உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல்,அரியலூர் மாவட்டத்தில் தண்ணீர் திறக்க உத்தரவு!

திண்டுக்கல் : பொருந்தலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக டிச. 22 முதல் ஏப். 10 வரையிலும், பரப்பலாறு அணையிலிருந்து வரும் 22 முதல் ஜன. 5 வரை தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு. அரியலூர் : சித்தமல்லி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக வரும் 28ம் தேதி முதல் 349 மி.கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவு – முதலமைச்சர்.   source:  dinasuvadu.com

#ADMK 1 Min Read
Default Image

வைகை அணையிலிருந்து 1060 கன அடி நீர் திறப்பு…!

தேனி: முதல்போக பாசன வசதிக்காகவும் குடிநீர் தேவைக்காகவும் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து 1060 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் என இன்முகத்துடன் தெரிவிக்கின்றனர் அப்பகுதி விவசாய பெருங்குடி மக்கள்.

SaveOurFarmers 1 Min Read
Default Image
Default Image

ஆர்.கே.நகரில் தேர்தல் செலவினப் பார்வையாளரை அப்பகுதி மக்கள் முற்றுகை!

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளருக்குப் பணம் கொடுக்க வைத்திருந்ததாக ஒருவரைப் பிடித்த தேர்தல் செலவினப் பார்வையாளரை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். காசிமேட்டை அடுத்துள்ள செரியன் நகர் முதலாவது தெருவில் தேர்தல் செலவீன பார்வையாளர் சில் ஆசிஸ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டிடிவி தினகரன் அணியைச் சார்ந்த ஒருவர் வீடு வீடாகச் சென்றுள்ளார். அவரை சில் ஆசிஸ் விசாரித்ததில், அவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பது தெரியவந்தது. பின்னர் நடத்திய சோதனையில் அவரிடம் இருந்த 3000 ரூபாயையும் செல்போனையும் […]

#Chennai 3 Min Read
Default Image

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்க பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை!

ஒகி புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி; மீனவர்கள், விவசாயிகள் பாதிப்பு குறித்து கேட்டறிந்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்க பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை. கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் மீனவ, விவசாய பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு. ரூ. 4 ஆயிரத்து 47 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் – கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடியிடம் […]

#ADMK 2 Min Read
Default Image

முதல்வர் எடப்பாடி மகன் சனிபெயர்ச்சி சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டார்.

தேனி; மாவட்டம், குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயிலில்  இன்று தமிழக        முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகன் நவீன் மற்றும் அவரின் உறவினர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சனிப் பெயர்ச்சி நாளான இன்று, தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன… sources; dinasuvadu.com

EPS son 1 Min Read
Default Image

திருப்பூர் அருகே கன்டெய்னர் லாரி ஆம்னி வேன் மோதிய விபத்து : 4 பேர் உயிரிழப்பு

திருப்பூர்; மாவட்டம் பல்லடம் அருகே சாலையில் வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது ஆம்னி வேன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். திருப்பூர் காங்கயம் ரோடு வி.எஸ்.ஏ. நகர் பகுதியை சேர்ந்த கார்த்தி , மாணிக்கராஜ். இவர்கள் சகோதரர்கள். இருவரும் பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தனர். கார்த்தி புதிதாக ஆம்னி வேன் வாங்கி இருந்தார். இதற்கு உதிரி பாகங்கள் வாங்க ஆம்னி வேனில் கோவை வந்தனர். அதன்பிறகு  சகோதரர் மாணிக்கராஜ் மற்றும் அவரது  […]

#Thiruppur 3 Min Read
Default Image
Default Image

ஆர்.கே.நகர் தொகுதிக்கு பொதுவிடுமுறை! புகார் தெரிவிக்கதொலைபேசி எண்கள் ….

இடைத்தேர்தலை முன்னிட்டு நாளை மறுநாள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு பொதுவிடுமுறை * வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் விடுப்பளிக்க உத்தரவு..விடுமுறை வழங்கவில்லை என்றால் புகார் தெரிவிக்க : 044 – 2433 5107 / 94872 69270 / 94440 55566 / 82481 16207 / 79048 02429..     source:    dinasuvadu.com

#Chennai 1 Min Read
Default Image

ராமேஸ்வரம் கடற்பகுதியில் இலங்கை மீன்பிடிகப்பல் கவிழ்ந்தது

ராமேஸ்வரம் அருகே உள்ள சேரன்கோட்டையில் இலங்கையை சேர்ந்த ஒரு மீனவ கப்பல் ஒன்று கவிழ்ந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அருகில் சென்று பார்த்தபோது அதில் யாரும் இல்லை. பின்னர் இதுகுறித்து கடற்படை காவல் படை அந்த படகை கைப்பற்றி அதனை கண்டு மீனவர்கள் யாரும் பயப்பட வேண்டாம் எனவும் கூறிவிட்டு சென்றனர். இதன் விசாரணை நடந்து வரகின்றனர்.

#Rameswaram 1 Min Read
Default Image

ஆரணி அருகே நகை திருட்டு பொதுமக்கள் தர்ம அடி.

