மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்த நிலையில், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இதை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் அவர்கள், காளைகளை துன்புறுத்தாமல் ஜல்லிக்கட்டு போட்டியில் விளையாடுவோம் என்ற உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர். உறுதிமொழியேற்ற பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து, ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தனர். இதில் தமிழக அமைசர்கள், நாடாளுமன்ற […]
ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுத்தீவிற்கு இடைப்பட்ட பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர். பின்னர் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, 4 விசைப்படகுகளை மறித்த இலங்கை கடற்படையினர், அதிலிருந்த 16 […]
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் மாட்டுப் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 550 காளைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்தக் காளைகளைப் பிடிப்பதற்கு 600 வீரர்கள் வந்துள்ளதால் ஒரு மணி நேரத்துக்கு 200பேர் கொண்ட ஒரு குழுவுக்கு என்ற முறையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கால்நடைப் பராமரிப்புத் துறையைச் சேர்ந்த மருத்துவர்களின் சோதனைக்குப் பின்னரே காளைகள் களமிறக்கப்படுகின்றன. முதலில் சூரியூர் கோவில் காளை இளையகாசிக்குப் பூசைகள் செய்யப்பட்டு அவிழ்த்துவிடப்பட்டு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதையடுத்து […]
பாலமேட்டில் ஆயிரத்து 2 காளைகளும் ஆயிரத்து 188 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. அரசு விதிகளுக்கு உட்பட்டு தான் போட்டிகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர். முதலில் கொண்டு வரப்பட்ட 5 கோவில் காளைகளுக்கு அமைச்சர் உதயகுமார் தங்கக் காசு […]
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகும் நிலையில் உள்ளது மதுரை அலங்காநல்லூர். இந்நிலையில் மதுரை அலங்காநல்லூரில், உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழா வரும் 16ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமன்றி, திருச்சி, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் உடற்தகுதி பரிசோதனையில் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு, ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன…
தொலைதூரக்கல்வி கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவன இயக்குநர் (பொறுப்பு) பேராசிரியர் எஸ்.கருணாநிதி, இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி திட்டத்தில் சேர்ந்துள்ள மாணவர்கள் (A15, C16, A16, C17, A17 அணியினர் மற்றும் அதைத்தொடர்ந்த அணியினர்) தங்களின் 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு டியூஷன் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். இதுகுறித்து கூடுதல் விவரங்களை www.ideunom.ac.in, : www.unom.ac.inஎன்ற இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார். source: dinasuvadu.com
சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி.பின்னர் அந்த ரூ.21.97 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்டும் பணியை தொடங்கிவைத்தார் பின்பு செய்தியாளர்களை சந்திப்பின் போது “போக்குவரத்து நெரிசலற்ற மாநகரமாக சேலம் மாநகரம் உருவாக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார் முதல்வர் பழனிசாமி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புது தாப்பாத்தி பகுதியை சேர்ந்த முகேஷ்குமார் என்பவர், நேற்று மாலை அதே பகுதியில் உடலில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்து சென்ற மாசார்பட்டி போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]
சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய , அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன், பண்டிகை காலங்களில் இயங்கும் ஆம்னி பேருந்துகள் மீண்டும் திரும்பி வரும் போது இருக்கைகள் நிரம்பாமல் வருவதாகவும், அதனால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார். சாதாரண நாட்களில் வழக்கமான கட்டணத்தை விட குறைந்த கட்டணத்தில் பேருந்துகளை இயக்குவதாகவும், இதுவரை அரசு கட்டணம் நிர்ணயிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும் அதிக கட்டணத்தை வசூலிக்கும் பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை […]
சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் 19வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால் சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனர்.
