கோவை மாவட்டம் மிகவும் போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் ஒன்றாகும்.நகர் முழுவதும் சாலைகளிலும் ,சாலை ஓரங்களிலும் நெரிசல் மிகுந்து காணப்படும்.இதனால் கோவை ரயில் நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டை அகற்ற போலீஸார் நெருக்கடி தருவதாக ஆட்டோ டிரைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். முன்னதாக கோவை சந்திப்பு ரயில் நிலைய வளாகத்திற்குள் ஆட்டோ ஸ்டாண்ட் இருந்தது. ஆனால் பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி சிறிது காலம் வெளியேறுமாறு அதிகாரிகள் கூறினர். இதனை நம்பி ரயில் நிலைய வளாகத்தில் இருந்து வெளியே […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி – திருச்செந்தூர் ரோடு சத்யாநகரில் அரசு பேருந்து மோதிய விபத்தில் ஸ்வதிக்கா என்ற 3 வயது குழந்தை பலியாகியுள்ளது.மேலும் இந்த விபத்து குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சாலை மறியல். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சிவகாசி பேருந்து நிலையம் முன் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு தொழிலுக்கு சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. source: dinasuvadu.com
மதுரை விளக்குத்தூண் அருகே உள்ள தனியார் ஜவுளி கடையில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்து காரணமாக கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது. சுமார் 7 தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கின்ற பணியில் ஈடுபட்டு வருகின்றன.
திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையில் இருந்து பழைய, புதிய ஆயக்கட்டு பாசத்திற்கு கூடுதல் நீர் திறக்கப்பட உள்ளது.இன்று முதல் வரும் 31ம் தேதி வரையில் இடைவெளி விட்டு அணையைத் திறக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து.இந்த விபத்தில் 15 பயணிகள் காயம். நாமக்கல் மாவட்டம் வேளாத்தாகோயில் பேருந்து நிலையம் அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15 பயணிகள் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.விபத்து குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர் . source: dinasuvadu.com
நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் அருகே உள்ள மணியன் தீவு கடற்கரையில் இலங்கையை சேர்ந்த பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இப்படகானது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகா என கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிரமாக விசாரணை செய்துவருகின்றனர்.
தூத்துக்குடி : கோவில்பட்டி அருகேயுள்ள எட்டையாபுரத்தில் ஆசிரியர் வேலை தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்துள்ளனர்.ஆகவே சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஹரிணிகாஸ்ரீ பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சென்னையில் புத்தாண்டு அன்று குடிப்போதையில் வாகனம் ஒட்டி பிடிபட்ட 125 பேருக்கு பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று கிடைக்காது என தமிழக போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் பாஸ்போர்ட் கிடைக்காது என புத்தாண்டுக்கு முன்பாகவே காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் MCA பட்டப்படிப்பு இரண்டாமாண்டு பயிலும் மாணவி அமலா இரயிலில் அடிபட்டு பலியானார். மேலும் இறந்த அம்மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.மேலும் அம்மாணவியின் இறந்த பின்புலம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஒக்கி புயலில் கேரள கடலில் சிக்கிய 6 தூத்துக்குடி மீனவர்களில் மீனவர் ஜெகன் மட்டும் 2 நாட்கள் ஆழ்கடலில் மரண போராட்டம நடத்திய நிலையில் மீட்கப்பட்டு கேரள அரசின் சிறப்பான சிகிச்சையால் மீட்கப்பட்டார். தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த ஜுடு உடல் விழிஞ்சம் கடலில் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு கேரள அரசின் துணையோடு மார்க்சிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தலைமையிலான குழுவின் உதவியால் தூத்துக்குடி கொண்டு வரப்பட்டு டிச 9. ல் அடக்கம் செய்யப்பட்டது. நேற்று இரவு […]
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய சுற்றுலாதளம் மிகவும் பிரபலமான ஒரு சுற்றுலா இடம் ஆகும் .இங்கு பயணிகளின் வருகை அதிகம் வருவதால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப புதிய திட்டத்தை அறிமுக படுதியுள்ளனர்.முண்டந்துறை புலிகள் சரணாலயம் குறித்து அறிய இணையதள சேவை தொடங்கியது. www.kmtrecotourism.com என்ற இணையதளம் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.. source: dinasuvadu.com
