கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே இறவிபுத்தன்துறையில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி கண்ணை கட்டி போராட்டம்.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவியை உயர் சிகிச்சைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் விசாரணை. ஆம்புலன்ஸ் தராததால் மாணவி உயிரிழப்பு என புகார். மாணவி உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – மருத்துவத்துறை இயக்குநர் இன்பசேகரன் கூறியுள்ளார். மருத்துவர், மருத்துவமனை கண்காணிப்பாளர், ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது – இன்பசேகரன்
திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட வந்த மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு சங்க தலைவர் ஜெயராமன் கைது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் கோரி வடபட்டினம் கிராம மக்கள் சாலை மறியல், கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு.
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக நாகையில் பேரணி நடத்த போலீசார் தடை, தடையை மீறி மீனவர்கள் குவிந்து வருவதால் பதற்றம்
காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நாகையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்தினர், மீனவர்கள் போராட்டம் கடந்த 24 ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் இதுவரை திரும்பவில்லை.
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் கடலோர காவல்படையின் கப்பல் ஈடுபட்டுள்ளது பொன்.ராதாகிருஷ்ணன்.
திருநெல்வேலியில் காணாமல் போன மீனவர்களை மீட்க வேண்டும், இறந்த மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்க கோரி கூத்தன்குழியில் மீனவ மக்கள் பேரணியாக சென்று கடலில் இறங்கி போராட்டம்.
திருச்சியில் தொடர் வழிபறியில் ஈடுபட்டு வந்த அப்பு என்பவர் கைது; அவரிடமிருந்து 28 சவரன் நகை, ரூ.20,500 ரொக்கம், 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை.
சென்னை அருகே அண்ணாசாலையில் மின்வாரிய அலுவலகம் அருகே பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்கள் தீப்பிடித்தது.
நாகையில் 2 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சுவார்த்தை
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வே.புதுக்கோட்டையில் மர்மக் காய்ச்சலுக்கு பிரியதர்ஷினி என்ற 11 வயது குழந்தை உயிரிழப்பு.
ஒகி புயலில் சிக்கி கடலில் மாயமான மீனவர்களை மீட்கக் கோரி குழித்துறையில் நடைபெற்ற ரயில்மறியலில் ஈடுபட்ட 2,000 பேர் மீது மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு..
ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தரக் கோரி கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவிலில் கடலில் இறங்கி 3000க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டம்
கடலூர் மாவட்டத்தில் மாயமான மீனவர்களை மீட்கக் கோரி 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோட்டமங்கலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மிதுன் என்ற மூன்று வயது சிறுவன் உயிரிழப்பு.
வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக கூடுதலாக தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.
காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கக் கோரி நாளை பேரணி மற்றும் உண்ணாவிரதம் நடத்த கடலூர் மாவட்ட மீனவர்கள் முடிவு.
கோயம்புத்தூர் மாவட்டம் மத்தம்பாளையத்தில் தேவாலயத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் காயம் என தகவல்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் மீனவர் காலனியைச் சேர்ந்த அஞ்சப்பன், சின்னையன், கல்விச்செல்வன், இளங்கோவன் உட்பட 13 பேர் மீனவர்கள் ராஜி என்பவருக்கு சொந்தமான படகில் கடந்த மாதம் 26ம் தேதி கன்னியாகுமரி பகுதியில் உள்ள தூத்தூரில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது ஓகி புயலில் சிக்கிய அவர்களின் படகு சிதிலம் அடைந்து, சின்னபின்னமானது. இதில், தத்தளித்த மீனவர்களை கேரள அரசு மீட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் சொந்த ஊரான புஷ்பவனத்திற்கு […]