திண்டுக்கல் : பழனி அருகே பெரியகலையம்புத்தூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை. கட்டுபாடுகளை விதித்து வரும் 16 ம்தேதி நடத்த மாவட்ட ஆட்சியர் வீனய் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி அண்ணாநகர் 9 வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தரராஜ். இவரது மனைவி மாரியம்மாள் (51). இவர், கடந்த பல ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமடையவில்லை. இதற்காக ஏராளமான பணத்தை செலவழித்து மனமுடைந்த மாரியம்மாள், கடைசியாக கடந்த 5ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரியம்மாளின் கர்பப்பையில் 7 கிலோ அளவுள்ள கட்டி இருந்தது தெரியவந்தது. […]
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இன்றும் பல இடங்களில் பேருந்து ஓட வில்லை. இதனால் பெரிதான அளவில் பாதிக்க படும் மக்கள் நாய் வண்டியில் ஏறி செல்கின்றது அதிர்ச்சியை தருகிறது.பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரும்பாக்கத்தில் இருந்து பயணிகள் கோயம்பேட்டிற்கு நாய் வண்டி என்று கூட பார்க்கலாம் கட்டணம் கட்டி செல்கிறார்கள். இதன் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
மதுரை : மாடுபிடி வீரர்களுக்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக சர்ச்சை எழுந்ததால் மாடு பிடி வீரர்கள் ஏதேனும் அரசு அடையாள அட்டையை காண்பிக்கலாம் .எனவே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆதார் தேவையில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அறிவிப்பு செய்துள்ளார்…
திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் காவல்துறையினர் இடையேயான விளையாட்டு போட்டியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் மாவட்ட ஆட்சியர் வினய் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நாகைமாவட்டம் ,பொறையார் TBML கல்லூரியில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கி மாணவர்கள் போராட்டம். போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் ஊழியர்களின் ஓய்வூதிய பாக்கியை முழுமையாக வழங்கு போன்ற நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெறும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும். ஊழியர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத தமிழக அரசைக் கண்டித்தும் . இந்திய மாணவர் சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் […]
கோவையில் மேட்ரிமோனியல் இனையதளம் மூலம் பல ஆண்களை ஏமாற்றியதாக இளம்பெண், பெண்ணின் தாயார் உட்பட 3 பேரை கைது செய்து கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பாலமுருகன் (27). இவருக்கு சுருதி என்ற பெண்ணுடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டது. 3 மாதம் பழகியவுடன் பாலமுருகனிடம் திருமணம் செய்துக்கொள்வதாக சுருதி கூறியுள்ளார். இந்நிலையில், அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி தவணை முறையில் ரூ.45 லட்சம் பெற்றுள்ளார். பாலமுருகனும் […]
கோவையில் முகநூல் மூலம் பழகி காதலிப்பதாக கூறி ரூ.45 லட்சம் மோசடியில் ஈடுப்பட்ட இளம்பெண் உட்பட 3 பேர் கைது. சென்னையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் அளித்த புகாரின் பேரில் சுருதி, அவரது தாயார் சித்ரா, பிரசன்னா ஆகியோரை காவல்துறை கைது செய்தது.
தூத்துக்குடி : வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் தக்ஷின் பாரத் சரக்கு பெட்டக தளத்தில் இருந்து 1000 சரக்கு பெட்டக கொள்ளவு கொண்ட புதிய கப்பல் சேவையை துறைமுகசபை துணைத்தலைவர் நட்ராஜன் துவக்கி வைத்தார். பின்பு தூத்துக்குடி, இராமேஷ்வரம், கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் இடையே நீர்வழி பாதையில் பயணிகள் படகு போக்குவரத்து திட்டம் துவங்கப்படவுள்ளது என துறைமுகசபை துணைத்தலைவர் நட்ராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் நியமிக்கபட்டுள்ளார்.இதனால் அவரது சொந்த ஊர் மக்கள் இனிப்பு வழங்கி மகிழ்சியை வெளிபடுத்தினர் . திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குனராக உள்ள சிவன் இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை ஆகும். இஸ்ரோ தலைவராக சிவன் நியமிக்கப்பட்டதற்கு அவரது சொந்த ஊரான நாகர்கோவிலை அடுத்த சரக்கல்விளையைச் சேர்ந்த ஊர் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் சிவன் படித்த சரக்கல்விளை […]
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியை பொது தொகுதியாக அறிவிக்காவிட்டால் வரி செலுத்த மாட்டோம், அரசுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று அந்த தொகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 1967 ம் ஆண்டு முதல் இந்த தொகுதி தனித் தொகுதியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
வரும் ஜனவரி 15 ஆம் தேதியில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு , அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட வேண்டும் .அதேபோல் இறைச்சிகளை பதப்படுத்தி விற்கவும் தடை பிறப்பித்துள்ளார் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் .
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை ஜனவரி 1 ஆம் தேதிக்குள் அறிவிக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கறிஞர் கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இந்நிலையில் அந்த நோட்டிஸிக்கு பிப்ரவரி 12 ஆம் தேதிக்குள் மத்தய சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைப்பு செய்யப்பட்டுள்ளது.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் இருந்தால் மட்டுமே மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்க இயலும் என விழா கமிட்டி அறிவிப்பு செய்துள்ளது. ஏற்கனவே மத்தியரசு ஆதாரை கட்டாயப்படுத்தும் வேளையில் , ஜல்லிக்கட்டு விழாவில் அமல்படுத்தபடுவது வித்தியாசமான அணுகுமுறையாக உள்ளது.
திண்டுக்கல் : நீதிமன்ற வளாக புறவழி சாலையில் காரில் சென்றவர்களை கத்தி மற்றும் ஆயுதங்களை காட்டி மிரட்டிய வழக்கு. தென்காசியைச் சேர்ந்த அனீபா, திண்டுக்கல்லைச்சேர்ந்த நிசார் அலி, சைய்யது, இப்ராகிம் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடந்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் தான் ஒகி புயலால் அதிகம் பாதிக்கபட்ட மாவட்டம் ஆகும்.எனவே இன்னும் அதன் பாதிப்பில் இருந்து மீளாத காரணத்தால் குமரியில் போராட்டம் நடத்திவருகின்றனர் . கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும், குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. புலியூர்க்குறிச்சி […]
கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவரது உருவப்படத்தை எரித்து 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்து, ஆண்டாள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதாக புகார் எழுந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பபட்டுள்ளது. இந்நிலையில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கே வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் […]
தூத்துக்குடி : பிஅன்டி காலனியில் உள்ள ஶ்ரீ ராதா கிருஷ்ண பொருமாள் ஆலயத்தில் ஆண்டாளுக்கு கூடாரை வல்லி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
சென்னையில் கோயம்பேடு உள்ளிட்ட 5 பேருந்து நிலையங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 11, 12, 13 ஆகிய தேதிகளில் பொங்கல் சிறப்புப் பேருந்துகள் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் 29 சிறப்புக் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு முன்பதிவு நேற்று முன் தினம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் 8-வது நாளாக இன்று நீடித்து வரும் நிலையில், தற்போது வரை முன்பதிவுகள் நடைபெறாததால் சிறப்புக் கவுண்டர்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. […]
திருச்சி:கடந்த 8வது நாளாக தொடர்கிறது அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருவதையொட்டி ஊதிய உயர்வு கிடைக்காத விரக்தியில் அரசு போக்குவரத்து தொழிலாளர் வெங்கடேசன் (43) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொழிலாளர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.