இருசக்கர வாகனங்கள் ஒன்றாக பயணித்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை. பொதுமக்களின் பாதுகாப்பை கருதி இன்று இரவு 8 மணிக்கு மேல் சென்னையில் மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதித்துள்ளது சென்னை காவல்துறை. சென்னை கடற்கரை சாலைகளில் வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை. பொதுமக்களின் பாதுகாப்பை கருதி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு இன்று மாலை 6 […]
நாமக்கல்லில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிதியுதவி அறிவித்தார். நாமக்கல் மாவட்டம் மோகனுர் மேட்டுத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானது. இதில், பட்டாசு கடை உரிமையாளர் தில்லைக்குமார், தாயார் செல்வி, மனைவி பிரியா உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. கிடங்கில் இடமில்லாததால் வீட்டிலும் பதுக்கியபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மோகனுர் டவுனில் […]
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,130-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. இன்று சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு […]
மோகனுர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு. நாமக்கல் மாவட்டம் மோகனுர் மேட்டுத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் பட்டாசு கடை உரிமையாளர் தில்லைக்குமார் மற்றும் மூதாட்டி பெரியக்காள் (73) ஆகிய 2 பேர் உயிரிழந்திருந்த நிலையில், படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தில்லைக்ககுமாரின் தாயார் உடலும் இடிபாடுகளுக்குள் இருந்து தற்போது மீட்க்கப்பட்டுள்ளது. […]
தொடர் உண்ணவிரோத போராட்டத்தால் இதுவரை 100 இடைநிலை ஆசிரியர்களுக்கு உடல்நலக்குறைவு என தகவல். ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து உண்ணவிரோத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்களுடனான பள்ளிக்கல்வித்துறை செயலர் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றும் கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்க பள்ளிக்கல்வித்துறை செயலர் அவகாசம் கேட்டுள்ளார் எனவும் இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் உண்ணவிரோத போராட்டம் தொடரும் என்றும் கூறியிருந்தனர். இந்த நிலையில், சென்னையில் தொடர் […]
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு டிசம்பர் 31 அன்று இரவு சென்னையில் 368 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும், இதுவரை டிசம்பர் 25 முதல் 360 வாகனங்கள் விதிகளை மீறியதால் சீஸ் செய்யப்பட்டது எனவும், ரேஸில் ஈடுபடும் வாகனங்களை கண்காணிக்க தெளிவாக இரவில் படம்பிடிக்க கூடிய டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்தார். மேலும், 18 […]
சென்னையில் கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர் கடந்த 27ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் குறைத்து வழங்குபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 6வது ஊதிய குழு அடிப்படியில் மே 2009 முன்பு வேலைக்கு சேர்ந்தவர்களுக்கும், […]
முறையான போனஸ் வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழக அரசு அறிவித்த பொங்கல் போனஸ், அகவிலை படியும் தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது எனவும், 2006 போனஸ் திருத்த சட்டதத்தின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு […]
கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேர் கைது. கோவையில் கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேலும் 2 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்தனர். கார் வெடிப்பு வழக்கில் ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக கோவையை சேர்ந்த சேக் இதயத்துல்லா மற்றும் சனோபர் அலி ஆகிய இருவரை […]
வரும் 5-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. வரும் ஜனவரி 5-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார். தாணுமாலய சுவாமி கோயில் திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 5-ஆம் தேதி விடுமுறையை ஈடுக்கப்பட்ட பிப்ரவரி 25-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.