சங்கர் கொலை வழக்கு: நடந்தது என்ன? உடுமலை அருகே குமரலிங்கத்தைச் சேர்ந்த சங்கர், கவுசல்யாவை காதலித்து கலப்புத் திருமணம் செய்தார். 2.சாதி மறுப்பு திருமணம் செய்ததால் 2016ல் உடுமலை அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார் சங்கர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரும் இன்று திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட 11 பேரில் 8 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அலமேலு தீர்ப்பு வழங்கினார் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை; […]
கவுசல்யாவுக்கு ஆதரவாக பேட்டி அளித்த மாதர் சங்க நிர்வாகிகள் மீது தாக்குதல் முயற்சி.கவுசல்யாவுக்கு ஆதரவாக பேட்டி அளித்த மாதர் சங்க நிர்வாகிகள் மீது தாக்குதல் முயற்சி
உடுமலை சங்கர் கொலை வழக்கில் கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை, உறவினர் பிரசன்னா ஆகிய 3 பேர் விடுதலை! உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கு: கவுசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம்.உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் 9 ஆவது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 8 பேரில் 6 பேருக்கு தூக்கு தண்டனை மேலும் செய்திகளுக்கு […]
உடுமலை சங்கர் ஆணவப்படுகொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார் ஆகியோருக்கு தூக்குத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு
தனது மகளையும், இன்னொருவரின் மகனையும் கொலை செய்ய அனைத்து வகையிலும் உதவியாக இருந்த கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கே அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் – நீதிபதி
குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையில், தனக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என கவுசல்யாவின் தந்தை சின்னசாமி தரப்பு வாதம் சங்கர் கொலை வழக்கில் பிற்பகல் 12.50 மணிக்கு தண்டனை அறிவிக்கப்படும்- நீதிபதி அறிவிப்பு . மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ..
உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 11 பேரும் குற்றவாளி என அறிவிப்பு.திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்
திருச்சி உறையூர் சாலை ரோட்டில் 2 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது இடிபாடுகளை அகற்றும் பணியில் போலீசார், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்
வீரபாண்டியன்பட்டணத்தில் டிவி பார்த்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் வீடுபுகுந்து ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணம், மெடனா தெருவைச் சேர்ந்தவர் சேசைய்யா (80). இவரது மனைவி எல்ஜின் அகாட்டார் (76). இவர்களுக்கு 2மகன், 2மகள் உள்ளனர். இதில் இளைய மகன் விக்னேசியஸ்(40)காயல்பட்டினத்தில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். அவருடன் சேசைய்யா, எல்ஜின் அகாட்டார் ஆகியோர் வசித்து வருகின்றனர். இரவில் எல்ஜின் அகாட்டார் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். கணவர் […]
துாத்துக்குடியில் இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்லும் இளைஞர்களை சிசிடிவி மூலம் கண்டறிந்து அவர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. துாத்துக்குடி நகரில் வேகமாக இருசக்கர வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் அதிகரித்து விட்டனர்.இதனால் மற்றவர்களுக்கு இடையூ றாகவும் விபத்து ஏற்படுத்தும் விதமாக இருந்தது.இது குறித்து மாவட்ட எஸ்பி.மகேந்திரன் அறிவுரையின்படி ஏஎஸ்பி செல்வன் நாகரத்தினம் நகரில் வேகமாக செல்லும் இளைஞர்களை சிசிடிவி மூலம் கண்டறிந்து அவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடத்தினார்.இதில் 30 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.வேகமாக செல்வது […]
வாணியம்பாடியில் கள்ளச்சாராய விற்பனை, போலி மது தயாரிப்பு குறித்து வேலூர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில் மதுவிலக்கு பிரிவு போலீசார் சோதனை; கள்ளச்சாராய விற்றதாக 7 பேரிடம் விசாரணை.
மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள 528 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்; சென்னை மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 2 பேர் கைது
ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக திருவாரூர் நன்னிலத்தில் போராட்டம் நடத்த முயன்றதாக பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 129 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
வன்முறையை தூண்ட சதி செய்ததாக 7 பேர் கைது கன்னியாகுமரியில் சுப.உதயகுமார் மற்றும் 17 பாதிரியார்கள் மீது வழக்கு
பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய மஸ்கட், மொரீசியஸ் விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன.
சென்னை பம்மல் அருகே கிருஷ்ணா நகரில் தாய், மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்று கணவன் தற்கொலை முயற்சி.
ஒகி புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய கன்னியாகுமரி செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.அவர் விமானம் மூலம் தூத்துக்குடி வந்து பின்னர் சாலை மார்க்கமாக கன்னியாகுமரி செல்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், ‘ஓகி’ புயலில் சிக்கி காணாமல் போன மீனவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘ஓகி’ புயலில் சிக்கிய மீனவர்களை மீட்பதில் அக்கறை காட்டவில்லை எனக் கூறி, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் மீனவர்களின் போராட்டம், நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்த நிலையில், புயலில் சிக்கி மாயமான […]
இன்று காலை 11/12/2017,சற்றுமுன் ஒக்கி புயலின் போது மீன் பிடிக்கச் சென்று புயலில் பாதிப்புள்ளாகி இறந்து போன குளச்சல் பகுதியைச் சேர்ந்த மீனவ சகோதரர்களான ஜஸ்டின் பாபு மற்றும் ஜான் டேவிட்சன் ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது குறைகளை தெரிவித்தனர். அதனை அவர் உரிய கவனம் செலுத்துவதாக அம்மக்களிடம் தெரிவித்துள்ளார்.