வேலூர் சேண்பாக்கத்தில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் நடந்த சோதனையில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் அசுத்தமாக இருந்தது. இதனால் அந்த கம்பெனிக்கு ரூ.5000 அபராதமும், இதேபோல் அதேபகுதியில் ஒரு லெதர் கம்பெனியிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் பொருட்கள் இருந்ததால் அந்த கம்பெனிக்கு ₹10 ஆயிரம் அபராதம் விதித்தனர் இச்சம்பவம், பயிற்சி கலெக்டர் ஸ்ரீகாந்த், தாசில்தார் பாலாஜி தலைமையிலான மாநகராட்சி பணியாளர்கள் டெங்கு தடுப்பு ஆய்வு மேற்கொண்டபோது நடைபெற்றது.
நேற்று நள்ளிரவில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா இருந்த போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடைபெற்றது, அதில் சில லேப்டப்கள், பென்டிரைவ்கள், ஜெயலலிதாவிற்கு வந்த பல கடிதங்களை பறிமுதல் செய்துள்ளதாக T.T.V.தினகரன் அவர்கள் தூத்துக்குடியில் பேட்டியில் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது, இந்நிலையில் இது குறித்து T.T.V.தினகரன் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ரூமிற்கு சோதனையிட வேண்டுமென கூறினார், நான் வாரன்ட் இருக்கிறதா என கேட்டேன், அவர்கள் இல்லை என கூறியதால் […]
நெல்லை மாவட்டத்தில் உள்ள இராதாபுரம்-வடக்கன்குளம் சாலையை புதுப்பித்து இருவழி சாலையாக மாற்றிட நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், கலந்து கொண்டு வாலிபர் சங்க தோழர்கள் கைதாகி மண்டபத்தில் உள்ளனர்.
2010ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள சந்தையூரில் தெற்கு தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் அஜித்குமார் (12).இவர் சத்திரம் வண்டிப்பாதையில் சைக்கிள் ஒட்டி கொண்டிருந்தபோது சைக்கிள் பளுதாகியதால் அதனை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக எஸ்.கீழப்படியைச் சேர்ந்த கருப்பையா மகன் ஜோதிராஜ் (29) செல்போன் பேசியபடி ஓட்டி வந்து அஜித்குமார் மீது மோதினார். இதில் சம்பவ இடத்திலேயே அஜித்குமார் உயிரிழந்தார். இந்த வழக்கு பேரையூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த பேரையூர் மாஜிஸ்திரேட் ராஜமகேஷ், […]
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் சுண்டமேடு காந்திநகர் அருந்தியர் தெருவை சேர்ந்த பாபு என்பவரை திருச்செங்கோ மண்டாகபாளையத்தில் இயங்கிவரும் பங்காளி மண்சட்டி சமையல் உணவகத்தின் உரிமையாளர் மற்றும் அவரது கூலிபடையினர் சேர்ந்து செல்போனை திருடிவிட்டாய் என்று பொய்யாக குற்றம் சுமத்தி கடந்த 15-11-2017 அன்று காலை 10-00மணியிலிருந்து இரவு பத்துமணி வரை எந்த பழக்கங்களும் (அதாவது மது பீடி புகையிலை) இல்லாத பாபுவை வழுகட்டாயமாக மதுவை ஊற்றி குடிக்கவைத்து உருட்டு கட்டைகளாலும் தனது உடல்பலத்தாலும் கொடூரமான முறையில் தாக்கியுள்ளார்கள். […]
சரபோஜி கல்லூரி விளையாட்டு மைதானத்தை ஆக்கரமித்து எடப்பாடி தஞ்சை வருகையால் அந்த மைதானத்தில் ரோடு போடும் பணியையை தடுக்க கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டமானது நடைபெற்றது வருகிறது.இப்போராட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் அரவிந்த்சாமி தலைமை தாங்கினார்.
திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் 312 பேர் பங்குபெற்றனர். 120 பேர் பரிசு பெற தகுதிபெற்றுள்ளனர். திருச்சி மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதனை கலக்டர் ராஜாமணி தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் வரவேற்றார். கலைபண்பாட்டுத்துறை துணை இயக்குனர் குணசேகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் புன்னியமூர்த்தி, சிறப்பு ஒலிம்பிக் இயக்குனர் பால்தேவசகாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருச்சி, நவ.17: திருச்சியில் நேற்று […]
திருச்சி: திருச்சியில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் வழியில் மண்ணச்சநல்லூரில் பங்குனி வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால், பெருவளை வாய்க்கால் பாலங்கள் பழுதடைந்ததால் புதிதாக கட்டப்பட்டு வருகிறதன. அதலால் தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டன. இந்த பாலங்கள் கட்டும் வேலைகள் நடைபெறுவதால் பஸ்கள் சுற்றி செல்கின்றன. இதனால் பாலத்தின் அருகே தற்காலிக பஸ் நிறுத்தம் ஏற்படுத்தகோரி நேற்று பாதிக்கப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்காலிக பாலமும் அடிக்கடி சேதமடைந்ததால் அங்கேயும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதலால் […]
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக 72 ஆண்டுகளாக சேவை செய்துவரும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கமானது 2011ஆம் ஆண்டு முதல் வருடம்தோறும் திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களை ஒன்றினைத்து திருச்சி யூனியன் என்கிற பெயரில் சிறப்பு முகாம்களை நடத்திவருகிறது. இந்த அமைப்பு 100 கிளைகளுடன் செயல்படுகிறது. அதன்படி இந்தாண்டும் காவிரி கறையின் இரு இடங்களிலும் நவம்பர் 16 (வியாழன்) அன்று தொடங்கியது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபசாலையில் காவிரி புஷ்கரம் நடந்த இடத்திலிலும் (கோனார் சத்திரம் எதிரில்) ஒரு […]
நெல்லை:மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் நம்பியாறு அணையில் இருந்து இம்மாத விவசாய பாசனத்திற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அமைச்சர் ராஜலட்சுமி தண்ணீர் திறந்து விட்டார்.இந்த நம்பியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பதன் மூலம் சுமார் 1744.55 ஏக்கர் திருநெல்வேலியில் உள்ள விவசாய நிலம் பாசன வசதி பெறும்.
சென்னை:கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்திய கடலோர காவல்படையானது மீன் பிடிக்க கடலுக்கு சென்ற தமிழக மீனவர்களை தாக்கியது.ஆகவே கடலோர காவல்படையின் இத்தகைய செயலை கண்டித்து சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை காசிமேட்டில் உள்ள கடலோர காவல்படை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை: சென்னையில் உள்ள ரயில் நிலையத்தில் உள்ள குப்பை தொட்டிக்கும் பூட்டு பாதுகாக்கும் தென்னிந்திய ரயில்வே நிர்வாகம். இது தான் நமது தூய்மை இந்தியாவின் புதிய பாதுகாக்கும் அமைப்பு (security system). குப்பை தொட்டிய களவாடி கொண்டு போகக் கூடாது என்பதற்காகவே பூட்டு போட்ட பார்த்தா அங்க தான் நம்ம நாட்டோட பெருமை நிக்குது….
திருச்சி to சென்னை இடையே செல்லும் மலைகோட்டை எக்ஸ்பிரஸ் திருச்சி வழ் மக்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கும்பகோணம் மார்க்கமாக அகலபாதை பயணிகளுக்காக மாற்றப்பட்ட தடத்தை பல்வேறு போராட்டங்களுக்கு இடையே மீட்டு 2015ஆம் ஆண்டு இறுதி முதல் திருச்சியிலிருந்து இயக்கபடுகிறது. ஆனால் தற்போது ரயில்வே துறை எடுக்கும் அதிரடி நடவடிக்கை காரணமாக மலைகோட்டை எக்ஸ்பிரஸ் பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். முதலில் இந்த ரயில் அதி விரைவு வண்டி என கூறி […]
கடலூர் நகரம் சுப்புராயுலுநகர் டீ கடை அருகே கேட்பாரற்று கிடந்த ₹40000.00 ரூபாய் பணத்தை மீட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் -DYFIயின் நகர துணை செயலாளர் S.செந்தமிழ்செல்வன் அவர்கள் மீட்டு திருப்பாதிரிப்புலியூர் காவல் ஆய்வாளர் திரு.உதயகுமார் அவர்களிடம் ஒப்படைத்தார். உடன் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் R.அமர்நாத்,நகர குழு உறுப்பினர்களான G.சேட்டு,E.அருள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க DYFI கடலூர் நகர செயலாளர் D.S.தமிழ்மணி ஆகியோர் உடன் இருந்தனர்.
