தென் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது இதனிடையில் தூத்துக்குடியில் கடந்த இரு நாட்களாக விடாமால் கனமழை பெய்துவருகிறது நேற்று இரவு பெய்த மாலை காற்றின் காரணமாக தூத்துக்குடியின் முக்கிய சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன சத்யாநகர் பகுதியில் வீடுகளில் விழுந்த மரங்களை தீயனைப்பு துறையினர் அகற்றிவருகின்றனர் . தூத்துக்குடியில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக இன்று தூத்துக்குடி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார் தூத்துக்குடி பற்றிய செய்துகளுக்கு தினச்சுவடு உடன் இனைதிருங்கள் […]
சாத்தான்குளம் அருகே பேக்கரி கடை உரிமையாளரை தாக்கிய பழைய இரும்பு வியாபாரி கைது செய்யப்பட்டார். துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பொத்தன்காலன்விளையில் திருக்கல்யாண மாதா தேவாலயம் உள்ளது. இங்கு நாகர்கோவில் மற்றும் கேரளா பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வந்துசெல்வர். மேலசாத்தான்குளத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் மகன் ஆண்டன்பி ரகாஷ்ராஜ்(36). இவர் சென்னையில் பழைய இரும்பு பொருள் வாங்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஆண்டன்பிரகாஷ் குடும்பத்துடன் பொத்தகாலன்விளை ஆலயத்திற்கு வந்தார். பின்னர் அருகில் உள்ள பேக்கரி […]
மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவுக்கு குடியரசுத்தலைவர் விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருது, மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள், மறுவாழ்வு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக அறிவிக்கபட்டுள்ளது. இந்த விருதானது, டிசம்பர் 3 ஆம் தேதி குடியரசுத்தலைவர் மாளிகையில் வழங்கப்படவுள்ளது. இவர் ஏற்கனவே வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் தூய்மை இந்தியா திட்டத்துக்காக விருது வழங்கி கொவ்ரவிக்கபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக ஆறு நீதிபதிகள் நியமனம். விரைவில் இவர்களுக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவியேற்று வைக்க உள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ராமதிலகம், தாரணி, கிருஷ்ணவள்ளி, ஹேமலதா, ராஜமாணிக்கம், பொங்கியப்பன் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமனம்.
தஞ்சை மாவட்டம் சாந்தபிள்ளைகட்டு பகுதியில் புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை நாளை முதல்வர் எடப்பாடி.K.பழனிசாமி அவர்கள் திறந்து வைக்க எபாடுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இந்த மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக கூறி அந்த பாலத்தை திறக்க கூடாது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இப்போது இந்த பாலத்தை முதல்வர் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இந்நிலையில் அவர்களை விசாரித்த இலங்கை நீதிமன்றம் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்கு அவர்களை டிசம்பர் 11 வரை காவல் நீட்டித்து உத்தரவு பிரபித்துள்ளது. இந்த வழக்கை இலங்கையில் உள்ள பருத்தித்துறை நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் பெரிய சாபக்கேடான சாகுபுரம் DCW ஆலையின் பின்புறம் உள்ள புன்னக்காயல் கடல் பகுதியில் தான் அந்த ஆலையின் கழிவுகள் கலக்கப்படுகின்றது. குறிப்பாக நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் நல்ல மழை பொழிந்தது.இதனால் DCW ஆலையில் இருந்து வழக்கத்தை விட அதிக அளவு கழிவுகள் கடலில் கலக்கப்பட்டதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.DCW ஆலை கழிவுகளுக்கும்,இன்று புன்னக்காயல் கடல் பகுதியில் டால்பின்கள் இறந்ததற்கும் ஆலையின் கழிவுகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
சென்னை அடையாறு ஆற்றின் கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் கழிவுநீர் அதிகமாக கலந்து கடலில் கலக்கிறது. இதன் காரணமாக இந்த முகத்துவாரத்தில் ஆக்சிஜன் மிகவும் குறைந்து காணபடுகிறது. தற்போது இந்த காலமானது மடவை மீன்களின் இனபெருக்க காலமாகும். இதனால் ஆடையாறு முகத்துவாரத்திற்கு வந்த மீன்கள் செத்துமடிந்தன. இந்த இறந்த மீன்கள் லட்சகணக்கில் சென்னை கடலோரம் கரைஒதுங்கின.
வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் லாபம் குவிக்கும் ரிபைனரி பிரிவை தனியாருக்கு தாரை வார்க்கும் நிர்வாக முடிவை எதிர்த்து நேற்று ஆலை முன்பு உப்பள தொழிலாளர் சங்கம் (CITU) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு உப்பு நிறுவனத்தின் 5500 ஏக்கர் உப்பளங்களையும், தமிழக உப்பு சந்தையையும் கார்பரேட் டாடாவுக்கு தாரை வார்க்கும் திட்டமிட்ட சதியை முறியடிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் (CITU) நடத்தினர்.
நாகர்கோவிலில் பார்வதிபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை மத்திய இணை அமைச்சர் திரு.பொன்.ராதாகிருஸ்ணன் அவர்கள் அதன் பணிகளை மேர்பார்வையிட்டார். இதனை நேற்று( 26.11.2017 ) அதன் பணிகளை மேற்பார்வை இட்டு சென்றார்.
இந்தியாவின் முதல் திருநங்கை மருத்துவராக போகும் முதல் திருநங்கை தூத்துக்குடியை சேர்ந்த தாரிகா பானு. இவர் சென்னை அம்பத்தூர் காமராஜர் அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் படித்தவர். தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினத்தவர் என்று பதிவு செய்து பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியது முதலில் இவர்தான். பள்ளிப்படிப்பை தொடர்ந்து இவர் மருத்துவ கல்லூரியில் சேர அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் இடஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவ கல்லூரியில் இடம் வேண்டும் என கோரப்பட்டது. […]
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள விட்டிலாபுரத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான விட்டிலாபுரம் மணக்கரை சாலை உள்ளது. இந்த சாலை 3 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. இந்த சாலை வழியாக முத்தாலங்குறிச்சி, இந்திரா நகர், ஆழிகுடி,பொந்தன்பொழி உள்பட பல கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளது. முத்தாலங்குறிச்சியில் உள்ள சுமார் 5 செங்கல்தொழில்சாலைக்கு இந்த வழியாகத்தான் தினமும் 100க்கு மேற்பட்ட லாரிகள் சென்று வருகிறது. தினமும் டவுன் பஸ் 16 சுற்றுகளும், சுமார் 20 […]
உயிர் பலியை தடுக்க ஹெல்மேட் அணிய வலியுறுத்துவது அவசியம் தான்… ஆனால் சேலத்தில் இதற்காக காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கை என்பது பொதுமக்களை அச்சுறுத்துவதாக உள்ளது. உயிர் பலியை தடுப்பதற்காக சோதனை மேற்கொள்ளாமல் உயர் அதிகாரிகளின் உத்தரவிற்காக ( நாள் ஒன்றுக்கு 100 வழக்கு பதிவு செய்ய வேண்டும் ) போக்குவரத்து காவல்துறையினர், சாதாரண காவலர்களின் உதவியோடு பிரதான சாலைகளின் குறுக்கே நின்று குற்றவாளிகளை பிடிப்பது போன்று துரத்தி, துரத்தி பிடித்து வழக்கு பதிவு செய்வது வருத்தப்பட வைக்கிறது. […]
இரட்டை இலையை மீட்டுவிட்டோம் என்று ஒபிஎஸ் குதூகலிக்கிறார் முடக்கியதே இவர்தானே. இவரைப் போலவே தேர்தல் ஆணையத்திலும் “நியாயவான்கள்” நிறைந்திருக்கிறார்கள். ஒபிஎஸ் சோடு 12 எம்எல்ஏக்கள் போய்விட்டதால் முடக்கினோம் என்றவர்கள் தினகரனோடு 20 எம்எல்ஏக்களே இருப்பதால் ஒபிஎஸ் உள்ள அணியிடம் கொடுத்து விட்டோம் என்கிறார்கள்… இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா மற்றும் TTV தினகரன் அணியை சேர்ந்த சில நிர்வாகிகள் உசிலம்பட்டியில் குரங்குகளின் கையில் பூ மாலை என போஸ்டர் ஓட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வருகிற டிசம்பர் 3ம் தேதி கோவை மாநகரில் MGR நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது.