சிவகங்கை இளையான்குடி பகுதியில் சவடுமண் எடுக்க இடைக்கால தடை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. சவடு மணல் எடுப்பது குறித்து விசாரிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்து, 2 வாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு
ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி இதுவரை 11 கம்பெனி துணை ராணுவப்படையினர் சென்னை வந்துள்ள நிலையில், மேலும் 5 கம்பெனி துணை ராணுவப்படை வருகை.
கடலூரில் காணாமல் போன மீனவர்களை மீட்க கோரி, உறவினர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் மனு. ஆளுநரிடம் மனு அளிக்க விருந்தினர் மாளிகையில் 200க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருப்பு.
கன்னியாகுமரியில் ஒக்கி புயல் பாதிப்பு மற்றும் மாவட்டத்தின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
நாமக்கல்: கோவை ஏ.டி.எம்., கொள்ளை வழக்கில் 5 கொள்ளையர்கள் கைதான நிலையில், அவர்கள் தங்கியிருந்த வீட்டில் நாட்டு துப்பாக்கி பறிமுதல்
மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் அருகே மைக்குடி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி என்பவர் வமதுரை: திருமங்கலம் அருகே மைக்குடி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி வயல் வேலையில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
சேலம் அரசு கலை கல்லூரி வளாகத்திலுள்ள கிணற்றிலிருந்து 10 வயதுள்ள சிறுவன் உடல் கண்டெடுப்பு; சிறுவன் யார், உயிரிழப்புக்கான காரணம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை.
தூய்மை இந்தியா திட்டம் குறித்து கடலூர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு
கடலூர் : ஆளுநரின் ஆய்வு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம். * கடலூர் பாரதி சாலையில் திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்; போக்குவரத்து நிறுத்தம்.
கடலூரில் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில், குமராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த 1 மணி நேரமாக பரவலாக மழை
கன்னியாகுமரி அருகே 5 கேரள அரசு பேருந்துகள் உட்பட, 20 பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் மாவட்ட ஆண்கள் சிறையிலிருந்து தப்பிய சகாதேவன் என்ற விசாரணை கைதி கிருஷ்ணகிரி பர்கூரில் சிக்கினார்.. சிறையின் பின்பக்க மரத்தில் லுங்கியை கட்டி சுவர் ஏறி சகாதேவன் தப்பியதாக போலீசார் தகவல் கிடைத்துள்ளது.
ஓகி புயலால் தமிழகத்தில் இதுவரை 14 பேர் உயிரிழப்பு” மாயமானவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 433 பேர், கேரளாவைச் சேர்ந்தவர்கள் 186 பேர்” “ஓகி புயலால் இதுவரை 619 பேரை காணவில்லை” -மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்..
சென்னை ராயபுரத்தில் உள்ள குக்கர் கடையில் தேர்தல் பார்வையாளர்களுடன் வருமான வரி அதிகாரிகள் இணைந்து சோதனை.
எதிர்க்கட்சியாக இருந்தாலும் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் காங்கிரஸ் கட்சி தேவையான உதவிகளை செய்யும் – ராகுல் காந்தி காணாமல் போன மீனவர்களை குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குரல் கொடுக்கும்.
நாடு முழுவதும் மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள் – ராகுல் வேதனை * மத்தியிலும், மாநிலத்திலும் நாங்கள் ஆட்சியில் இல்லாவிட்டாலும், உங்கள் பிரச்சனைகளை உரத்த குரலில் எழுப்புவோம் – ராகுல்காந்தி
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட சின்னத்துறை கிராமத்தில் காணாமல் போன மீனவர்கள் குறித்து குடும்பத்தினரிடம் கேட்டறிந்து வருகிறார் ராகுல் காந்தி 400 க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை என மீனவ மக்கள் ராகுலிடம் முறையீடு.
திருச்செந்தூர் கோயில் பிரகாரம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ5 லட்சம் நிவாரணம் . காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு