திருவள்ளூரை அடுத்த மணவூர் காலனியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் வெங்கடேசன் (வயது 27). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வெங்கடேசன் பெரியகளகாட்டூர் பகுதியில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களாக கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கோபித்துக்கொண்ட வெங்கடேசன், வேலைக்கு செல்வதற்காக […]
ஜாக்டோ-ஜியோ-கிராப் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் புதிய பஸ்நிலையம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் ரோசன் ராஜ் தலைமை தாங்கினார். தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி போதராஜ், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மைய சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி […]
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் இருந்து தட்டப்பாறை செல்லும் ரோட்டில் கல்லூரணி என்னும் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் தண்ணீர் இன்றி காணப்படுகிறது. கண்மாயின் நடுப்பகுதியில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. இதனை அந்த பகுதியில் சென்ற மக்கள் பார்த்தனர். அவர்கள் சந்தேகத்தின் பேரில் புதியம்புத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் அந்த சாக்கு மூட்டையை திறந்து பார்த்தனர். அந்த மூட்டையில், 1½ அடி உயரமும், 50 கிலோ எடையும் கொண்ட சிவலிங்கம் […]
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள வெண்ணவாசல், பருத்தியூர், காவாலக்குடி, நாளில்ஒன்று, கண்கொடுத்தவனிதம், விடயபுரம், முசிறியம், திட்டாணிமுட்டம், மேலராதாநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் சம்பா சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த கிராமங்களுக்கு தேவையான பாசனநீர் பாண்டவையாற்றில் இருந்து கிடைக்கிறது. இந்த நிலையில் பாண்டவையாற்றில் இருந்து கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் அந்த கிராமங்களில் சம்பா பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன. இதே நிலை நீடித்தால் பயிர்கள் […]
நெல்லை மாவட்டம் வடகரை அருகே உள்ள மேக்கரை அடவிநயினார் அணைப்பகுதியை சேர்ந்தவர் காஜா மைதீன். இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 15-ந்தேதி காலையில் இவர் ராயர்காடு பகுதியில் மேய்ச்சலுக்கு ஆடுகளை விட்டு இருந்தார். அப்போது புதருக்குள் இருந்து வந்த 2 சிறுத்தைகள், ஆடுகள் மீது பாய்ந்து தாக்கின. ஒரு ஆட்டை அடித்துக் கொன்று தின்றன. மேலும் 2 ஆடுகளை அடித்துக் கொன்று காட்டுக்குள் இழுத்து சென்று விட்டன. ஒரு ஆடு காயத்துடன் தப்பி ஓடி வந்து […]
தேனி என்.ஆர்.டி. சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 1–12–2015 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் உடனே வழங்க வேண்டும். களப்பிரிவு ஊழியர்களுக்கு கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். பகுதிநேர பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த […]
குடிநீர் வடிகால் வாரிய சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சிவகங்கை மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார். கூட்டத்தில் தென்மண்டல செயலாளர்கள் ராமநாதன், சிவசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் உள்பட மொத்தம் 33 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு […]
சேலம் கன்னங்குறிச்சி அண்ணாநகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், தனது மனைவி சித்ரா பெயரில் ஆன்லைனில் பிட் காயின் (சர்வதேச கரன்சி) வாங்கி, அதன்மூலம் வருவாய் ஈட்டும் தொழிலை செய்து வந்தார். அந்த வகையில் ஆன்லைன் மூலமாக பிட் காயின் நிறுவனத்தில் முதற்கட்டமாக ரூ.13 லட்சத்தை சக்திவேல் முதலீடு செய்தார். மேலும், தனது வருமானத்தை பெருக்க வேண்டி மீண்டும் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் முதலீடு செய்ததாக […]
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 23–ந்தேதி ராமேசுவரம் வருகை தர உள்ளார். விமானம் மூலம் மதுரை வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் மண்டபம் முகாமில் உள்ள ஹெலிபேட் தளத்தில் வந்திறங்குகிறார். பின்னர் தேசிய நெடுஞ்சாலை வழியாக காரில் ராமேசுவரம் செல்கிறார். ஜனாதிபதியின் வருகையையொட்டி மாவட்ட கலெக்டர் நடராஜன், போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ராமேசுவரம் வந்தனர். அப்போது மண்டபம் முகாம் ஹெலிகாப்டர் தளம், அப்துல் கலாம் நினைவிடம், […]
பெரம்பலூர் மாவட்டத்தில் வயலுக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கும் போது ஏற்பட்ட பாதிப்பினால் சித்தளியை சேர்ந்த ராஜா, ஓதியத்தை சேர்ந்த செல்வம், பசும்பலூரை சேர்ந்த அர்ஜூனன், கூத்தூர் ராமலிங்கம் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் அருங்கால் கல்லக்குடியை சேர்ந்த ராமன், சேலத்தை சேர்ந்த சுரேஷ்குமார் ஆகியோர் இறந்திருப்பதாகவும், அவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பில் அரசுக்கு பரவலாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த கோரிக்கையை வலியுறுத்தி பெரம்பலூர் பழைய பஸ்நிலையம் […]
ஊட்டி சிறுவர் மன்றம் அருகே அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 16–ந் தேதி கொடியேற்றத்துடன் ஆண்டு திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. நேற்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், உஷ பூஜை, சீவேலி, பஞ்ச கவ்வியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு ‘சாமியே சரணம் அய்யப்பா‘ என்ற கோஷத்துடன் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை […]
