விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த தென்கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ். கள்ளக்குறிச்சியில் இருந்து தென்கீரனூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவரை, அண்ணாநகர் புறவழிச்சாலை மேம்பாலம் அருகே வழிமறித்த கும்பல், சரமாரியாக வெட்டிக்கொன்றுவிட்டு தப்பியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கள்ளக்குறிச்சி போலீசார், வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் கொலை செய்யப்பட்ட இடத்தில் தடயங்களைச் சேகரித்து வரும் போலீசார், அவரது கொலைக்கான காரணம் குறித்தும், […]
தஞ்சையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தஞ்சையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் ஆய்வை கைவிட்டு ஆளுநர் திரும்பி போக வலியுறுத்தி திமுகவினர் 300 பேர் கருப்பு சட்டை அணிந்து கறுப்புக்கொடி ஏந்தி ஊர்வலம் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது… source: dinasuvadu.com
மதுரை மாவட்டம் பொத்தாம்பட்டியைச் சேர்ந்த ராமர் என்பவரின் மனைவி கற்பகச் செல்வி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீக்குளித்தார். ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். அதேபோல், மதுரை புது தாமரைப்பட்டியைச் சேர்ந்த அன்னலட்சுமி சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் ராஜாஜி அரசு மருத்துவ மனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. பிரேத பரிசோதனைக்குப் பின், மருத்துவமனை ஊழியர்கள் அன்னலட்சுமி உடலுக்குப் பதில் கற்பகச் செல்வி உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதனை […]
இந்தியாவின் தமிழகத்திற்கு சுற்றுலா வந்த ஜப்பானிய தம்பதியனருக்கு தமிழர் கலாச்சாரம் மற்றும் இந்து மத கலாச்சாரம் என்பது மிகவும் பிடித்து போனது.இத்தகைய கலாச்சாரங்களால் கவரப்பட்ட ஜப்பான் ஜோடி யூடோ, சிகாரு மதுரையில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். வேஷ்டி, சேலை அணிந்து உறவினர்கள் உற்சாகமாக அந்த திருமண விழாவில் பங்கெடுத்தனர்.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்தார். அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயிலில் வராகி அம்மன், பெருவுடையார், பிரகன் நாயகி அம்மன் சன்னதிகளில் ஆளுநர் தரிசனம் செய்தார். தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணிகளை பார்வையிடும் ஆளுநர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆரின் சிலையை திறந்து வைத்து, எம்.ஜி.ஆரின் பன்முகப்பார்வை என்ற நூலை வெளியிடுகிறார். பிற்பகலில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் பன்வாரிலால் புரோகித், […]
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஆம்பலாபட்டு தெற்கு குடிக்காடு கிராமத்தில் தலித் இளைஞர்கள் ஞாயிறு அன்று மேடை ஒளி,ஒலி அமைத்து புத்தாண்டை கொண்டாடினர். இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆம்பலாபட்டு வடக்கு கிராமத்தை சேர்ந்த ஆதிக்க சாதி இளைஞர்கள் கொடிய ஆயுதங்களோடு தலித் குடியிருப்பு பகுதியில் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதோடு, வீடுகள், மோட்டார் சைக்கிள்களை உடைத்து வீசி எறிந்து விட்டு சென்றுள்ளனர். குடிதண்ணீர் பைப்புகளையும் ,மின் இணைப்புகளையும் உடைத்து வீசியுள்ளனர்.தலித் மக்கள் வீடுகளை அடைத்து கொண்டும், […]
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்பட உள்ள கரும்புகளை கொள்முதல் செய்வதில் அதிகாரிகள் பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக ஈரோடு மாவட்ட கரும்பு விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள விளை நிலங்களில் சுமார் 300 ஏக்கரில் செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் கரும்புகள் தரமாகவும், தித்திப்பாகவும் இருக்கும் என்பதால் வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. 400 கரும்புகள் கொண்ட வண்டிக் கரும்பை, வியாபாரிகள் 7 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை […]
சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரெய்மான் என்பவர் லேங்ஸ் கார்டன் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது தடுப்புச் சுவரில் மோதித் தலையில் காயமடைந்து உயிரிழந்தார். ஆவடி இஎஸ்ஐ அண்ணாநகரைச் சேர்ந்த பால் என்பவர் ஆவடி பேருந்து பணிமனை எதிரே சாலைத் தடுப்புச் சுவரில் மோதி உயிரிழந்தார். நேற்று நள்ளிரவில் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட சாலை விபத்துக்களில் 177பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 84பேர் ராயப்பேட்டை, சென்ட்ரல், ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், […]
