திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கம்மாளன்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியின் வளர்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியால் மேலும் ஒரு அடி முன்னேற்றம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் அவர்கள் ஒதுக்கிய ரூ.6 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர் அறை கட்டிட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், தாலுகா செயலாளர் சுடலைராஜ், கிளைச்செயலாளர் முருகன் உள்ளிட்ட மாணவர்களும் இளைஞர்களும் பொதுமக்களும் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர். அரசு […]
திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் 31ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவானது அரசு சார்பாக சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவின்போது சுமார் 25,500 பயனாளிகளுக்கு 24 அரசு துறை மூலம் 640 கோடி நலத்திட உதவிகள் வழங்கப்படவுள்ளது என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
கோவில்பட்டி : திமுகவின் ஆர்கே நகர் தேர்தல் குறித்த மு.க.அழகிாி மற்றும் அதிமுக,எடப்பாடி பழனிச்சாமி,ஓ.பன்னீர்செல்வம் குறித்த ஆடிட்டா் குரூமுா்த்தி விமா்சனங்கள் குறித்து நான் ஏதும் கருத்து கூறவிரும்பவில்லை எனத் தெரிவித்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. அப்போது ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் “நடிகா் ரஜினிகாந்த் என் நண்பா் அவரது அரசியல் முடிவு குறித்து அவா் அறிவிக்கட்டும் அதன் பின்பு நான் எனது கருத்தை தெரிவிக்கிறேன் .ஆகையால் தற்போது நான் அது கருத்து […]
வத்தலகுண்டு அருகே திண்டுக்கல் சாலையில் அரசு பேருந்து, கார் மற்றும் ஷேர் ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. ஆட்டோவில் வந்த பள்ளி மாணவர்கள் 9 காயம் அடைந்துள்ளனர்.மேலும் தருண், காளிதாஸ் ஆகிய 2 பேர் இந்த விபத்தினால் உயிரிழந்துள்ளனர்.
கூடங்குளத்தின் முதல் 2 அணு உலைகளின் சார்பற்ற அறிக்கையை வெளியிட வேண்டும். கூடங்குளம் அணு உலை முறைகேடு குறித்து அரசியல் கட்சிகள் பேச மறுக்கின்றன கூடங்குளம் அணு உலை முறைகேடு குறித்து யார்மீது வழக்குப்பதிய உள்ளார்கள் என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆவடி அருகே நேற்று இரவு 2 ரயில் பேட்டிகள் தடம் புரண்டன. இதனால் அந்த வழியாக செல்லும் ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் 13 நேரத்திற்கு பிறகு தற்போது அந்த வழித்தடமானது சரி செய்யப்பட்டது இதன் மூலம் அந்த வழியாக ரயில்சேவை மீண்டும் இயக்கப்பட்டன. source : dinasuvadu.com
ஆவடி ரயில் நிலையம் அருகே மிலிட்டரி சைடிங் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் சென்னை சென்டரல் இருந்து ஆவடி வரை ரிருமார்க்கமாக செல்லும் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், நெல்லூரிலிருந்து சூரபெட்டை செல்லும் ரயில், சூரபபேட்டையிலிருந்து, சென்னை சென்ட்ரல் செல்லும் ரயில், திருப்பதியிலிருந்து செல்லூர் செல்லும் ரயில் என குறிப்பிடப்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. source : dinasuvadu.com
சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதிகளில் 900-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. பட்டாசு தொழில் மற்றும் அதன் சார்பு தொழிலை நம்பி சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில், மத்திய அரசின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த மசோதாவில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு கோரியும், பட்டாசு தொழிற்சாலை சங்கங்கள் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது. மேலும், பட்டாசுக்கு தடைக் கோரி தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் தங்கு கடலுக்கு செல்ல வேண்டி கடந்த 98 நாட்களாக கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.இந்த நிலையில் மீனவர்களுக்ம்,விசைப்படகு உரிமையாளர்களுக்கு நடந்த பேச்சுவார்த்தையொட்டி இன்று 150க்கு மேற்பட்ட விசைப்படகுகள் இன்று கடலுக்கு சென்றன.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் இயங்கி வரும் பொன்னி சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் கரும்பு நிலுவைத் தொகையை கேட்க வந்த விவசாயிகளை காவல்துறையினர் தடுத்ததால், ஆலை முன்பு அவர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிப்பாளையம் அருகேயுள்ள ஓடப்பாளையம் பகுதியில் பொன்னி சர்க்கரை ஆலை இயங்கிவருகிறது. இந்த ஆலை கரும்பு டன் ஒன்றுக்கு அரசு நிர்ணயித்த விலையான 2ஆயிரத்து 600 ரூபாயில் 300 ரூபாயை பிடித்தம் செய்துகொண்டு 2 ஆயிரத்து 300 ரூபாயை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. […]