 திருவண்ணாமலை; மாவட்டம் ஆரணி அருகே நகைகளுக்கு பாலீஷ் செய்து தருவதாக கூறி, நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களை பொது மக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். நாவல்பாக்கம் என்னும் பகுதியில் வசித்து வரும் கூலித்தொழிலாளி பூபதி என்பவரது வீட்டிற்கு வந்த பீகார் இளைஞர்கள் இருவர், தங்க நகைகளை பாலீஷ் செய்வதாக கூறியுள்ளனர். இதனை நம்பி 2 சவரன் நகைகளை பூபதி கொடுத்த போது அதில் அரை சவரன் தங்கத்தை சோப்புநுரை மூலம் இளைஞர்கள் கொள்ளையடித்துச் […]

#Thiruvannamalai 3 Min Read
Default Image

ஆர்.கே.நகரில் தினகரனுக்கு ஓட்டு போடவேண்டும் !

ஆர்.கே.நகர் தேர்தலில் தமிழர்கள் டிடிவி தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக மதுசூதனனும், திமுக சார்பில் மருதுகணேஷும், சுயேட்சை வேட்பாளராக டிடிவி தினகரனும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தில் இருக்கும் பாஜக செயற்பாட்டாளர்களிடம் களநிலவரம் பற்றி கேட்டறிந்தேன். திமுக – தினகரனுக்கு இடையே கடும் போட்டி […]

#BJP 2 Min Read
Default Image
Default Image

கன்னியாகுமரியில் நிவாரண பணிகளுக்கு ரூ.2,000 கோடி ஒதுக்க வேண்டும்!

ஒக்கி புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றும், மத்திய அரசு நிதி வழங்க முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒக்கி புயல் பாதித்து 21 நாட்களான நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பாமல், ஸ்தம்பித்திருப்பதாக கூறியுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற […]

#Kanyakumari 3 Min Read
Default Image

வடசென்னை காவல் இணை ஆணையராக இருந்த சுதாகரை பணியிட மாற்றம்!

சென்னை ஆர்.கே.நகரில் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி தேர்தல் முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்காத காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடசென்னை காவல் இணை ஆணையராக இருந்த சுதாகரை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக போக்குவரத்து இணை ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்கா வடசென்னை ஆணையராக […]

#Chennai 2 Min Read
Default Image

பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக இயற்கை பொருள்களை கொண்ட புதிய பைகளை உருவாக்கிய திருப்பூர் வாலிபர்…!

திருப்பூர் “ரிஜெனோ” நிறுவன சிபி செல்வன் என்ற வாலிபர் தானே தயாரித்த பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இயற்கைப் பொருள்களால் ஆன எளிதில் மக்கக்கூடிய பைகளை கோவை மாநகராட்சி புழக்கத்தில் விட்டுள்ளது. இந்த பைகளின் பயன்பாடு அதிகரிக்கும் பட்சத்தில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு குறையும்,மேலும் இந்த மாதிரியான கண்டுபிடிப்புகளை அரசே ஊக்குவிக்கும் பட்சத்தில் எளிய மக்களிடம் இந்த கண்டுபிடிப்பு விரைவில் சென்றடையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. source: dinasuvadu.com

#Coimbatore 2 Min Read
Default Image

பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை !

கடந்த நவம்பர் மாத இறுதியில் ஒகி புயல் கன்னியாகுமரி, கேரளா, லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளைப் புரட்டிப்போட்டது. புயலின்போது மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் இன்றுவரை வீடு திரும்பவில்லை. ஒகி புயல் தாக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் கன்னியாகுமரி மாவட்டத்தை ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்கவும், உரிய நிவாரணம் வழங்கவும் கேரளா மற்றும் தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தன. இந்தச் […]

#BJP 3 Min Read
Default Image

தரும்புரி அருகே விபத்து – 2 பேர் பலி

தரும்புரி; புலிகரை என்ற ஊரில்  கார் லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலி. இதில் சதீஷ் குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தருமபுரி மத்திய கூட்டுறவு வங்கியில் கணிணி உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் இவர் . படுகாயமடைந்த அவரது மனைவி அவசர சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு செல்லும்போது  உயிரிழந்தார்.

assident 1 Min Read
Default Image

வேலூரில் மாவட்டத்தில் ஜாக்டோ– ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்!

வேலூர், ஜாக்டோ– ஜியோ மற்றும் கிராப் கூட்டமைப்புகள் சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. வேலூரில் அண்ணாகலையரங்கம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் அருணகிரிநாதன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் சுதாகரன், தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு தொடக்க, நடுநிலை பள்ளி பட்டதாரி […]

india 4 Min Read
Default Image

திருவண்ணாமலை மாவட்டத்தில் போலி சிமெண்டு, பெயிண்ட் தொழிற்சாலை கண்டுபிடிப்பு உரிமையாளர் கைது!

திருவண்ணாமலை  மாவட்டம்  கலசபாக்கம் அருகே உள்ள காஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி முத்து (வயது 35). இவர் அதே கிராமத்தில் பெயிண்ட் கடை வைத்துள்ளார். இங்கு சிமெண்டு, டைல்ஸ் உள்ளிட்டவை விற்பனை செய்து வந்தார். மேலும் குறிப்பிட்ட நிறுவனத்தின் வெள்ளை நிற சிமெண்டு, டைல்ஸ் உள்ளிட்டவை வைத்து மொத்த வியாபாரம் செய்து வந்தார். அந்த நிறுவனத்தின் வெள்ளை நிற சிமெண்டு, பெயிண்டுகள் தரமற்றவையாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் சென்னையில் உள்ள அந்த நிறுவனத்தின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். […]

india 4 Min Read
Default Image