நாமக்கல்லில் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை சார்பில் “வருடம் ஒரு கன்று- கறவைமாடுகளில் கருத்தங்காமை பிரச்சினைகளுக்கான தொழில்நுட்ப மேலாண்மை உத்திகள்” குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது. நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அகிலா அனைவரையும் வரவேற்று பேசினார். கண்காட்சி மற்றும் கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த 10-க்கும் மேற்பட்ட அரங்குகளை பார்வையிட்டார். கால்நடைகளுக்கு அளிக்கப்படும் தீவனங்கள், தீவன […]
ஒகி புயலில் சிக்கிய மீனவர்களை காப்பாற்றாத தமிழக அரசை கண்டித்தும், உடனடியாக மீட்க வலியுறுத்தியும் நாகை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று ஆர்ப் பாட்டம் செய்வதற்காக பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையிலும், முன்னாள் பொதுச் செயலாளர் அய்யப்பன் முன்னிலையிலும், நாகை மாவட்ட தலைவர் கோபி மற்றும் பா.ம.க.வினர் சுமார் 10-க்கும் மேற்பட்ட கார்களில் வந்தனர். பின்னர் அவர்கள் நாகை பழைய பஸ் நிலையம் அருகே சென்று […]
மதுரை அருகே பேரையூரில் பஸ் நிலையம் எதிரே தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி உள்ளது. இந்த வங்கியில் நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) மாலை பணி முடிந்ததும், ஊழியர்கள் வங்கியை பூட்டிவிட்டு சென்றனர். இந்தநிலையில் நேற்று மாலை 4.50 மணியளவில் வங்கியின் உள்ளே தீப்பிடித்து கரும்புகை வெளியே வருவதாக பொதுமக்கள் பேரையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பேரையூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சார்லஸ் தலைமையில் போலீசாரும், டி.கல்லுப்பட்டி தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து, வங்கியின் கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டு […]
கிருஷ்ணகிரி அணையின் பிரதான மதகில் முதல் ஷட்டர் கடந்த மாதம் 29-ந் தேதி உடைந்தது. இதனால் அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த 51 அடி தண்ணீரில், உடைந்த மதகை சீர் செய்ய அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 19 அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதாவது சுமார் 1.40 டி.எம்.சி. தண்ணீர் வெளியேறியது. பின்னர் உடைந்த ஷட்டர் 7 நாட்களுக்கு பின் முற்றிலும் அகற்றப்பட்டது. இதையடுத்து புதிதாக மதகில் ஷட்டர் பொருத்தும் பணி தொடங்கியது. நேற்று 3-வது நாளாக ஷட்டர் […]
கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி பகுதியில் உள்ள போத்துராவுத்தன்பட்டி, பஞ்சப்பட்டி, பாப்பக்காபட்டி, சிவாயம், வயலூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு அவர்களின் விளை நிலத்தில் எள் விளைச்சலில் அதிக அளவு மகசூல் கிடைத்தது. இதனால் கடந்த வாரம் கலெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்த விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் தங்களுக்கு எள் மகசூல் அதிக அளவு கிடைத்துள்ளது. இதனால் வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு ஒழுங்கு முறை விற்பனை கூடம் அமைத்து விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைவித்த […]
தஞ்சாவூர்; காந்திஜி சாலையில் மணிக்கூண்டு எதிரில் இபிகே தங்கமாளிகை திறப்பு விழா நடந்தது. இபிகே தங்கமாளிகை நிறுவனர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். வர்த்தக பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ரோட்டரி சங்க நிர்வாகிகள், இன்ஜினியர்கள், டாக்டர்கள், தஞ்சை காசுக்கடை வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் இந்த தங்கமாளிகை திறப்பு விழாவில் பங்கேற்றனர். இபிகே தங்கமாளிகை உரிமையாளர்கள் மனோஜ் பிரபாகர், சிலம்பரசன் அனைவருக்கும் நன்றி கூறினர். திறப்பு விழா சலுகையாக 916 ஹால்மார்க் தங்க நகைகளுக்கு 3 […]
தமிழகம் முழுவதும் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ–ஜியோ–கிராப் கூட்டமைப்பு அறிவித்து இருந்தது. அதன்படி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நேற்று போராட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஈரோடு மாவட்ட கிளை சார்பில் ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் சோமசுந்தரம், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் நேரு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மாநில […]
கொடைக்கானல் அருகேயுள்ள செம்பரான்குளம் பகுதியில் தனியார் தோட்டத்தில் காட்டெருமைகளின் உடல்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின்பேரில், உதவி வனபாதுகாவலர் பாலகிருஷ்ணன், வனச்சரகர் கருப்பையா, தாசில்தார் பாஸ்யம் ஆகியோர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அந்த தோட்டத்தில் சந்தேகப்படும்படியான இடங்களை வனஊழியர்கள் தோண்டினர். அங்கு 3 காட்டெருமைகளின் உடல்கள் புதைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவற்றின் உடல்கள் எலும்பு கூடாக மாறி இருந்தது. இதைத் […]
‘ஒகி‘ புயலால் பாதிக்கப்பட்டு கடலில் மாயமான 500-க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்க கோரி பா.ம.க. சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. மாநில துணைபொதுச்செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கட்சியின் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் டாக்டர் செந்தில், உழவர் பேரியக்க மாநில தலைவர் வேலுச்சாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர். மாநில துணைத்தலைவர்கள் சாந்தமூர்த்தி, பாடிசெல்வம், அரசாங்கம், மாவட்ட செயலாளர்கள் சண்முகம், இமயவர்மன், சார்பு அமைப்பு நிர்வாகிகள் பெரியசாமி, வணங்காமுடி உள்ளிட்டோர் […]