இதனையடுத்து கோவையில் உள்ள அவினாசி சாலை முழுவதும் சாலையில் குழி தோண்டி கட் அவுட் மற்றும் ஆர்ச் பணிகள் நடந்து வருகிறது. இன்று காலை கோவை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அருகே ரகு என்கிற இளைஞர் இருசக்கரவாகனத்தில் வந்த போது சாலையில் கட்டிய ஆர்ச் மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வாலிபர் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.இதனையடுத்து வீட்டில் பெற்றோர்கள் இவருக்கு திருமண […]
இன்று பட்ட பகலில் திண்டுக்கல் நகர பகுதியில் துப்பரவு செய்யும் திண்டுக்கல் மாவட்டம் நெட்டுதெருவை சேர்ந்த பாலமுருகன்,சரவணன்,வீரா ஆகியோர் வெவ்வேறு இடங்களில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலிசார் சடலங்களை எடுத்து போக்குவரத்தை சீர் செய்தனர் . கொலையின் காரணம் என்ன என்றும் கொலை செய்தவர்கள் யார் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை நகராட்சி 23வது வார்டு, நித்திய கல்யாணி புரம்,பர்மாகாலனி குளக்கால் தெரு.இப்பகுதி கட்டுமான தொழிலாளர்கள்,மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அதிகம் வாழும் பகுதி என்பதாலோ என்னவோ குளக்காள் தெருவை பராமரிப்பதில் கிட்டத்தட்ட நகராட்சி நிர்வாகம் மறந்துவிட்டது எனலாம். தற்போது மின்சார வாரியமும் இப்பகுதி மக்களின் உயிரை காப்பதில் இருந்து விலகி நிற்கிறதோ என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.மேலும் இந்த உயர் மின்னழுத்த எச்.டி கம்பத்தில் இரவு நேரங்களில் தீப்பிடித்து எரிவதாலும் அப்பகுதி மக்கள் ஒருவித […]
நாமக்கல் ஆரியபவனில் ,3வயது குழந்தைக்கு தனியாக உணவுக்கு டோக்கன் வாங்க வற்புருத்திய அவலம். GST அறிவித்தால் நாடு வளம் பெறும் என்று கூறிய மதிய அரசு 3 வயது குழந்தைக்கு உணவு இல்லை பணம் தான் முக்கியம் என்று மக்கள் மனதை மாற்றி உள்ளது.தாங்கள் வாங்கிய உணவில் கொடுக்க கூடாது தனியாக வாங்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளது இந்த வீடியோ தொகுப்பு
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலையங்களுள் ஒன்றுதான் திருச்செந்தூர் முருகன் கோவிலாகும்.ஆனால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் காதுகுத்துவதற்கு ரூ.50 கட்டணம் என்று போர்டு வைத்துவிட்டு ரூ.70 கட்டணம் வசூலிக்கும் அக்கிரமம் இது பற்றி கேள்வி கேட்டால் 50ரூபாய்க்கு மட்டும் பில் தருகிறார் மீதி 20ரூபாய்க்கு தேவையில்லாத புத்தகங்களை கையில் திணிக்கும் அலுவலர் இந்த நிலையை நிர்வாகம் மாற்ற வேண்டும் என கோவிலுக்கு வரும் பக்தர்கள் முருகனிடமும் மற்றும் கோவில் நிர்வாகத்தையும் முறையிட்டு செல்கின்றனர்.
தமிழகத்தில் இந்த வருடம் பெய்த வடகிழக்கு பருவமழையால் தமிழகமே ஸ்தம்பித்து போனது. இதில் சென்னை, நாகபட்டினம், கடலூர் போன்ற மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின. இதில் நாகபட்டினம் மாவட்டதிலிலுள்ள வேதாரண்யம் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் பகுதியில் மழை நின்று 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் வெள்ளநீர் வடியாமல் உள்ளது. இதன் காரணமாக வேதாரண்யம் சுற்று வட்டார பகுதி விவசாய நிலங்கள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.அந்த பகுதியிலிலுள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் மழைநீர் வடியாமல் […]