உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் ஆண்கள் தின கொண்டாட்டம்

தூத்துக்குடி மீன்வளகல்லூரி வளாகத்தில் மாணவர் சங்கம் சார்பில் ஆண்கள் தினம் கொண்டாடபடுகிறது.இதில் மாணவர் பால் நத்தானியேல் வரவேற்று பேசினார். ஆண்கள் தினம்   கொண்டாடுவதின் முக்கியத்துவத்தை மாணவர் குருபிரசன்னா விளக்கி பேசினார். மாணவர் சங்க துணைத்தலைவர் ஆதித்தன் பேசினார். கல்லூரி முதல்வர் சுகுமார் தலைமை வகித்தார். இதையொட்டி, ‘இன்றைய சூழ்நிலையில் ஆண்களின் நிலை ஆளுமையா? அடிமையா?’ என்ற தலைப்பில் நடந்த சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் பேராசிரியர் நீதிச்செல்வன் நடுவராகச் செயல்பட்டார். இதில் 2ம் ஆண்டு மாணவர் கணேஷ்குமார், முதலாம் […]

mens day 3 Min Read
Default Image

தஞ்சையில் அதிரடி வாகன சோதனை

தஞ்சை மாவட்டத்தில் தொடர் கொள்ளை மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் தனிப்படை அமைத்து எஸ்பி செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். இதன்படி அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த 15ம் தேதி  வாகன சோதனையில்து சந்தேகத்தின்பேரில் இருசக்கர வாகனத்தில் வந்த அருண்சங்கர் (28), பிரசாந்த் (22) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் இவர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்தனர். அதேபோல் கடந்த 12ம் தேதி திருவையாறு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது […]

#Tanjore 3 Min Read
Default Image

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதில் கட்டண உயர்வு : சமூக ஆர்வலர்கள் கண்டனம்

ஒவ்வொரு குழந்தைக்கும் பிறப்பு சான்றிதழ் மிகவும் முக்கியமானது. இப்போதுள்ள கால கட்டத்தில் அந்த சான்றிதழ் இல்லாமல் எந்த முக்கிய ஆவணமும் கிடைப்பது கடினம். இது குழந்தை பிறந்தவுடன்  மருத்துவமனைகளில் பிறந்த தேதி பதிவு செய்யப்பட்டு அது மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு பதிவு செய்யப்பட்டவுடன் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்ப படிவம் ரூ.5க்கு வாங்கி அதை பூர்த்தி செய்து கொடுத்தவுடன் முதல் பிரதி பெறுவதற்கு ரூ.10 கட்டணம் செலுத்தினால் போதும். இதையடுத்து ஒவ்வொரு கூடுதல் பிரதி பெறுவதற்கும் தலா […]

#Tanjore 7 Min Read
Default Image

கதிராமங்கலத்தில் 185வது நாளாக போராட்டம்.

கதிராமங்கலத்தில்  185வது நாளாக  நேற்று பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் பகுதியில் பூமியில் பதிக்கப்பட்டிருந்த குழாயில் கடந்த ஜூன் 30ம் தேதி கசிவு ஏற்பட்டது. இதையடுத்து எண்ணெய் நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இதில்  10 பேர் மீது  வழக்குபதிவு செய்யப்பட்டது. அதன் பின்  ஜூலை 1ம் தேதி முதல் கதிராமங்கலத்தில் பல்வேறு போராட்டங்களை பொதுமக்கள் நடத்தி வருகின்றனர். ஆகஸ்ட் 12ம் தேதி முதல் ஐயனார் கோயிலில் காத்திருப்பு […]

#Tanjore 3 Min Read
Default Image

மதுரை ஆட்சியர் திடீர் ஆய்வு : மாநகராட்சி ஊழியர்களுக்கு எச்சரிக்கை

கலெக்டர் வீரராகவராவ் டெங்கு காய்ச்சலை தடுக்க  தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன் பொருட்டு  அரசு ஊழியர் அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்த டி.ஆர்.ஓ. காலனியில் நேற்று காலை 7.30 மணிக்கு திடீர் ஆய்வு நடத்தினார். இதில்  பல இடங்களில் சாக்கடை தேங்கி நிற்பதை கண்டார். அதில் கொசு உற்பத்தியாகி இருந்ததை கண்டதும், மாநகராட்சி ஊழியர்கள் வேகமாக வந்து கொசு ஒழிப்பு மருந்தை ஊற்றினர். உடனே கலெக்டர் கோபத்துடன் “நான் பார்த்த பிறகு, என் கண்முன் மருந்து ஊற்றி சமாளிக்கும் […]

