ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட கன்னியாகுமரிக்கு வந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
பொன்னேரி அடுத்த மாலிவாக்கத்தில் உள்ள நண்பர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை; மாற்றுத்திறனாளியிடம் ரூ.500 லஞ்சம் பெற்ற வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் ஸ்ரீதர்
தூத்துக்குடி மாவட்டம், திருசெந்தூரில் உள்ள முருகன் கோயிலில் மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் பலியானார். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோயில் மிகவும் பிரபலம். இங்கு எல்ல நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் இருக்கும். இங்குள்ள சுற்று புறத்தில் பொது தரிசனத்திற்கு செல்லும் வழியில் தான் மேற்கூரை இடிந்துள்ளது. இந்த மேற்கூரை மிகவும் மோசமாக இருந்து வந்துள்ளது. இதனை கோயில் நிர்வாகம் கவனிக்காமல் விட்டதால், தற்போது இந்த கூரை இடிந்து விழுந்துள்ளது.
தூத்துக்குடியில் மத்திய அரசையும், மாநில அரசுகளையும் கண்டித்து மீனவர்களுக்கு ஆதரவாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தரவேண்டும். மத்திய, மாநில அரசுகள் மீனவர்களை தேட துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஓகி புயலின் கோர தாண்டவத்தால், கன்னியாகுமரி, தூத்துக்குடி மீனவர்கள் பலர் காணாமல் போயினர். இவர்கள் பலர் இன்னும் வீடுதிரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். சிலர் இறந்தும் அவர்களின் உடல்கள் கிடைக்காமல் உள்ளன. […]
கன்னியாகுமரி: நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சாரல் மழை. தற்போது தான் ஒகி புயல் ஓய்ந்த நிலையில் மீண்டும் மழை தொடங்கியுள்ளது.
கேரள மாநிலம் ஈடுபடக்கூடிய மீட்பு, நிவாரண பணிகளில் 10% பணிகளிலாவது தமிழ்நாடு அரசு ஈடுபடவேண்டும்: மு.க.ஸ்டாலின்
புயல் பாதித்த கன்னியாகுமரியை, பேரிடர் மாவட்டமாக அறிவிக்க கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம், எதிர்க்கட்சி ஸ்டாலின் மனு.
கொள்ளையர்களை பிடிக்க அதிக அளவிலான காவலர்களை அனுப்பியிருந்தால் எனது கணவர் உயிரிழந்திருக்க மாட்டார் என அவரது மனைவி பானு ரேகா உருக்கம்.
பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஞானசிவகுமார் மீது பணமோசடி புகார்; திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு
உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் உடல் அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம், மூவிருந்தாலியில் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது.
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் புதிய வளாக இயக்குனராக டி.எஸ்.சௌத்ரி நியமிக்கபட்டுள்ளார்.முன்பு இருந்த வளாக இயக்குனர் ஜின்னா மும்பையில் உள்ள அணுமின் நிலைய தலைமை அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை இந்திய அணுமின் கழக தலைவர் எஸ்.கே.சர்மா பிறப்பித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு பிரச்னையை போல மீனவர்கள் விவகாரத்திலும் சிலர் தவறான கருத்துக்களை பரப்புகின்றனர் – மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
புயல் பாதிப்பால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கான இழப்பீடு குறித்த முதல்வர் பழனிசாமியின் அறிவிப்பை அடுத்து குமரி மாவட்டத்தின் மீனவ கிராமங்களில் நடைபெற்றுவந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்.
சிவகாசி அருகே மக்கள் தொடர்பு முகாமில் பங்கேற்க அரசுப்பேருந்தில் செல்கிறார் விருதுநகர் ஆட்சியர் கல்லமநாயக்கன்பட்டி முகாமில் பங்கேற்க துறைசார் அதிகாரிகளுடன் ஆட்சியர் சிவஞானம் பயணம்.
கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரி உள்பட 102 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன இந்தாண்டு முதல் முறையாக வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி 47.5 அடி முழு கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47 அடியாக உள்ளது
தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, பிளவக்கல் அணை உள்ளிட்ட பகுதிகளில் மழை
சங்கரின் மனைவி கவுசல்யாவுக்கு அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன்
கன்னியாகுமரி மாவட்டம் கல்படியில், ஒகி புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு.கல்படி பகுதியில் ஒகி புயலால் பாதித்த பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு; ஆய்வில் அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்பு
தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, உறவினர் பிரசன்னா ஆகியோரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்.சங்கர் கொலை வழக்கில் கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம் நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது – கவுசல்யா