அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு(ஜாக்டோ-ஜியோ கிராப்ட்) சார்பில் கடலூர் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான ஆனந்ததுரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகபாண்டியன் வரவேற்றார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அன்பரசன், குரூப்-2 நேரடி நியமன அலுவலர்கள் சங்க மாநில துணை தலைவர் சிவா, அரசு அலுவலக உதவியாளர்கள் மாவட்ட தலைவர் பச்சையப்பன், அரசு வாகன ஓட்டுனர் […]
அரியலூர், பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், அரியலூர் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைபொது செயலாளர் வைத்தி தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சின்னதுரை வரவேற்று பேசினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு ரூ.50 லட்சம் தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கண்ணன், செந்தில்குமார் மற்றும் பத்து ஒன்றியங்களை சேர்ந்த அனைத்து அணி […]
தாயை கொலை செய்த வழக்கில், தஷ்வந்துக்கு வரும் 29 வரை நீதிமன்ற காவல் – காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவு..
திருச்சி மாவட்டம் அருகே விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கவுண்டம்பட்டியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க 15 கம்பெனி துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது – தேர்தல் ஆணையம் அறிக்கை. தேர்தலை நியாயமாக நடத்த 7 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் – தேர்தல் ஆணையம்..
குஜராத், இமாச்சலபிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக முன்னிலையில் முன்னிலையில் இருப்பதால் சென்னை கமலாலயத்தில் இனிப்புகள் வழங்கி பாஜகவினர் கொண்டாட்டம்.
ஒவ்வொரு வாக்களர்களும் ஓட்டுக்கு பணம் பெறுவதாக திமுக சித்தரிக்கிறது. தேர்தலை நிறுத்தும் நோக்கத்துடன் திமுக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் புகார்.
கன்னியாகுமரியில் ஓகி புயல் தாக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கிறது. ஆனாலும் அவர்களால் முழுமையாக சுற்றி பார்க்க முடியவில்லை. தற்போது, கடல்பகுதியில் அதிகமாக சூறைக்காற்று வீசுவதால் கடந்த இரண்டு நாட்களாக படகு போக்குவரத்து விவேகானந்தர் சிலைக்கு செல்ல நிறுத்த பட்டிருந்தது. தற்போது இன்னும் சூறைக்காற்று வீசுவதால், தொடர்ந்து மூன்றாவது நாளாக படகு போக்குவரத்து நிறுத்த பட்டுள்ளது சுற்றுலா பயனிகுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சேலம்: மேட்டூர் அருகே உபரி நீர் கால்வாயில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை மீட்க தீயணைப்புத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பெரம்பலூர் தண்ணீர்பந்தல் அருகே பாலத்தின் மீது பயணிகள் வேன் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் அந்த விபத்தினால் சுமார் 11 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனால் அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேலூர்: சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு கடத்த முயன்ற 200 கிலோ ரேசன் அரிசி ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தில் சிக்கியது.பின்பு பறிமுதல் செய்த அரிசியை திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். மேலும் ரேசன் அரிசியை கடத்திவந்தது யார் என்பது குறித்தும் ரயில்வே போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இராமேஸ்வரத்திலிருந்து நேற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள், கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருக்கும் போது அங்கு 5 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததோடு கற்கள் மற்றும் பாட்டில்கள் கொண்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மீனவர்களின் படகில் ஏறி மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் வெறுங்கையுடன் திரும்பியுள்ளனர். […]
சென்னை : மதுரவாயலில் நிக்கில்சன் என்பவர் தனது உறவினர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தார். அனுமதித்து விட்டு வீட்டுக்கு திரும்புகையில் தான் கொண்டு வந்த ஆடி சொகுசு காரை மறந்துவிட்டு அப்பல்லோ மருத்துவமனையின் ஆம்புலன்சை ஓட்டி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்றவுடன்தான் மனைவி பார்த்து அதிர்ச்சியாகி பின்னர் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குள்ளாக மருத்துவமனை நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளது.
தூத்துக்குடி; லூர்தம்மாள்புரத்தில் இருந்து கடந்த 12–ந்தேதி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர். தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த சேசுராஜிக்கு சொந்தமான நாட்டுப்படகில் லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த கென்னடி வயது 43 பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த பிரதீப் 32 வயது,மற்றும் சதன், வெனிலாஸ், லைஸ்டன் ஆகிய 5 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கடலில் மீன்பிடித்து விட்டு, நேற்று முன்தினம் இரவில் நாட்டுப்படகில் கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். திடீரென்று படகில் ஓட்டை விழுந்தது.இதனால் படகு முழுவதும் தண்ணீர் நிரம்பியதால், […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஆர்.காவனூர் கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல்.
திருவாரூர் மாவட்டம் அருகே மன்னார்குடி வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ 2.43 கோடி மோசடி செய்த வழக்கில், நகை மதிப்பீட்டாளர் உள்ளிட்ட 4 பேர் கைது..
திருச்செந்தூர் சுப்பிரமணிசுவாமி கோவில் பிரகாரம் இடிந்து விழுந்ததில் பலியானவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 108 பேர் மீது வழக்குப்பதிவு!
நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவிற்கு உட்பட்ட சங்கரன்பந்தல் மருத்துவமனை ஆகும். இங்கு சுமார் 24 கிராம மக்களின் மருத்துவ சேவை மையமாக உள்ளது சுமார் 50 வருடங்களாக இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. ஆட்சிகள் மாறினாலும் இந்த மருத்துவ மனைகளின் காட்சிகள் மாறுவதில்லை. இந்த மருத்துவ மனையில் கட்டப்பட்ட கட்டிடங்கள் மிகவும் பழடைந்து நிலையில் காணப்படுகின்றன. உள்ளிருக்கும் இரும்பு மற்றும் சிமெண்ட் செகில்கள் கீழே விழும் நிலையில் ஆபாய காட்சியாகவே காணப்படுகின்றன. இவற்றை மறு சீரமைப்பு செய்யும் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூருக்கு அருகில் உள்ள நா.முத்தையாபுரம் என்னும் கிராம பகுதியில் உள்ள எல்லப்பன் நாயகன் குளத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருக்கின்றது.இதனால் அக்குளம் பராமரிப்பு இன்றி மிகவும் அசுத்தமாக காட்சியளிக்கிறது.மேலும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் அப்பகுதியில் வாழும் மக்களும்,வாலிபர்களும்,மாணவர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பாஜக வேட்பாளராக களமிறங்கவில்லை என்று கங்கை அமரன் விளக்கமளித்துள்ளார். இதைப்பற்றி இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமீபத்தில் எனக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தேன் . உடல் நலக்குறைவு காரணமாகவே இந்த முறை ஆர்.கே.நகரில் போட்டியிடவில்லை. பா.ஜனதா சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகிறார் என்று அவர் தெரிவித்தார் . இந்த இடைதேர்தலில் ஆர்.கே.நகர் மக்கள் கரு.நாகராஜனுக்கு வாக்களித்து பா.ஜனதாவை வெற்றி பெற செய்ய […]