துறையூர் ,பெரம்பலூர் நெடுஞ்சாலை கோட்டத்தூர் பிரிவு ரோட்டின் அருகே சுமார் மாலை 4மணி அளவில் கோர விபத்து நடந்தது. செல்லிபாளையம் ஊராட்சி ராஜீ அவர்களின் மனைவி சுலோச்சனா மற்றும் செல்லிபாளையத்தை சேர்ந்த இருவர் விபத்தில் சம்பவ இடத்திலே அகலா மரணம் அடைந்தனர் .
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் ஓன்றியத்தில் ஊராட்சி செயலர்களுக்கு இளநிலை உதவியாளர் நிலை ஊதியம் கருவூலம் மூலம் வழங்கிட வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குழியில் உள்ள மொரட்டுபாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வரும் நாகராஜ், மணிகண்டன் ஆகியோரை நான்கு இளைஞர்கள் வந்து தாக்கினர். வெளியாட்கள் வந்து பள்ளிமானவர்களை தாக்கும் காட்சிகள் சமூகவளைதலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை அறிந்து போலீசார் வந்து அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பள்ளியில் வைத்து மாணவர்களை தாக்குவது அந்த பகுதி மக்களிடம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் குஜிலியம்பாறை வழியாக கரூர் செல்லும் வழியில் கோவிலூர் சாலை மழைநீரால் குண்டும் குழியுமாக உள்ளது. அதில் மழைநீர் தேங்கி சாலையில் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமபடுகின்றனர். அந்த பகுதி வார்டு கவுன்சிலர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை அனைத்து அரசு அதிகாரிகளும் இந்த சாலை வழியாகவே பயணிக்கின்றனர். இருப்பினும் இந்த சாலையை சீரமைக்க இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை. சொகுசு கார்களில் வருவதாலோ என்னவோ இந்த பிரச்சனை அவர்களுக்கு புரியவில்லை என தெரிகிறது. எப்போது இந்த பகுதி […]
சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் நேற்று இரவு மாணவி தற்கொலை செய்ததை அடுத்து அந்த கல்லூரியில் வன்முறை வெடித்தது.இதனால் அங்கு உள்ள இடங்கள் அனைத்தும் தீவைத்து எரிக்கப்பட்டது.இதனால் அந்த இடமே போர்களம் போன்று காட்சியளித்தது.இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலபடுதப்பட்டுள்ளது.அந்த கல்லூரிக்கு ஜனவரி மாதம் வரை விடுமுறையும் அளிக்க பட்டுள்ளது.
கோவை- சென்னை ரயிலில் ஈசா லிங்கத்தை அடையாளமாக்கியது ரயில்வே. உடனடியாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம் அறிவித்தது.மேலும் சில சமூகநீதி இயக்கங்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். முற்போக்கு எண்ணம் கொண்ட பத்திரிகையாளர்கள் முக்கியத்துவம் அளித்து தங்கள் ஊடகங்களில் வெளியிட்டனர்.தீக்கதிர் உள்ளிட்ட பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களிலும் போராளிகள் கொந்தளித்தனர். ரயில்வே நிர்வாகம் பணிந்தது லிங்கம் மாற்றப்பட்டு கோவை ரயில் நிலையத்தின் படம் இடம்பெற வைத்தது…
திருச்சி மாவட்டம் பூவாளூர் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இரத்த வகை கண்டறியும் முகாம் நடைபெற்றது.இதில் மாணவர்கள் கலந்து கொண்டு மிகவும் ஆர்வமாக அவர்களது இரத்த வகையை கண்டறிந்தனர்.இந்த சோதனையை சுடர் இரத்த தான விழிப்புணர்வு குழுவை சார்ந்தவர்கள் இரத்த வகை கண்டறியும் சோதனையை செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் விவசாய தொழிலாளர் சங்கமும், மாதர் சங்கமும் இணைந்து ரேஷன், நகர்ப்புற வேலை வாய்ப்பு, நல திட்ட அமலாக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க கோரி பெரும் திரள் மனு கொடுக்கும் போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது. இதில் சுமார் 3000 பேர்க்கு மேல் கலந்துகொண்டனர்.
சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முந்தி செல்லஉள்ளது. உலகிலேயே சல்பர்-டை-ஆக்சைடு வாயுவை அதிகமாக வெளியிடும் நாடுகளில் இந்தியா முதலிடம் பிடிக்க போவதாக சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 2007 முதல் இந்தியாவில் சல்பர்-டை-ஆக்சைடு உமிழ்வு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவில் 2012-இலிருந்து சல்பர்-டை-ஆக்சைடு உமிழ்வு அதிகரித்துள்ளது. உமிழ்வை கட்டுபடுத்த இந்தியா இதுவரை எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் சீனா இதுவரை 75 சதவீதம்வரை சல்பர்-டை-ஆக்சைடு உமிழ்வை குறைத்துள்ளது. […]
மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியினர் அம்பத்தூர் மண்டலத்தில் வீட்டு வரியை குறைக்க வலியுறுத்தி அம்பத்தூர் மண்டல அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுந்தர்ராஜ் தொடங்கிவைத்தார். நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அனைத்து சுகாதார மையங்களிலும் மருத்துவர்களை நியமித்து மாத்திரை, மருந்துகளை கையிருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவேண்டும், அத்திப்பட்டு கலைவாணர் நகர் பகுதியில் மலைபோல் குவிந்துள்ள குப்பை மேட்டை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும், குடிநீர் தட்டுப்பாடு, பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து […]
சமிபத்தில் நெல்லையில் கந்துவட்டிக்கு எதிராக தீக்குளித்து இறந்த குடும்பத்தினருக்கு நிகழ்ந்த அநிதியை கண்டு கோபப்பட்டு கார்டூனிஸ்ட் பாலா ஒரு கேலிசித்திரம் வரைந்தார்.கார்டூனிஸ்ட் பாலா வரைந்த சித்திரம் அவதூறு செய்வது போல அமைந்தாக கூறி மாவட்ட ஆட்சியர் நந்தூரி அளித்த புகார் கொடுத்ததை அடுத்து, பாலாவை கைது செய்தனர் இதையடுத்து, சென்னையில் கார்டூனிஸ்ட் பாலாவை கைது செய்த போலீசார், நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது பாலா தரப்பில் ஜாமின் […]
சென்னையில் உள்ள பெரும்பாக்கம் பகுதியில் திடீர் நகர் மக்களின் வாழ்விடத்தை இடித்து நிர்கதியாக ஆக்கியிருக்கிறது நமது தமிழக அரசு. தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் இந்த சேரிகளே இனி இருக்காது என கூறி கொண்டு அம்மக்களின் இருப்பிடத்திற்கு எந்த ஒரு மாற்றையும் அறிவிக்காமல் இடித்து நொறுக்கி கொண்டே இருக்க வேண்டுமா..? அப்படி என்றால் அம்மக்களின் வாழ்விடங்களை இடிப்பதால் எங்கு செல்வது எனத்தெரியாமல் தெருவில் கண்ணீரும்,கவலையோடும் வீதியில் வந்து இருக்கிறார்கள் அம்மக்கள்..?
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்தில், பலியான அரசு பேருந்து நடத்துனர் சிவகுமாரின் மனைவி செளந்தரி தனக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம், தனது கைகுழந்தையோடு மனு அளித்தார்.அவருடன் அவரது உறவினர்களும் வந்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் முறையிட்டனர்.
கந்துவட்டி கொடுமைகளால் பாதிக்கப்பட்டோருக்கான பொது விசாரணை நடத்தகோரி அனைத்து கட்சி சார்பில் பரப்புரை கலைப்பயணமானது நெல்லை மேலப்பாளைத்தில் துவங்கியது. இதன் முதல் பயணமாக இன்று, வள்ளியூர், ஏர்வாடி, களக்காடு, சேரன்மாதேவி, அம்பை, விகேபுரம், பொட்டல்புதூர், கடையம், தென்காசி ஆகிய பகுதிகளில் இந்த பரப்புரை நடந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வைப்பாற்றில் உள்ளுர் கட்டுமான பணிகளுக்கு மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி கோரி வைப்பாற்றில் கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் மாரியப்பன் மார்க்சிஸ்ட் கட்சி விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் பா.புவிராஜ் தலைமையில் காத்திருக்கும் போராட்டம் நடத்திய மாட்டு வண்டி தொழிலாளர்கள் . இப்போராட்டம் நடத்தும் தொழிலாளிகளோடு காத்திருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அர்சுனன், மாநிலகுழு உறுப்பினர் R. மல்லிகா, சிஐடியு தலைவர்கள் ரசல், பொன்ராஜ், சக்கரவர்த்தி, முருகன் ஞானதுரை, தேவேந்திரன் உள்ளிட்டோர் […]
கோயம்புத்தூரானது தமிழகத்தின் மான்செஸ்டராக விளங்குகிறது. தொழில்நகரமாக விளங்குகிறது. இந்த கொயம்பத்தூரின் புதிய அடையாளமாக ஈசா மையம் விளங்குகிறது என இந்திய ரயில்வே துறை சொல்லிவருகிறது. தற்போது ரயில் பெட்டியிலும் அந்த ஈசா மையம் போட்டோ போட்டு பெயர் பலகையை ரயில்வே துறை சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் இன்னும் சில எக்ஸ்ப்ரஸ் ரயில்களில் ஈசா மையத்திற்கு ரயில்வே துறை விளம்பரம் செய்து வருகிறது.
கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிவாழ் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும் மீனவர்களின் மீன்பிடி வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தி உள்ளனர். இதனால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த தொடர் தொந்தரவால் மீனவர்கள் பெரும் நஷ்டத்துடன் கரை திரும்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ். பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், ஒரு குறைந்தழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாகவும். அது குமரிக்கடல் முதல் லட்சத்தீவு வரை பரவி உள்ளதாகவும். மேலும் இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். இதிலும் குறிப்பாக குறிப்பாக தென் மாவட்டங்களில் […]
வைகையாற்றில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் இன்று மேலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து மிகுந்த பாதிக்கப்பட்டது. பின்னர் இன்னும் 7 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் அறிக்கை விடுத்ததன் பின்னர், இப்ப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும் இந்த 7 நாட்கள் தண்ணீர் பத்தாது எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
நாசரேத் அருகே மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி தாளாளர் செல்வின் தலைமை வகித்தார். நாசரேத் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், பயிற்சி எஸ்ஐ ரகுபதி பாலாஜி ஆகியோர் பேசினர். மேலும் பாதுகாப்பு பயணத்திற்கான உறுதிமொழி படிவத்தை பெற்றோர் மற்றும் சகோதரரிடம் கையொப்பம் வாங்கிவருமாறு அறிவுறுத்தினர். விழா முடிந்ததும் தலைமை ஆசிரியர் ஜான் செல்வராஜ் நன்றி கூறினார்.