சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரியின் 18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.. அதேபோன்று தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் சுனாமியால் பலியானவர்களுக்கான 13 ஆம் ஆண்டு நினைவுதின அமைதிப்பேரணி நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலயத்தில் இருந்து 3 கி.மீ. தூரம் வரை மீனவர்கள், பொதுமக்கள் பேரணி செல்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர்.மேலும் காயமடைந்த பலர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மதுரை; பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில் மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தற்போதே தொடங்கிவிட்டன. இந்த ஜல்லிக்கட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகு எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் , இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் பெரும் திருவிழா போல நடை பெற இருப்பதால் மதுரை மக்கள் மகிழ்ச்சியுடன் தங்களது காளைகளை தயார்படுத்தி வருகின்றனர்… sources;dinasuvadu.com
சென்னையில் தொழிலதிபரை கொலை செய்த கார் ஓட்டுநர் கூலிப்படையினரால் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், கொலை செய்ய கூலிப்படையினரை ஏவி விட்ட தொழிலதிபரின் சகோதரர் உள்ளிட்ட 8 பேரை கொரட்டூர் போலீசார் கைது செய்தனர். ஈக்காட்டுதாங்கல் ஜோதி நகரைச் சேர்ந்த உதயபாலன் என்பவர் திருமுடிவாக்கத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கு ஆலையை நடத்தி வந்தார். இவர் கடந்த ஐந்தாம் தேதி தமது வீட்டு படுக்கையறையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த வழக்கு கிண்டி போலீசாரிடம் இருந்து மத்திய […]
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அரசு பள்ளி மாணவிக்கு அளித்த பாராட்டு….. நேற்று செய்யார் சிப்காட் லோட்டஸ் நிறுவனம் சார்பில் கல்வி துறைக்கு பல நலதிட்டங்கள் மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி அவர்களது தலைமையில் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் சிறந்த கல்வி பணி ஆற்றிவரும் முதன்மை கல்வி அலுவலர் திரு.ஜெயக்குமார் அவர்களும் கலந்து கொண்டார். விழாவில் செய்யார் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி மோனிஷா 10ஆம் வகுப்பில் 491 மதிப்பெண் பெற்றதை பாராட்டி கல்வி உதவி தொகை […]
தேனி மாவட்டம் தேவாரம் வனப்பகுதியில் ஒரு கால் ஊனமான ஒற்றை மக்னா யானை, கடந்த சில நாட்களாக சுற்றித் திரிகிறது. இந்த யானையிடம் சிக்கி கடந்த சில மாதங்களில், 8 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. விவசாயிகளை பீதியடையச் செய்யும் இந்த மக்னா யானை தேவாரம் பகுதியில் முகாமிட்டு அங்குள்ள பயிர்களை சேதப்படுத்திவருகிறது. தேவாரம் அருகே வனப்பகுதியில் ஒற்றை மக்னா யானை நடமாடி வருவதால் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். யானையின் நடமாட்டத்தால் விவசாயிகள் தோட்டத்திற்கு செல்வதை […]
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த கார் மீது, அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகினர். சென்னையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற கார் ஒன்று, மதுராந்தகத்தை அடுத்த தொழுப்பேடு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டு இருந்தது. அப்போது, சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற அரசு பேருந்து கார் மீது பின்புறமாக மோதியது. மோதிய வேகத்தில், அருகில் இருந்த ஏரியில் […]
ஒசூர் சானமாவு வனப்பகுதியில் 10 யானைகள் முகாமிட்டுள்ளதால் வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை; மேய்ச்சல் பணிகளுக்காக யாரும் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தல்.. source: dinasuvadu.com
பெரம்பலூர்: சிறுவாச்சூர் பகுதியில் உள்ள பேக்கரியின் குளிர்சாதனப் பெட்டி சிலிண்டர் வெடித்து தீ விபத்து; கடையில் வேலை பார்த்த பாண்டியன் என்பவருக்கு படுகாயம்; தீயணைப்புத்துறையினர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. source: dinasuvadu.com
ஒஎன்ஜிசிக்கு எதிராக பரப்புரை செய்ததாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள கல்லடிமேடு கிராமத்தை சேர்ந்த 2 கல்லூரி மாணவிகள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனால் அக்கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது.
கன்னியாகுமரி; ஒக்கி புயலால் காணமல் போன தமிழக மீனவர்கள் கேரள கடல் பகுதிகளில் மீட்கப்பட்ட 70 உடல்கள் கொச்சி மற்றும் கொல்லம், திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டிருந்தன. திருவனந்தபுரத்தில் இருந்த உடல்கள் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், கன்னியாகுமரியை சேர்ந்த 5 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. இதையடுத்து, கிளிட்டசின் என்ற மீனவரின் உடல் சொந்த ஊரான சின்னத்துறைக்கு கொண்டு வரப்பட்டது. இதேபோல், மேலமணக்குடியை சேர்ந்த மைக்கேல் என்பவரின் உடலும் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் […]
இன்று தருமபுரி பாராளுமன்ற தோகுதிக்குட்பட்ட, தருமபுரி சட்டமன்ற தோகுதியில் உள்ள குமாரசாமிபேட்டை இரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகளை பர்வையிட்டு ஆய்வுசெய்தார் பாமகவின் பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை’ எனத் தெரிவித்துள்ளார்.
