அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் மக்களின் நலன் கருதி குறைந்த பட்ச எண்ணிக்கையில் பேருந்துகளை தற்காலிக ஓட்டுநர்களை கொண்டு அரசு பேருந்துகள் இயக்கி வருகின்றனர். இதில் பெரம்பலூரிலிருந்து ஆத்தூர் வரை செல்லும் அரசு பேருந்தை தனியார் ஓட்டுனர் ஒருவர் இயக்கினார். அவர் இடது கையில் செல்போன் பேசிகொண்டே வலது கையில் பேருந்தை இயக்கி உள்ளார். மேலும் கியர் போடும் போதும் போனை வைக்காமல் வலது கையாலேயே கியரையும் போட்டு வண்டி ஒட்டி […]
சென்னை மயிலாப்பூர் பி.எஸ். பள்ளி வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அணைக்கும் முயற்சியில் 2 தீயணைப்பு வாகனங்கள் சென்றுள்ளன. பள்ளி வளாகத்தில் குவித்து வைத்து இருந்த குப்பை குவியலால் திடீரென தீ பற்றி அந்த வளாகம் தீப்பற்றி கொண்டது. இதனால் சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். source : dinasuvadu.com
தூத்துக்குடி மாவட்டத்தில் 9ம் தேதி மாலை 6 மணியில் இருந்து 11ம் தேதி காலை 6 மணி வரை 2 நாட்களுக்கு 144 தடை பிறப்பிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் அறிவித்தார். தூத்துக்குடி மாநகரத்தில் உள்ள அலங்காரதட்டு கிராமத்தில், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் சி.பசுபதி பாண்டியன் நினைவு தினம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வருடாவருடம் அவரது ஆதரவாளர்களால் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நெல்லை:பழவூர் அருகே சங்கனாபுரத்தில் 5மாதங்களுக்கு முன்பு உடைந்து விழுந்த தரைப்பாலத்தால் விபத்துகளில் சிக்கும் வாகன ஓட்டிகள். எச்சரிக்கை பலகை இல்லாததால் தொடரும் விபத்துக்கள்… இதனால் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக பல விபத்துக்களுக்கு உள்ளாகின்றனர்.மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை விமானநிலையத்தின் முதல் கட்ட விரிவாக்கம் நடந்து 5 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் சில மாதங்களில் இரண்டாம் கட்ட விரிவாக்கம் நவீன முறையில் நடக்கவுள்ளது. இதை சிங்கப்பூர் சாங்கி விமானநிலையம் போல அமைக்கவுள்ளதாக கூறுகின்றனர். இதை பற்றி பேசிய அதிகாரிகள் கூறியது என்னவென்றால், இரண்டாம் கட்ட விரிவாக்கம் செய்யப்போகும் ஊழியர்கள் சிங்கப்பூர் விமனநிலையத்தை வடிவமைத்தவர்கள். அதனை போலவே இங்கேயும் செய்யவுள்ளதாக கூறுகிறார். மேலும் இதன் வடிவமைப்பில் தமிழ் கலாச்சாரத்தையும் இணைக்கவுள்ளார்களாம். தனித்துவம் கொண்ட சர்வதேச வசதிகளுடன் இது திகழும் என்று கூறியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு விளையாட்டுவிழா இந்த ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா வருகிற ஜனவரி 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை காண தமிழகம் முழுவதிலிருந்து லட்சகணக்கான மக்கள் வருவார்கள். இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் முதற்கட்ட வேலையாக இன்று கால்கோள் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் விழாக்குழு மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார். source : dinasuvadu.com
நெல்லையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கதர் மற்றும் கிராமப் பொருட்கள் சிறப்பு விற்பனையினை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார். பொதுமக்களும் இப்பொருள்களை ஆர்வமுடன் வந்து வாங்கி செல்கின்றனர்..இதுபோன்ற புதுமையான நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி அருகே, பள்ளிக்கல்வி துறை சார்பில் நடைபெற்ற கலை இலக்கிய போட்டிகளுக்கான தொடக்க விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையின், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். மேலும், தனியார் பள்ளிகளில் கட்டண வேறுபாடுகளை சரிசெய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டு சரிசெய்யப்படும், என்றும் தெரிவித்தார். முன்னதாக, கோபிசெட்டிபாளையத்தில் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் “அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. தொழிலாளர்கள் கேட்கும் ஊதியத்தை கொடுக்க அரசுக்கு மனம் உள்ளது. ஆனால் நிதியில்லை” என்று […]
கோவையில் 101 மற்றும் 70 வயதுடைய மூதாட்டிகள் மகன் மீது மோசடி புகார் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.அவர்களது மகன் தங்களிடம் ஏமாற்றி அபகரித்த சொத்தை மீட்டு இறுதி நாட்களில் வாழ வழிவகுக்க செய்யக்கோரி மகள் வழி பேரனுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
மத்திய அரசின் சிறப்புத் திட்டமான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை சேர்க்கப்பட்டுள்ளதால், மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற வாய்ப்பு உருவாகி உள்ளது. இதற்கிடையே, மதுரையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க சாத்தியமான வழித்தடத்தை போக்குவரத்து வல்லுனர் குழு அரசுக்கு யோசனையாக அளித்துள்ளது. அதிலுள்ள உத்தேச வழித்தடங்கள் வருமாறு: மெட்ரோ ரயில் பாதை மேலூரில் தொடங்கி, ஐகோர்ட் கிளை, எம்ஜிஆர் பஸ் ஸ்டாண்ட், நீதிமன்றம், தல்லாகுளம், கோரிப்பாளையம், யானைக்கல், வடக்கு வெளிவீதி, பெரியார் பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம், திருநகர், […]