நாகர்கோவிலை சேர்ந்த பெண் மஷா நசிம் ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான’ தனது பங்களிப்புக்காக கௌரவ தேசிய இளைஞர் விருதைப் பெறுகிறார். அவர் தற்போது மாநில அரசு அதிகாரிகள் பயன் படுத்தும் அளவில் ஹைடெக் ரெயில் கழிப்பறை முறை, எரிபொருள் விநியோகங்கள், எதிர்ப்பு மூழ்கி எச்சரிக்கை போன்று 14 சமூக பயன்பாட்டு கேஜெட்களை கண்டுபிடித்துள்ளார். 2016ஆம் ஆண்டிற்கான மாநில இளைஞர் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் இந்த விருதை இன்று அவர் பிரதமர் நரேந்திர மோடி கையால் வாங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காற்றின் தரம் குறித்து சென்னையின் 15 இடங்களில் ஆய்வு நடந்து வருகிறது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தியாகராயநகர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போகி பண்டிகையை முன்னிட்டு தென் சென்னையில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 10 மணிநேரம் வரை புகைமூட்டம் நீடிக்கும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இன்று அதிகாலையில் போகி பண்டிகையையொட்டி சென்னையில் விமானங்கள் ரத்தானது .அதேபோல் வாகன ஓட்டிகளும் கடுமையான சிரமத்திற்கு உள்ளனார்கள் […]
கோவை: மின்கசிவு காரணமாக கருமத்தம்பட்டி அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள விசைத்தறி கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தினால் பல லட்சம் மதிப்புள்ள காடா துணிகள் மற்றும் நூல்கள் தீயில் எரிந்து சேதமாயின. பின்னர் சுமார் அரைமணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்
போகி பண்டிகையையொட்டி சென்னையில் பொதுமக்கள் அதிகாலையளவில் அதிக அளவிலான பழைய பொருட்களை எரித்ததால் விமான நிலையத்தின் ஓடுபாதை முழுவதும் புகைமண்டலமாக சூழ்ந்துள்ளது. இதனால்,சென்னை விமானநிலையத்தில் 12 விமானங்கள் தரையிரங்க முடியாமல் பெங்களூரு உள்ளிட்ட 4 இடங்களுக்கு திருப்பியனுப்பப்பட்டன.மேலும் 30க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் விழாவின் தொடக்கமான போகி பண்டிகையையொட்டி, அதிகாலையிலேயே எழுந்து மக்கள் தங்கள் வீட்டில்உள்ள பழைய பொருட்களை கொளுத்தி கொண்டாடி வருகின்றனர். இதனால் சென்னையில் பனியோடு புகைசூழ்ந்து காணப்படுகிறது. சாலைகளில் வாகனங்கள் செல்வதுகூட தெரியாத அளவுக்கு புகை சூழ்ந்துள்ளது
தூத்துக்குடியில் வெள்ளம் வருவதை மதிப்பீடு செய்ய சென்னை அண்ணா பல்கலைகழக மாணவர்களின் உதவியுடன் ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்தார் .இதனால் வெள்ளம் வரும் முன்னரே அது குறித்த ஆபத்துகளை கண்டறியலாம் . நீர்நிலை பகுதிகளில் வெள்ளம் வருவதை மதிப்பீடு செய்யவும், வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படும் பகுதிகளை கண்டறியவும் உதவும் ஆள்லில்லா விமானம் மூலம் ஆய்வு செய்யும் பணியை இன்று தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் இருந்து உபரியாக கடலுக்கு செல்லும் […]
கன்னியாகுமரி: கந்துவட்டி கொடுமையால் ஜான் என்ற 75வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை வாங்கிய கடனை திரும்பக் கொடுக்காததால் பிரசன்னகுமார் என்பவர் கொலை மிரட்டல் விடுத்ததாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மார்த்தாண்டம் காவல் ஆய்வாளருக்கு கடிதம்
2014ல் கோவையில் விசைத்தறி கூடத்தில் 6வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டிஸ்அனுப்பியுள்ளது. உயிரிழந்த சிறுமியின் பெற்றோர்கள் கொத்தடிமைகள் என அறிவிக்கவும், மறுவாழ்வு பெறுவதை உறுதிப்படுத்தவும் என கோவை மாவட்ட நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சென்னையில் இருந்து சென்ற அரசு பேருந்து மீது நாகைப்பட்டினம் அருகே உள்ள சீர்காழி புறவழிச்சாலையில் கல்வீச்சு நடந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் ஓட்டுநர் காயமடைந்துள்ளார்.பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் மாற்று பேருந்து மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்
சென்னையில் பொதுமக்களை நாய் வண்டியில் ஏற்றி சென்ற விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் முறையீடு செய்தார். இந்நிலையில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது,அதன் விசாரணையில் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் தலையிட முடியாது எனவும் பத்திரிகை செய்தி அடிப்படையின் பேரில் இதுபோன்ற முறையீடுகளால் நீதிமன்ற நேரத்தை வீணடிக்காதீர்கள் என தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.