ஆங்கில புத்தாண்டு அன்று மதுரையில் அன்னலெட்சுமி என்ற பெண்மணி சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரின் சடலத்தை கேட்டு சென்ற அவரது உறவினர்களிடம் அரசு மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்டனர். மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்டதால் ஊழியர்களுக்கும் இறந்தவரின் உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஊழியர்கள் ஊழியர்கள் அன்னலெட்சுமியின் சடலத்துக்கு பதிலாக வேறு ஒரு சடலத்தை கொடுத்துள்ளனர். source : dinasuvadu.com
கன்னியாகுமரியில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த்.அப்போது பேசிய அவர் பேரிடர் பாதித்த மாவட்டமாக கன்னியாகுமரியை அறிவிக்க வேண்டும் என்றும் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் சமமாக நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார் … source: dinasuvadu.com
மக்களின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் என தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முன்னேற மத்திய அரசின் உதவி அவசியம் என்று குறிப்பிட்டார். தமிழகத்திற்கு தேவையான உதவிகளைப் பெற, ஆளுநர் புரோஹித், மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை அளித்து வருவதாகவும், இதனால் தான் மக்களின் ஆளுநர் என்று ஆளுநரைப் புகழ்ந்து கூறியதாகவும் அமைச்சர் கே. பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார்…. source: dinasuvadu.com
நம் வீட்டை சுற்றியுள்ள குப்பைகளை அகற்றி தெருவில் உள்ள குப்பை தொட்டியில் கொட்டுவோம். மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அவற்றை சேகரித்து மக்கும் குப்பை மக்கா குப்பை என பிரித்து அவற்றை அப்புறபடுத்துவர். இதேபோல் தூத்துக்குடி மாநகராட்சியிலும் குப்பைகளை அகற்றி குப்பை கிடங்குகளில் கொட்டி அகற்றி வருகிறது. இதனை மக்கும் மக்கா குப்பை என பிரிக்க தூத்துக்குடியில் குப்பை கிடங்கு அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், தூத்துக்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான கீதாஜீவன் இதனை எதிர்த்துள்ளார். […]
காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி இறந்த ராணுவ வீரர் உடல் இன்று அவரது சொந்த ஊரான தூத்துக்குடியில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது பனிச் சரிவில் சிக்கி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் இறந்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சாத்தூரப்ப நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மகன் ராஜேஷ் கண்ணன்(33). இவர் கடந்த 14 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் காஷ்மீர் பகுதியில் பணியாற்றி வந்தார். கடந்த 3 […]
சென்னையில் கால்நடைகளை சாலைகளில் உலவ விட்டால், அவற்றின் உரிமையாளர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. கால்நடைகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிப்பதுடன், பராமரிப்புக் செலவுக்கென 750 ரூபாய் வசூலிக்கப்படும் என மாநகராட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பிடித்து வைக்கப்படும் கால்நடைகளின் காதுகளில் சீரியல் எண்களுடன் கூடிய tag ஒட்டப்படும். இனி இதுபோன்று சாலைகளில் கால்நடைகள் அவிழ்த்து விடப்படமாட்டாது என 20 ரூபாய் முத்திரைத் தாளில் உரிமையாளர் எழுதி கொடுத்தால் மட்டுமே கால்நடைகள் விடுவிக்கப்படும். […]
நீலகிரி மாவட்டம் உதகையில் மீண்டும் பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக பனிப்பொழிவின் தாக்கம் சற்று குறைவாக காணப்பட்ட நிலையில் நேற்று இரவு முதல் மீண்டும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. கேத்தி பள்ளத்தாக்கு, உதகை தலைக்குந்தா பகுதிகளில் அதிக அளவிலான பனிப்பொழிவு காரணமாக, புல்வெளிகள் வெண்ணிற கம்பளம் விரித்தது போல் காட்சியளித்தது. புல்வெளியில் படர்ந்துள்ள பனியில் நடந்துசென்று சுற்றுலாப் பயணிகள், தங்களது […]
நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் கீழ்ப்பாவூர் பகுதியில், மு.க ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்ட்டர்களால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவின் மிகப்பெரிய தோல்வியை மு.கருணாநதியின் மூத்த மகனும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மு.க.அழகிரி மற்றும் அவரது பேரனும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதிமாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.