கன்னியாகுமரியில், தினமும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமான அளவில் வந்துசெல்கின்றனர்.ஆனால் இங்கு, ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்று இருந்தாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்களில்தான் கன்னியாகுமரி சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாகக் காணப்படும். இதை, கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலா சீசன் காலம் என்று சொல்வார்கள். சபரிமலை மண்டல பூஜைக்காக வரும் பக்தர்கள், கன்னியாகுமரிக்கும் வருவார்கள். டிசம்பர் மாதத்தில் பள்ளிக்கூடங்களில் அரையாண்டுத் தேர்வு முடிந்ததும் விடுமுறை […]
மதுரை திருமங்கலம் உள்ள மூன்று அரசு பெண்கள் விடுதியில் ஆய்வு செய்தில் கள்ளர் விடுதியும் பிற்படுத்தப்பட்டேர் நல விடுதியிலும் சுகாதாரம் மிக மோசமாதாகவும், மாணவிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கட்டிடங்களும் உள்ளன. மாணவிகளின் உயிருக்கு பாதுகாப்பும் விடுதியை சுகாதாரமாக வைக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் (SFI) மதுரை மாநகர் சார்பாக மனு கொடுக்கப்பட்டது…
டாக்டர் கிருஷ்ணசாமி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் இராஜலட்சுமியுடன் சந்தித்தார். இன்று (15.11.17) பிற்பகல் புதிய தமிழகம் கட்சி நிறுவனத்தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்கள், பட்டியலினத் துறை அமைச்சர் இராஜலட்சுமி அவர்களை சாந்தித்துத் தேவேந்திரகுல வேளாளர் மக்களின் பட்டியல் வெளியேற்றம் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் அரசு ஆணைக்கான கோரிக்கை மனுவை வழங்கினார்..
இராமநாதபுரம் மாவட்டம்:ப்ளக்ஸ் போர்டு வைப்பதற்கு அனுமதி இல்லை பட்டணங்காத்தான்ஊராட்சி நிர்வாக அறிவிப்பு செய்திருக்கிறது.ஆனால் அரசு நடத்தும் விழாவுக்கு மட்டும் பொருந்தாது போல.அந்த விழாவுக்கு மட்டும் விதிவிலக்குபோல???? சாதாரண மக்களுக்கு மட்டும்தான் சட்டம் வரம்புபோல. இந்த விசையமானது ஊர் தலையாரி, VAO, RI, தாசில்தார், RDO, DRO, கலெக்டர் போன்ற இந்த மாவட்ட அதிகாரிகளாக இருக்கிற யாருக்குமே இந்த விஷயம் போகல அதை விடுங்க நம்ம காவல்துறைக்குமா தகவல் கிடைக்கல?????
தூத்துக்குடியில் voc மார்க்கெட் பிரதான சாலையில் உள்ள வீட்டிற்கு தேவையான பல பொருள்கள் விற்கும் தனியார் கடையான “ராணி ஸ்டோர்-சூப்பர் மார்க்கெட்யின்” முன்பு கேட்டு போன பொருள்களை ஒன்றுக்கு மற்றொன்று இலவசம் என கூறி அக்கடையின் ஊழியர்களை வைத்து விற்பனை செய்துள்ளது…. இதனை பற்றிய விவரம் அறியாத பொதுமக்களும் ,வாடிக்கையாளரும் அப்பொருள்களை வாங்கிக்கொண்டுதான் சென்றிருக்கின்றனர்.இந்நிலையில் இதனை கண்டறிந்த சில பொதுமக்கள் அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்… பின்னரே அதிகாரிகள் வந்துள்ளனர்.அந்த கடைக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணை […]
Thoothukudi News: மழைகாலம் தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர கால மையம் ஒன்றை Thoothukudi மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.பொது மக்கள் மழை தொடர்பான புகார்களுக்கு 1077 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம் என்றும் கூறப்படுள்ளது .மேலும் வாட்ஸ் அப் மூலம் தகவலை […]