மதுரையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.இந்த நிகழ்ச்சியை மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ,மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஒலிம்பிக் தீபம் ஏற்றி, துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தொடங்கி வைத்தனர் இதில் 500 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையில் நாளை வார நாட்களைப்போல் அனைத்து மின்சார, விரைவு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு செய்துள்ளது.போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதால் ரயில்வே துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டின் சென்னை மத்திய குற்றப்பிரிவில் 572 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 559 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 2017ல் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 57 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம்- சாணார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெத்தாம்பட்டி பொதுமக்கள் சார்பில் தண்ணீர், சுகாதாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்ககோரி சாணார்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துங்கபுரம் கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டணை விதித்து மகிளா நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 1998 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சையிலிருந்து திருப்பதி புறப்பட்ட அரசுப் பேருந்தை வீரமணி என்பவர் ஓட்டிச் சென்றார். கோடியம்மன் கோயில் அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் பேருந்தின் முகப்பு விளக்கை சேதப்படுத்திவிட்டுச் சென்றதாக, காவல்நிலையத்தில் ஓட்டுநர் வீரமணியும், நடத்துநர் செல்வகுமாரும் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பேருந்தின் நடத்துநரான செல்வகுமார், பேருந்தில் வந்த வினித் என்ற நபரின் உதவியுடன் முகப்பு விளக்கை கல்லால் […]
திண்டுக்கல்லில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் மோதியதால் 10 பேர் பலியானார்கள் .பலியானவர்களுக்கு முதல்வர் நிதிஉதவி வழங்கியுள்ளார் … திண்டுக்கல் பலக்கனூத்தில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் மோதிய விபத்தில் 10 பேர் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000, சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. source: dinasuvadu.com
திருவண்ணாமலையில் கோயிலில் உண்டியல் ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் காணிக்கையை பொருத்து கிடைக்கும் . அந்த வகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மார்கழி மாத உண்டியல் காணிக்கை ரூ.1.33 கோடி கிடைத்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் வந்து, இங்குள்ள உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை தரிசித்து விட்டு செல்கிறார்கள்.இதுதவிர ஒவ்வொரு பவுர்ணமியன்றும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். பவுர்ணமி முடிந்ததும் அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி மார்கழி மாத பவுர்ணமி […]
பராமரிப்பு பணி காரணமாக சென்னை மின்சார ரெயில் சேவை ரத்து! பொதுமக்கள் அவதி, கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்கள் பலர் ரெயில் சேவையையை நம்பியே வேலைக்கும், பள்ளி, கல்லூரிக்கும் சென்று வரும் நிலையில், இன்றும் நாளையும் ரெயில்சேவையை குறைத்தும், ரத்தும் செய்யப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ரெயில் சேவை மாற்றம் மற்றும் ரத்து குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 9.15, 9.30, 11.30 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் காலை 10.50, […]
நாமக்கல்லில் அரசு பேருந்துகளை இயக்க 200க்கும் மேற்பட்ட தினக்கூலி ஓட்டுநர், நடத்துநர்கள் நியமனமிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் நாமக்கல் பிரதான சாலை மற்றும் நகரங்களைத் தவிர கிராமப்புறங்களுக்கு அரசு பேருந்து சேவை இல்லை என மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
மதுரை எம்.ஜி.ஆர் ( மாட்டுத்தாவணி ) பேருந்து நிலையத்திலிருந்து, பெரியார் பேருந்துநிலையம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்துக் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பேருந்தின் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், பேருந்தின் கண்ணாடி குத்தியதில் ஓட்டுநர் குடியரசு கையில் காயம் ஏற்பட்டது. பயணிகளுடன் பேருந்து சென்றபோது இச்சம்பவம் நடை பெற்றுள்ளது. கிளை மேலாளர் சுந்தர் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த ஓட்டுநர் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் 434 அரசு பேருந்துகள் உள்ளது இதில் 84 பேருந்துகள் தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கொண்டு சுமார் 20 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தென்காசி அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து 69 பேருந்துக் களில் 30 பேருந்துகள் இயக்கப்படுகிறது.அதேபோல் செங்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து இயக்கப் படும் 38 பேருந்துக்களில் 13பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 38 பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
நெல்லை கிருஷ்ணாபுரத்தில் நொச்சிகுளம் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து என்பவரை மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டனர். இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் பதற்றம் அடைந்துள்ளனர். மேலும் இக்கொலையின் பின்னணி யார்…?? கொலை செய்ய காரணம் என்ன..?? கொலை செய்தவர்கள் யார் …?? என பல கோணத்தில் சிவந்திபட்டி காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 58,000 டன் மணல் தூத்துக்குடியிலிருந்து கேரளா மாநிலம் மங்களூருவுக்கு கொண்டுச் செல்லப்பட்டது. மணல் இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு,இதனை தொடர்ந்து நேற்று அரசாணை வெளியிட்ட நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட மணலானது மங்களூருவுக்கு இடமாற்றம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட வேண்டிய 800க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சுமார் 100 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.போக்குவரத்து தொழிலாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் அவதியடைதுள்ளனர். அரசு தொழிலாளர் கோரிக்கையை நிறைவேற்றுமா.???
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி தக்கலை அருகே உள்ள புலியூர்க்குறிச்சியில் 5வது நாளாக விவசாய அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓக்கி புயலின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல லட்சம் மதிப்புள்ள தென்னை,வாழை,நெல் போன்ற விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து ஊழியர்களின் ஸ்டிரைக்கால் சென்னையில் குறைந்தளவு பேருந்துகளே இயக்கப்படுகிறது. திருவான்மியூரில் உள்ள மொத்தம் 106 பேருந்துகளில் வெறும் 39 பேருந்துகளும், தாம்பரத்தில் உள்ள 190 பேருந்துகளில் வெறும் 58 பேருந்துகளும், குரோம்பேட்டையிலிருந்து செல்லும் 200 பேருந்துகளில் வெறும் 45 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்,ஆகையால் தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற முன்வரவேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசை வேண்டுகின்றனர்.
பாராளுமன்றத்தில் முத்தலாக் மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவும் கடும் எதிர்ப்பும் பல அமைப்புகள் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் இந்த முதலாக் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடந்து வருகிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தூத்துக்குடி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை நடத்தி வருகிறது. இந்த ஆர்பாட்டம் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் நடைபெற்றுகொண்டு இருக்கிறது. source : dinasuvadu.com
புத்தாண்டு தினத்தன்று சென்னையில் பைக் ரேசர்கள் அதிகமாக சாகசங்கள் செய்தனர். இதனால், சென்னையில் மட்டும் பல விபத்துகள் நடந்தன. இதில் ஒரு பைக் ரேஸ் கும்பலொன்று சாலையில் இருக்கும் தடுப்புவேலியை இழுத்து சென்றன, இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இந்த வீடியோ வைரலாக சமூக வலைதளங்களில் பரவியது. இந்த கும்பலை பிடிக்க தற்போது சென்னை போலீசார் 4 தனிப்படை அமைத்து அவர்களை பிடிக்க உத்தரவிட்டுள்ளது. source : dinasuvadu.com