தமிழ்நாட்டில் போக்குவரத்து ஊழியர்கள் 5 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்களை அரசு பேருந்து இயக்க போக்குவரத்து துறை சார்பில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் பல இடங்களில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் டிக்கெட் பரிசோதகர்களை பேருந்தில் நடதுநர்களாக வேலைசெய்ய கூறிவருகின்றனர். இதனால் கோபமடைந்த கடலூர் மாவட்ட டிக்கெட் பரிசோதகர்கள் தங்களை கட்டாயபடுத்தி நடத்துநராக வேலைசெய்ய சொல்கிறார்கள் எனவும், பணி […]
பைக் ரேசில் ஈடுபடுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் – கோவை ஆணையர் பெரியய்யா தெரிவித்துள்ளார். கோவை சாலைகளில் பைக் ரேஸில் ஈடுபடுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா தெரிவித்துள்ளார். அவிநாசி சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளி மாணவர்களுக்கு சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் கோவை நகருக்குள் வாகனங்கள் நுழையும் முக்கியமான 7 சாலைகளில் கண்காணிப்புக் […]
மதுரை அருகே ஓட்டுனர் பற்றாகுறையால் லாரி ஓட்டுனர் ஓட்டிய பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் பணிமனையில் இருந்து பேருந்தை இயக்கியவர் லாரி ஓட்டுநராக இருந்த டேனியல் ஆவார். ஒட்டுநர் பற்றாக்குறையால் டேனியல் விளச்சேரி செல்லும் அரசுப் பேருந்தை இயக்கி திருநகர் 7 வது ஸ்டாப் அருகே சென்ற போது மின்கம்பம் மோதி விபத்துக்குள்ளானது.அதிஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். பேருந்தில் பயணம் செய்தவர்கள் பீதியடைந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.இதனால் விபத்து […]
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் சட்டபேரவையில் உரையாற்றியது உரையை வாசிப்பதற்கு முன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என தமிழில் கூறினார் ஆளுநர். ஆளுநர் உரையை புறக்கணித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உரை: ஜிஎஸ்டி வரிமுறை மாற்றத்தை சிக்கலின்றி நடைமுறைப்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தார். மக்கள் நலத் திட்டங்களை தமிழக அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தி வருகிறது.மத்திய அரசு தமிழகத்தில் மத்திய நிதியுடன் கூடிய பல திட்டங்களுக்கான நிதியைக் குறைத்திருக்கிறது என்றும் கூறினார். பின்னர் […]
சென்னை சாந்தோமில் அரசு பேருந்து மோதியதால் பட்டினப்பாக்கம் டுமில்குப்பம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து ஏற்படுத்தியதாக கண்ணகி நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற தற்காலிக ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்தமுறை நடந்த போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தின் போது கூட தற்காலிக ஓட்டுனர்களால் இம்மாதிரியான விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் அருகே இரு சக்கர வாகனம் மீது தனியார் நிறுவன பேருந்து மோதியதில் பாஜக உறுப்பினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் அருகே கீழ்அம்பி – சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கீழ்அம்பி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பாரதிய ஜனதா கட்சியின் காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளரும் மாற்று திறனாளியுமான ஸ்ரீதர் மீது தனியார் நிறுவன பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலுசெட்டிசத்திரம் காவல் ஆய்வாளர் பிரபாகர் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி […]
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே திருக்குறுங்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் இவ்வாறு தெரிவித்தார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் வாய்ப்பு கிடைத்தால் பேசுவேன் என்றும் அவர் கூறினார். கவர்னர் உரையில் என்ன பேசுகிறார்கள் என்று பார்த்துவிட்டு அதன்படி தான் பேசுவேன் எனக் குறிப்பிட்ட தினகரன், திராவிட ஆட்சியில் ஆன்மீக அரசியல் சாத்தியப்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு உலகில் எங்குமே அரசியலுக்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தம் கிடையாது என்று தெரிவித்தார். ஆன்மீகம் என்பது மதம் சம்பந்தப்பட்டது என்று கூறிய தினகரன், எனவே […]
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஆண்டு, 57 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், திருட்டு வீடியோ தயாரித்த 242 பேர் கைது செய்யப்பட்டு, 8,70,68,000 ரூபாய் மதிப்பிலான சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆன் லைன் மோசடி செய்தவர்களிடமிருந்து 3,38,00,000 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் மல்லிகா கூறினார். … source: dinasuvadu.com
ராமேஸ்வரத்தில் நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை, அனைத்து மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து, மீனவர்கள் பிரச்சனை தீர்க்குமாறு கேட்டுக்கொண்டனர். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், கச்சதீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கும் என்றார். source: dinasuvadu.com