#Madurai 4 Min Read
Default Image

மதுரை அரசுமருத்துவமனையில் போக்குவரத்து நெரிசல்

மதுரை அரசு மருத்துவமனையில், ரூ.50 கோடியில் புதிதாக கட்டப்பட்ட மேம்படுத்தப்பட்ட பிரசவ வார்டு கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த 6 மாடி புதியகட்டிடத்தில் கட்டிடத்தில், 850 படுக்கைகள் உள்ளன. மேலும் பழைய பிரசவ வார்டில் இல்லாத பல வசதிகள் இங்குள்ளது. ஆனால், உறவினர்கள் இருக்கவும், தங்கவும் வசதிகள் இல்லாதது பெரும் குறையாகவே உள்ளது. இயற்கை மகப்பேறு, அறுவை சிகிச்சை மகப்பேறு, கர்ப்பப்பை அகற்றுதல் உள்ளிட்ட அனைத்து சிகிச்சையும் மேற்கொள்ளப்படுவதால், மதுரை மற்றும்  தென்மாவட்டங்களிலிருந்தும் நிறைய கர்ப்பிணிகள் […]

#Madurai 4 Min Read
Default Image

வாரத்திற்கு ஒரு முறை நூலகம் செல்லவேண்டும் : பொது நூலக இயக்குனர் பேச்சு

 திருச்சி மாவட்டம் துறையூர் கிளை நூலகத்தில் 50வது தேசிய நூலகவார  விழா நடைபெற்றது. இந்த  விழாவை முன்னிட்டு கிளை நூலக வாசகர் வட்டம், துறையூர் காவல் நிலையம் காவல் நிலையம், சிறுவர் மன்றம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் இணைந்து வாகன ஓட்டுநர்கள் வாழ்க்கை பயணம் தொடர என்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. வாசகர் வட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். நூலகர் பாலசுந்தரம் வரவேற்றார். பொது […]

#Trichy 4 Min Read
Default Image

மணப்பாறை அரசு மருத்துவமனையில் செவிலியர் நியமிக்க தீர்மானம் :மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

 மணப்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது தாலுகா மாநாடு நேற்று நடந்தது. வட்ட குழு உறுப்பினர்கள் சீனிவாசன், சரஸ்வதி ராஜாமணி ஆகியோர் தலைமை வகித்தனர்.இந்த மாநாட்டில்  மணப்பாறை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க வேண்டுமென தீர்மானம் இயற்ற்றபட்டது. மாவட்டகுழு உறுப்பினர் தர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பெரியகுளம்  தொகுதி முன்னாள் எம்எல்ஏ லாசர்  சிறப்புரையாற்றினார். மாநாட்டில் நடந்த நிர்வாகிகள் தேர்தலில் புதிய வட்ட செயலாளராக ராஜகோபால், வட்டக்குழு உறுப்பினர்களாக சீனிவாசன், […]

#Trichy 3 Min Read
Default Image

தென்னிந்திய திருச்சபையின் பெண்கள் மாநாடு நிறைவு

தென்னிந்திய திருச்சபையின் (CSI) பெண்கள் ஐக்கிய மாநாடு  இந்தமுறை மூன்று நாள் மாநாடு திருச்சியில் தொடங்கியது. இது பிஷப் ஹீபர் கல்லூரியில் கடந்த 17ம் தேதி துவங்கியது. இந்த மாநாடு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இந்த மாநாட்டை திருச்சி-தஞ்சாவூர் டயோசஸ் நடத்தியது. இந்த நிகழ்ச்சியின்  நிறைவு நாளான நேற்று சிஎஸ்ஐ பெண்கள் ஐக்கிய பொதுச்செயலாளர் சிந்தியா ஷோபா ராணி வழிகாட்டுதல் வழங்கினார். டோர்னகால் டயோசஸ் தலைவர் சுவந்தா பிரசாத் ராவ் துவக்கி வைத்தார். தமிழ் […]

#Thoothukudi 3 Min Read
Default Image

விராலிமலை ஆற்றில் மணல் கொள்ளை : திருச்சியில் பிடிபட்டனர்.

