்தில் இருந்தபோது, பள்ளிக்கு பேருந்தில் தான் வருவேன். 29சி பேருந்தில் ஏறி ஸ்டெர்லிங் ரோட்டில் இருந்து குறைந்தபட்சம் ஒரு 3 கிமீ நடந்து பள்ளிக்கு வருவேன். நடந்து வருவதற்கு பல காரணங்கள் உண்டு, அதை […]
கரூரில் மனநலம் பாதிக்கப்பட்டு, அரைநிர்வாணமாக திரிந்த ஒரு முதியவரை சாமியார் என கூறி மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதிவர் ஒருவரை சித்தர் என கூறி அங்குள்ளவர்கள் வணங்கி வந்துள்ளனர். காணிக்கையையும் அளித்து வந்துள்ளனர். இதில் ஒரு கும்பல், இவருக்கு கோவில் காட்டுவதாக கூறியும் காணிக்கை வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்து , கரூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து, அந்த முதியவரை […]
திருச்சி மாவட்டத்திற்கு ஜனவரி 2-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு ஜனவரி 2-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறைக்கு பதில் ஜனவரி 7-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி – ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் மார்கழி மாதத்தில் 20 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி […]
மக்கும் குப்பை , மக்காத குப்பை என இரு குப்பை தொட்டி வைக்காமல் இருக்கும் சென்னை கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கடைகளில் மாநகராட்சி அதிரடியாய் சோதனை செய்து வருகிறார்கள். அதாவது கடையில் 2 விதமான குப்பை தொட்டி வைத்து குப்பைகளை சேகரிக்க வேண்டும். ஒன்று மக்கும் குப்பை தொட்டி, இன்னொன்று மக்காத குப்பை தொட்டி என இரு குப்பைத்தொட்டிகள் வைத்திருக்க வேண்டும். அப்படி குப்பை தொட்டிகள் வைத்திருக்காத கடைகளுக்கு சென்னை மாநகராட்சி […]
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பெண்ணை கத்தி முனையில் இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 11ஆம் தேதி காவலன் செயலி மூலம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஓர் புகார் வந்ததது. அதில், அந்த பெண் வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் என்றும், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தங்கி அதேபகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருவதாகவும் பதிவிட்டுள்ளார். அவர், அன்று வேலை முடிந்து […]
சென்னையில் முதியோர்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்க வரும் 21ம் தேதி டோக்கன் வழங்கப்படும் என அறிவிப்பு. மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்யும்போது மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்கள் குறித்து போக்குவரத்து கழக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில் வரும் 21ம் தேதி முதல் கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்படும் என்று மாநகர போக்குவரத்து […]
கடந்த 9-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்ய இன்று சென்னையில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக பெய்த மழையின் காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறைகள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது இதனை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 9-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்ய இன்று சென்னையில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை […]
தீரன் பட பாணியில் கோவையில் திருடி வெளி மாநிலம் சென்ற திருடர்களை அங்கு வைத்தே தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழக காவல்துறையின் சிறப்பான செயல்பாட்டு காரணமாக தமிழகத்தில் திருடிவிட்டு, வெளிமாநிலத்தில் தப்பி சென்ற திருடர்களை அவர்கள் ஊருக்கே சென்று கைது செய்துள்ளனர். கோவையில் சுமார் 6.5 கிலோ தங்க நகைகளை ஒரு கும்பல் திருடி சென்றுள்ளது. இந்த கொள்ளை கும்பல்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். அதில் அந்த திருட்டு கும்பல் மத்திய பிரதேச […]
மதுரையில் போலி மருத்துவம் பார்த்த பெண் கைது. மதுரை மாவட்டம் ஸ்ரீராம் நகரில் யோக சரஸ்வதி என்பவர் பத்தாம் வகுப்பு தான் முடித்துள்ளார். இந்த நிலையில் இவர் அப்பகுதியில் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இது தொடர்பாக சுகாதாரத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அதில் அவர் பத்தாம் வகுப்பு தான் படித்துள்ளார் என்பதும், போலி மருத்துவம் பார்த்ததும் உறுதியானது. இதனை எடுத்து அவரை போலீசார் […]
விவசாயிகள் தாமாக முன்வந்து கொடுக்கும் நிலங்களுக்கு திருப்திகரமாக இழப்பீடு வழங்கப்படும் என அறிவிப்பு. கோவை மாவட்டம் அன்னுரில் தொழிற்பூங்கா அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான தரிசு நிலங்கள் (1,630 ஏக்கர்) மட்டும் கையகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வித கட்டாயமும் இன்றி, விவசாயிகள் மனமுந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அரசு கூறியுள்ளது. மேலும், கோவை மாவட்டம் அன்னுரில் அமையவுள்ள தொழிற்பூங்காவில் காற்று மற்றும் […]
மாண்டஸ் புயல் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்ய நாளை சென்னையில் பள்ளிகள் செயல்படும். வங்கக்கடலில் உருவாகி ஓய்ந்த மாண்டஸ் புயல் காரணமாக பெய்த மழையின் காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு அப்போது விடுமுறைகள் அளிக்கப்பட்டன. தற்போது இதனை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 9ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்ய நாளை நவம்பர் 17ஆம் தேதி சென்னையில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிளமை […]
சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னம் குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நினைவாக கடலில் பேனா சின்னம் 42 மீ உயரத்தில் 39 கோடி செலவில் சிலை அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கின. இதற்கு தடை கேட்டு திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையை தென் மண்டலம் […]
சென்னை, மெரினா மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதை பருவ மழைக்காலம் முடிந்த பின்னர் தான் திறக்கப்படும் என சென்னை மாநகராட்சி விளக்கம். சென்னை, மெரினா மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதை மாண்டஸ் புயலின் போது சேதமடைந்தது. இதுகுறித்து தற்போது சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி, சென்னை, மெரினா மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதை பருவ மழைக்காலம் முடிந்த பின்னர் தான் திறக்கப்படும் பாதை சேதமடைந்த இடத்தில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடல் அலை உள்வரும் தூரம் கணக்கிட்டு […]
தூத்துக்குடியில் 135 கிலோ குட்காவை கடத்த முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் கண்டெய்னர் லாரி மற்றும் இருசக்கர வாகனங்களும் கைது செய்யப்பட்டுள்ளது. குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது. இருந்தும் அவை தமிழகத்தில் பல்வேறு கடைகளில் சட்டவிரோதமாக விறக்கப்பட்டு தான் வருகிறது. அதனை தடுக்க அரசு பல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் அதிரடி சோதனை செய்து சட்டவிரோதமாக கடத்தப்படும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகிறது. அப்படி தான், […]