மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி நகருக்கு வந்த விமானத்தில் சட்டத்திற்கு புறம்பான முறையில் கடத்திவரப்பட்ட சுமார் ரூபாய் 4.21 லட்சம் மதிப்பிலான 147 கிராம் தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் இன்று காலை பறிமுதல் செய்யப்பட்டது… இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பக்ருதீன் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்…
காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு 4வது நாளாக இன்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு.. சங்கரமடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர்,தமிழக ஆளுநர் மற்றும் பிஜேபி தேசிய செயலாளர் ஹேச்.ராஜா ஆகியோர் பங்கேற்ற சமஸ்கிருதம் இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சியின் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது எழுந்து நிற்காமல் அமர்ந்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. போராட்டம் நடத்தப்போவதாக சில அமைப்புகள் தெரிவித்ததையடுத்து தமிழக காவல்துறையானது தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் முதல் முறையாக ஜல்லிகட்டு போட்டியானது இன்று நடக்கிறது. இந்த ஜல்லிகட்டு போட்டிக்காக மதுரை,திண்டுக்கல்,சிவகங்கை ஆகிய தென்மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகளும்,750 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்… நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 2படகுகளுடன் மீன்பிடிக்க சென்ற 12 தமிழக மீனவர்கள் இந்திய பெருங்கடலில் உள்ள நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டனர்.
கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். டிடிவி தினகரன் தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சாலை மறியலில் ஈடுப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் 47 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கல்லீரல் நோய் தொடர்பான சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்ட முதல்வர் பேசுகையில், “உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. இதற்காக மூன்று முறை தேசிய விருது பெற்றது மிகவும் பெருமையளிக்கக் கூடியது. இங்கு தரமான சுகாதார சேவை வழங்கப்படுகிறது. சுகாதாரத்துறை நிர்ணயித்த இலக்குகளை, வெகு சீக்கிரமே அடைந்துவிட்டோம். உடலுறுப்பு தானத்திற்காக பிரத்யேக இணையதளம் உருவாக்கி, எளிதில் பதிவு செய்து கொள்ளும் முறையை கொண்டு […]
பேருந்து கட்டணத்தை உயர்த்தி மக்களை மிக கஷ்டத்தில் ஆழ்த்தியிருக்கும் தமிழக அரசு. தற்போது 300 மாநகர பேருந்துகளை குறுகிய தூர வழிதடங்களாக மாற்றி மறைமுக வசூல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறது என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் இதுவரை இயங்கி வந்த 300 நெடுந்தூர போக்குவரத்து சேவைகளை நிறுத்தி குறைந்த தூர வழித்தடமாக அரசு போக்குவரத்து கழகம் மாற்றியிருக்கிறது. இதுவரை ஒரே பேருந்தில் சென்று வந்த இடங்களுக்கு தற்போது 2 அல்லது 3 பேருந்துகளை பிடித்து செல்லவேண்டிய […]
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முன்பு திமுகவின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சியினர் 500 பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
தமிழ் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அவ மரியாதை செய்த காஞ்சி சங்கர மடாதிபதி விஜேயந்திர சரசுவதியை கண்டித்தும் பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும் இன்று 26.01.2018 ஈரோட்டில் பல்வேறு இடங்களில் தடையை மீறி போராட்டம் முத்தம்பாளையம் பகுதியில் இளம்புலிகள் மாநகர செயலாளர் பிரவீன் தலைமையிலும் ஓடை பகுதியில் மாவட்ட துணை செயலாளர் தேசிங்கு தலைமையிலும் பவானியில் மாவட்ட துணைசெயலாளர் செம்பன் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றது
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை தொடர்பாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதால் காஞ்சி சங்கர மடத்திற்கு 3வது நாளாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காமல் அவமதித்த விஜயேந்திரரின் உருவபொம்மையை தஞ்சையில் மாணவர்கள் எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய நூல் வெளியிட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி […]
நேருபூங்காவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் மெட்ரோ ரயில் வேலைகள் நடந்து வருகின்றது. சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் உள்ள இடத்தில் சோதனை ஓட்டம் நடந்தது. இந்த சோதனை ஓட்டம் தொடர்ந்து நடக்கும். சோதனை ஓட்டம் முடிந்த பிறகு விரைவில் மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட நிலையில், சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ சேவை அடுத்த மாத இருதியில் தொடங்கவுள்ளது.
சென்னை முழுவதும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் செல்கின்றனர். மேலும் இந்த கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு அடைந்துள்ளது.மொரீசியஸ், கோலாலம்பூர், கொச்சி விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காமல் அவமதித்த விஜயேந்திரரின் உருவபொம்மையை தஞ்சையில் மாணவர்கள் எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய நூல் வெளியிட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு ஒலிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் உட்கார்ந்தப்படியே இருந்தார். ஆனால் தேசிய கீதத்துக்கு […]
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், மன்னார்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் வறட்சியாலும், வெள்ளத்தாலும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது முதற்கட்ட சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆதலால் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்முதல் குறித்து அமைச்சர்கள், […]
தேனி மாவட்டம் கூடலூரில் டி.டி.வி.தினகரன் அணி சார்பில், மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் 101–வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். மருத்துவஅணி செயலாளர் டாக்டர் கதிர்காமு, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஸ்டார்ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கைபரப்பு செயலாளரும், மாவட்ட செயலாளருமான தங்கதமிழ்செல்வன், கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:– ஜெயலலிதா இறந்த பின்பு, […]
சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழக அரசு திடீரென்று பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களும், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினரும் போராடி வருகின்றனர். எனவே அரசு உடனடியாக பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். ஆனால் கட்டண உயர்வை திரும்ப பெறுவது குறித்த மறுபரிசீலனை இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. போக்குவரத்துக்கழகங்கள் நஷ்டத்தில் இயங்க மிக […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று ஒரு திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொள்ள வந்த தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மாலையில் தனியார் ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அடுத்த மாதம் 28-ந்தேதி, கிருஷ்ணகிரியில் வேலூர், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வட்டார, நகர, தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழகத்திற்கு, மத்தியஅரசு அதிககவனம் செலுத்தவேண்டும். தமிழகஅரசு, மக்களின் எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்க தவறுகிறது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் […]
தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து திருவாரூரில் நன்னிலம் பாரதிதாசன் உறுப்பு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாணவ-மாணவிகள் ஊர்வலமாக சென்று நன்னிலம் தாசில்தாரிடம் […]
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியன் வங்கிக் கிளையை முற்றுகையிட்டவர்களை போலீசார் இழுத்துச் சென்று கைது செய்தனர். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், பஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று, ஆண்டிபட்டி இந்தியன் வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை […]
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கடந்த 2 தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளிருப்பு போராட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என்று தங்களது எதிர்ப்பை அவர்கள் தெரிவித்து வருகின்றனர். பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று அக்கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர். போராட்டத்தின்போது, ‘பின்தங்கிய மாவட்டத்தில் உள்ள எங்களது பெற்றோர் வருமானமே ரூ.200 தான். அதில் பாதி பஸ் கட்டணத்திற்கு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் எங்களது பெற்றோர் குடும்ப […]