திருச்சி : விராலிமலை ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டு செல்லும் வழியில் போலீசார் லாரியை மடக்கி பிடித்தனர். நேற்று திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த கைகாட்டி அருகே உள்ள சொரியம்பட்டி  விளக்கில் வளநாடு போலீசார்  வாகன சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்த போது இது கண்டுபிடிக்கபட்டது. அந்த வண்டியை மடக்கி பிடித்து விசாரித்ததில் இன்னொரு டிப்பர் லாரி மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது.பின்னர் அதனையும் அந்த பகுதி போலீசார் மடக்கி பிடித்தனர். […]

#Trichy 3 Min Read
Default Image

முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டப்படும் தூத்துக்குடியில்

இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி தமிழ் விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள தனியார் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஓ.ஏ. நாராயணசாமி தலைமை வகித்துப் பேசினார். மாநில அமைப்பாளர் காளிராஜ், அவைத் தலைவர் வெங்கடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாவட்டச் செயலர் துரை, மாநிலத் துணைத் தலைவர் நம்பிராஜன், மாவட்டத் துணைத் தலைவர் சாமியா, மகளிரணியைச் சேர்ந்த பாப்பா மற்றும் சங்க உறுப்பினர்கள் வெள்ளத்துரை, மாரியப்பன் […]

#Thoothukudi 4 Min Read
Default Image

குளத்தில் கிடந்த வாலிபர் சடலம்!!

          அரியலூர் மாவட்டம் மேலத்தெரு பகுதியில் உள்ளது குறிஞ்சான் குளம் உள்ளது. இதில் வாலிபர் ஒருவரின் உடல் இறந்து மிதந்தது. அதனை பார்த்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவலர்கள்வாலிபரின் உடலை மீட்டனர். இறந்தவரை பற்றி விசாரணை நடந்தினர் அப்போது அவர் அப்பகுதியை சேர்ந்த சேகர் மகன் மணிகண்டன் என்பதும் அவருக்கு வயது 24  மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. பின்னர் போலிசார் […]

#Death 2 Min Read
Default Image

தேர்வில் தோல்வி அடைந்தால் செய்ய வேண்டியவை மாவட்ட ஆட்சியர் அறிவுரை..,

அரியலூர் மாவட்டம் லிங்கத்தடி மேடு வள்ளலார் பள்ளியில் நவம்பர் 14 அன்று குழந்தைகள் தின விழா நடைபெற்றது. அதில் அரியலூர் மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் மனம் தளர விடகூடாது. டெண்டுல்கர் 10ம் வகுப்பு தான் முடித்துள்ளார், இந்திய அணியின் முன்னால் கேப்டன் டோனி யும் அதுபோல தான் ஆனால் அவர்கள் வாழ்கையில் உயர்ந்த நிலையில் உள்ளனர். அதுபோல மாணவர்கள் தங்களது தன்னம்பிகை தளர விடாமல் […]

education 2 Min Read
Default Image

பெரம்பலூர் : ஜெயங்கொண்டத்தில் பைக் திருட்டு

பெரம்பலூர்: ஜெயங்கொண்டம் அருகே வெத்தியார்வெட்டு கிராமத்தை சேர்ந்த நடேசன் மகன் ராமலிங்கம் இவரது பைக்கை  கடந்த 13ம் தேதியன்று தனது  வீட்டின் பின்புறம்  நிறுத்திவிட்டு மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. பதட்டமடைந்த அவர்,  இதுகுறித்து மீன்சுருட்டி போலீசில் புகார் செய்தார். அவர் புகார் தெரிவித்ததன் பெயரில்  சப்.இன்ஸ்பெக்டர் வசந்த் வழக்குப் பதிந்து உடனே  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகில் உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த துரையப்பன் மகன் அசோக்ராஜ் மற்றும் மீன்சுட்டி அருகில் உள்ள […]

motorcycle theft 2 Min Read
Default Image

ஆப்பனூர் கோயிலில் மாட்டுவண்டி பந்தயம்

ராமநாதபுரம் :  கடலாடி அருகே ஆப்பனூர் கருப்பணசாமி கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி பெரியமாடு, சின்னமாடு இரண்டு பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தயமானது பெரியமாடுகள் போட்டியில் ஆப்பனூர் முதுகுளத்தூர் சாலையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரையிலான போட்டியில் 15 மாட்டுவண்டிகள் கலந்துகொண்டது. இதில் மருகால்குறிச்சி பழனி முதலிடத்தையும், தூத்துக்குடி மாவட்டம், மூலக்கரை முருகன் இரண்டாம் இடத்தையும், வெலாங்குளம் கண்ணன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். சின்ன மாடுகள் பந்தயத்தில் அரியநாதபுரம் முதல் தேவர்குறிச்சி வரை […]