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 134 கனஅடியிலிருந்து 215 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.53 அடியாகவும்,இதனால் அணையின் மொத்த நீர் இருப்பு 31.45 டிஎம்சியாகும்.அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அளவானது சுமார் 7,000 கனஅடியாக உள்ளது.அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 900 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தேர்தல் முடிந்தாலும் இன்னும் பரபரப்பான தொகுதியாகவே இருந்து வருகிறது ஆர்.கே.நகர் தொகுதி. கொருக்குபேட்டையில் 20 ரூபாய் டோக்கன் மூலம் 450 பேருக்கு பணம் பட்டுவாடா செய்ததாக டிடிவி ஆதரவாளர்கள் 4 பேரை ஆதாரத்துடன் போலீசார் கைது செய்துள்ளனர். ஆர்.கே.நகருக்கு உட்பட்ட கொருக்குப் பேட்டை மீனாம்பாள் நகரில் ஜான் பீட்டர் என்பவரிடம் தகராறில் ஈடுபட்ட சிலர் 20 ரூபாய் நோட்டை கொடுத்து பணம் தருவதாக வாக்குறுதி அளித்தது போல், தேர்தல் முடிவு வந்த பின்னர் பணம் தரவில்லை என […]
ரயில் பயணிகள் அதிகமாக செல்லும் மாநகரங்களின் ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது, சேலம் ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால், சேலம் ரயில் நிலையத்தில், 5 நடைமேடைகளிலும் இலவச வைஃபை வசதி ஏற்படுத்த நிர்வாகம் முடிவு செய்து இருந்தது. அதன் படி இன்று முதல் சேலம் வைஃபை வசதி செயல்படும் என நிர்வாகம் அறிவித்ததுள்ளது. source : dinasuvadu.com
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து 7 வீடுகளில் சுமார் 30 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூரை அடுத்த பெரியகண்ணாலப்பட்டி கிராமத்தில் நள்ளிரவில் புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த தெருவிளக்குகளை அணைத்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டனர். சுப்பிரமணி எனபவரது வீட்டில் 25 சவரண் தங்க நகைகள், ரூபாய் 30 ஆயிரம் பணமும், கார்த்திகேயன் என்பவரது வீட்டில் 3 சவரன் நகை மற்றும் ரூபாய் 8 ஆயிரமும் கொள்ளைடிக்கப்பட்டன. இதே […]
ஈரோட்டில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க சென்றபோது, காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கியதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்தன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முரளி மற்றும் வாசுதேவன் ஆகிய இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தடுக்க சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்தனை, முரளி தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், […]
கரூர் மாவட்டம்; அரவக்குறிச்சியை அடுத்த வெஞ்சமங்கூடலூர் என்ற ஊரில் அரசு மதுக்கடையில் இரவு நேரத்தில் பூட்டை உடைத்து, ரூ 4,88,000 மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்… sources; dinasuvadu.com
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தழகுப்பட்டியில் அந்தோணியார் ஆலயத்தில் மர்ம நபர்கள் சிலை உடைத்துள்ளனர்.இதனால் அந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் இடையே ஏற்பட்ட பரபரப்பால் தற்போது போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பதை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுகவில் ஏற்பட்ட பிளவால் தங்களுக்குத்தான் அதிக வாக்குகள் கிடைக்கும் என்கிற திமுகவின் கணிப்பை ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பொய்யாக்கிவிட்டதாகக் கூறினார். தேர்தல் ஆணையத்தைக் குறை கூறும் மு.க.ஸ்டாலின் இடைத் தேர்தலில் திருமங்கலம் பார்முலாவை உருவாக்கியதே திமுகதான் என்பதை மறந்துவிடக் கூடாது என்றார். நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரவாய்ப்புள்ளதாகவும் இல.கணேசன் சூசகமாக தெரிவித்தார். source: dinasuvadu.com
தூத்துக்குடி : கடலோர சுனாமி தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்க்கரையில் ஆழி பேரலையால் உயிர் நீத்தவர்களுக்கு 13ம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது.
திண்டுக்கல் நாகல்நகர் செளராஷ்டிரா மக்கள் கைத்தறிநெசவு தொழிலில் கூலி குறைவாக தருவதை கண்டித்து நாகல்நகர் வரதராஜபெருமாள் கோவில் முன்பு தொழிலாளர்கள் குடும்பத்துடன் 1000க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.