திருக்கழுகுன்றம் அருகிலுள்ள சோகன்டி கிராமத்தில் 40 வருடமாக தலித் கிறித்தவர்கள் வழிபாடு நடத்திவந்த கெபிக்கு வரக்கூடாது என முன்னால் சாதி இந்துக்களும் இந்நாள் மதவெறி சாதி இந்துக்களும் தடை செய்திருக்கின்றனர். இதானால் தலித் கிறித்தவர்கள் பலர் தாக்கப்பட்டுள்ளனர்.மேலும் இந்நிகழ்வில் அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தலித் கிறித்தவர்களின் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பின்னர் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் செயலாளர் சாமுவேல் […]
ஈரோடு: திருச்செங்கோடு அருகே சித்தளந்தூரில் இரு கார்கள் மோதியதில் 4 பேர் பலியாகிவிட்டனர். திருச்செங்கோட்டிலிருந்து ஈரோடு நோக்கி சென்ற காரும், அப்போது சித்தளந்தூர் அருகே எதிரே வந்த காரும் , நேருக்கு நேர் மோதி. இந்த இரு கார்களும் விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் சிக்கி செந்தில்குமார் மற்றும் வெங்கடேசன், சரவணன் ஆகிய 3 பேர் பலியாகிவிட்டனர். இவர்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இந்த கோர விபத்தில் 4 […]
சென்னை; சென்னையில் 32வது பொறியாளர்கள் மாநாட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசிய அவர் தமிழகத்தில் பிறந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த அப்துல் கலாமை நாம் அனைவரும் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்… sources; dinasuvadu.com
சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லி செல்லும் ஜி.டி விரைவு ரயில் தாமதமாக செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வழக்கமாக இன்று இரவு 7.15-க்கு பதிலாக இரவு 8.45க்கு புறப்படும் என அறிவித்துள்ளது. அதேபோல் சென்னை சென்ட்ரல் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரயில் இன்று இரவு 10 மணிக்கு பதிலாக இரவு 10.45 க்கு புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. source : dinasuvadu.com
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சர்வதேச திரைபடவிழாவில் பல்வேறு விருதுகள் பல நட்சத்திரங்களுக்கு கொடுக்கப்படும் . இந்த வருடம் நடைபெற்ற 15 வது சர்வதேச திரைபட விழாவில் சிறந்த தமிழ்படமாக இரு படங்கள் தேர்வு செய்யப்பட்டன . ஒரு கிடாயின்கருணைமனு , விக்ரம் வேதா தேர்வு செய்ய பட்டது . இதில் கிடைத்த பரிசு தொகை 1 லட்சத்தை நடிகர்.விஜய்சேதுபதி இந்தோ சினி அப்ரிசியன்ஸ் அமைப்புக்கு திருப்பி அளித்தார் . இவை பல சமூக வலைதலங்களில் வைரலாக […]
ஆத்தூர் குளம் பராமரிக்கப்படாததால் நீர் சேமிக்கும் திறன் 20 முதல் 30 சதவீதமே உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குளத்திற்கு வரும் தண்ணீர் குளத்திற்கு செல்ல முடியாமல் தண்ணீர் வரும் கால்வாயில் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு மேல் கழுத்தளவு தேங்கி உள்ளதாக விவாசாயிகள் தெரிவிக்கின்றனர்.இதனால் விவசாயம் வெயில் காலங்களில் கடும் பதிப்படைகின்றனர் . source: dinasuvadu.com
கன்னியாகுமரி மாவட்டத்தில், ஓகி புயலால் பெரும்பாலான மீனவர்வர்கள் கடலுக்குள் சென்று இன்னும் வீடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். அவர்களில் இன்னும் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. கன்னியாகுமரியில் வள்ளவிளை மற்றும் சின்னதுறை கிராமத்தில் இருந்து சென்ற மீனவர்கள் எத்தனை பேர் இறந்தனர் என தகவல்கள் வெளியாகி அங்குள்ள மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளனர். அதில் வள்ளவிளை கிராமத்தில் மட்டும் 33 மீனவர்களும், மேலும், அவர்களில் வெளியூர் மீனவர்கள் 37 பேர் பலியாகி இருக்கிறார்கள். மேலும், சின்னத்துறையில் மட்டும் 39 […]
சென்னை; ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. ஜனவரி 7ஆம் தேதியன்று சென்னை கிழக்குக்கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வீரர்கள் பல்வேறு அணிகளாக வந்து களமிறங்கவுள்ளனர்… sources; dinasuvadu.com