#Ramanathapuram 3 Min Read
Default Image

மாணவர்களுக்குள் அடிதடி : போலீசார் வழக்குப்பதிவு

பள்ளி மாணவர்களுக்குள் இருக்கையில் அமர்வது  சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு, அடிதடியாகி போலிஸ் வரை சென்றுள்ளது.  அருப்புகோட்டை அருகே குலசேகரநல்லூர் செல்ல இரண்டு 17 வயது மாணவர்கள் நேற்று முன்தினம் வந்தனர். அவர்கள் அந்த பேருந்தின் டிரைவர் இருக்கை பின் புறம் அமர்ந்தனர். அதே  பேருந்தில் வரும் பச்சேரி மாணவர்களுக்கும் இடையே இருக்கை தொடர்பாக பிரச்சனை வந்துள்ளது. இது அடிதடி வரை சென்று குலசேகரநல்லூர் மாணவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் அருப்புகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து […]

virudhunagar 2 Min Read
Default Image

வாக்காளர்களை செயலி மூலம் ஒருங்கிணைக்கும் பணி : விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட வாக்காளர்களை செல்போன் புதிய செயலி மூலம் குடும்ப உறுபினர்களை ஒருங்கிணைக்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணி உளுந்தூர்பேட்டை தொகிதியில் உள்ள பேரூராட்சி, ஊராட்சி பகுதியி உள்ள வாக்காளர்களுக்காக நடைபெறுகிறது. இந்த பணியை வருவாய் கோட்டாட்சியர் சாரு நேற்றுதுவக்கி வைத்தார். மேலும் பணி நடைபெற்ற இடமான உ.கீரனூர், உளுந்துர்பேட்டை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இதனுடன்  தாசில்தார் பாலசுப்ரமணியன், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் சற்குணம், வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் […]

villupuram 2 Min Read
Default Image

வேலூரில் 2 கம்பெனிகளுக்கு 15 ஆயிரம் அபராதம்

வேலூர் சேண்பாக்கத்தில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் நடந்த சோதனையில்  டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் அசுத்தமாக இருந்தது. இதனால் அந்த கம்பெனிக்கு ரூ.5000 அபராதமும், இதேபோல் அதேபகுதியில்  ஒரு லெதர் கம்பெனியிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் பொருட்கள் இருந்ததால் அந்த  கம்பெனிக்கு ₹10 ஆயிரம் அபராதம்  விதித்தனர்  இச்சம்பவம், பயிற்சி கலெக்டர் ஸ்ரீகாந்த், தாசில்தார் பாலாஜி தலைமையிலான மாநகராட்சி பணியாளர்கள் டெங்கு தடுப்பு ஆய்வு மேற்கொண்டபோது நடைபெற்றது.  

Dengue 2 Min Read
Default Image

நள்ளிரவில் ஜெ வீட்டில் நடந்த சோதனை : T.T.V.தினகரன் பேட்டி

நேற்று நள்ளிரவில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா இருந்த போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடைபெற்றது, அதில் சில லேப்டப்கள், பென்டிரைவ்கள், ஜெயலலிதாவிற்கு வந்த பல கடிதங்களை பறிமுதல் செய்துள்ளதாக T.T.V.தினகரன் அவர்கள் தூத்துக்குடியில் பேட்டியில் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது, இந்நிலையில் இது குறித்து T.T.V.தினகரன் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘மறைந்த முதல்வர்  ஜெயலலிதா அவர்களின் ரூமிற்கு சோதனையிட வேண்டுமென கூறினார், நான் வாரன்ட் இருக்கிறதா என கேட்டேன், அவர்கள் இல்லை என கூறியதால் […]

#EPS 4 Min Read
Default Image
Default Image