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.இதனால் அங்கு அண்மையில் பெய்த மழை காரணாமாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் புத்தாண்டு தினமான இன்று தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் பரிசல் சவாரி செய்தும் எண்ணெய் மசாஜ் செய்து அருவிகளில் குளித்தும் மகிழ்ந்தனர். அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையை அடுத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். source: dinasuvadu.com
புத்தாண்டையொட்டி உதகையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். கடுங்குளிருக்கு மத்தியில் உதகை தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். உதகையில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் காண முடிந்தது. சுற்றுலா பயணிகள் உற்சாகமாக விளையாடிக் களித்தனர். படகு சவாரியும் களை கட்டியிருந்தது. ஏராளமானோர் மிதி படகு மற்றும் துடுப்புப் படகு சவாரியில் ஈடுபட்டனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மலர்வகைகளைக் கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள் அவற்றின் அருகில் நின்று ஆர்வத்துடன் செல்ஃபி […]
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசுபேருந்தும் ,தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து.விபத்தில் ஆறு பேர் பலி . 20 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி திண்டுக்கல் மாவட்டம் பலக்கனுத்து என்ற இடத்தில் பேருந்து விபத்து நடைபெற்றுள்ளது.காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். source: dinasuvadu.com
அண்ணா பல்கலைகழத்தை தொடர்ந்து சேலம் பெரியார் பல்கலைக்கழகமும் தங்களுடைய மாணவர்களுக்குக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 1ஆம் தேதி வெளியிடுகிறது. இந்த தேர்வு முடிவுகள் அனைத்தும் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் என பெரியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னையில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது. வேலூர்- விழுப்புரம் செல்லும்போது மின்சார ரயிலில் மீது மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது.இதனால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிப்பிற்கு உள்ளானது,இந்த இக்கட்டான சூழ்நிலையை சந்திக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
கோலாலம்பூரிலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்டதாக ரூ.16 லட்சம் மதிப்புள்ள 360 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த இப்ராஹிம் ஷா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணி குறித்து தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர் விமான நிலைய அதிகாரிகள்.
வேலூர்: சிப்காட் பகுதியில் இயந்திரத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தோல் தொழிற்சாலை உரிமையாளர் விஜயகுமா என்பவரை போலீசார் இன்று ஜாமினில் விடுவித்தனர்.
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தமுயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள சவுதி ரியால் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதனை கடத்திவந்த சென்னையைச் சேர்ந்த ஆறுமுகவேல் என்ற பயணியிடம் சுங்கத்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை வைகை ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக கூறி 40 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்து சிறப்பு தாசில்தார் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் இந்த மணல் கொள்ளையின் பின்னணி என்ன..?? என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் சூலூர் அருகே பீடம்பள்ளியில் உள்ள ஒரு பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தினால் அந்த பழைய பேப்பர் குடோனில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எல்லாம் எரிந்து நாசமாயின.மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது.
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில் வாங்கும் பிரசாத பொருட்களில் கெட்டுப்போன நிலையில் விற்பனை செய்யப்படுவதாக பக்தர்கள் புகார் அளித்துள்ளனர். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும் மார்கழி மாதம் என்பதாலும் இங்கு தினத்தோரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் அரிசிமாவுடன் சர்க்கரை வெள்ளம் கலந்து செய்யப்படும் ‘புட்டமுது’ என்னும் பிரசாத பொருளினை விரும்பி வாங்கி செல்வது வழக்கம். அவ்வாறு வாங்கும் அந்த மாவு பொருளில் […]
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பகுதியில் விவசாய நிலத்தில் ONGC நிர்வாகம் எரிவாயு எடுப்பதை கண்டித்தும். ONGC நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தியும்.ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராக நன்னிலம் பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.