சென்னை : கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்தி கொடுத்துள்ளது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சந்தித்து, அவரின் தொகுதி மேம்பாட்டு பணிகள் பற்றியும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கோரிக்கைகளை முன் வைத்திருந்தார். அது பற்றி செய்தியாளிடம் பல்வேறு தகவல்களை அவர் தெரிவித்தார். வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” கோவை […]
சென்னை : தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக மின்தடை ஏற்படும். அதன்படி நாளை, ஆகஸ்ட்-21 சென்னையில் உள்ள ஒரு சில முக்கிய இடங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது. அது எந்த இடங்கள் மற்றும் மின்தடை ஏற்படும் காரணங்களையும் கீழே கண்டு தெரிந்து கொள்ளலாம். தென் சென்னை – ஹஸ்தினாபுரம் ஆர்பி சாலை பகுதி, அண்ணாசாலை, காயத்திரி நகர், வேல்முருகன் நகர், வினோபோஜி நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர், பாசியம் […]
சென்னை : தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக மின்தடை ஏற்படும். அதன்படி நாளை, ஆகஸ்ட்-20 சென்னையில் உள்ள ஒரு சில முக்கிய இடங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது. அது எந்த இடங்கள் மற்றும் மின்தடை ஏற்படும் காரணங்களையும் கீழே கண்டு தெரிந்து கொள்ளலாம். தென் சென்னை : எல்காட் அவென்யூ சாலை, மாடல் பள்ளி சாலை கிளாசிக் படிவங்கள், நெடுஞ்செழியன் தெரு, நாராயணசாமி தெரு, படவட்டமான் கோயில், பரமேஸ்வரன்நகர், பொன்னியம்மன் […]
கிருஷ்ணகிரி : பள்ளி மாணவிக்குப் போலி NCC முகாமில் நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்த விசாரணை விவரங்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு செய்தியாளர்களிடம் கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார்ப் பள்ளி ஒன்றில் அண்மையில் நடைபெற்ற போலியான என்சிசி முகாமில் சுமார் 17 பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கலந்து கலந்து கொண்ட 13 வயது பள்ளி மாணவிக்கு போலி என்சிசி பயிற்சியாளரால் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. இந்த பாலியல் […]
கிருஷ்ணகிரி : பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் உட்பட இதுவரை 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் அண்மையில் பள்ளி மாணவிகளுக்கு என்சிசி பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சியில் சுமார் 17 மாணவிகள் தனியார் பள்ளியில் தங்கி பயிற்சி பெற்றுள்ளனர். மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்கும் நபராக நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் செயல்பட்டு வந்துள்ளார். புகார் ஏற்க மறுப்பு : இந்த பயிற்சியின் போது 8ஆம் […]
தூத்துக்குடி : நாளை (ஆகஸ்ட் 20-08-2024) செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி அது எந்தெந்த இடங்கள் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட் பகுதிகள், மட்டக்கடை, வடக்கு பீச் ரோடு, ரெயில்வே ஸ்டேசன் ரோடு, எட்.டயபுரம் ரோடு, தெப்பக்குளம் தெரு, சிவன்கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, ஜெயிலானி தெரு, […]
சென்னை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பொறுப்பில் இருந்த லட்சுமிபதி , முதலமைச்சரின் இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாராக பொறுப்பில் இருந்த லட்சுமிபதி ஐஏஎஸ் அவர்களை, முதலமைச்சரின் இணை செயலாளராக நியமனம் செய்து தமிழக புதிய தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியராக இளம் பகவத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, தமிழக தலைமை செயலாளராக பொறுப்பில் இருந்த சிவதாஸ் மீனா ஐஏஎஸ் மாற்றம் செய்யப்பட்டு, […]
சென்னை : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று சென்னையில் 7 அமைச்சர்கள், 3 எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை தரக்கூடிய வடகிழக்கு பருவமழையானது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் ஆரம்பித்து ஜனவரியில் நிறைவுபெறும். குறிப்பாக கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் பாதிப்பை பலரும் மறந்திருக்க மாட்டார்கள். மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் சென்னை (முழுவதும்), காஞ்சிபுரம், செங்கல்பட்டு, […]
சென்னை : நான் அமெரிக்கா சென்றாலும் கட்சியையும், ஆட்சியையும் நான் கவனித்துக் கொண்டிருப்பேன் என இன்றைய தினம் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திமுக தலைவராகவும், தமிழக முதலமைச்சராகவும் மு.க.ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் திமுகவின் இளைஞரணி செயலாளராகவும் கட்சியில் தீவிரமாகச் செயலாற்றி வருகிறார். அவரை துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்க வைக்க வேண்டும் என திமுக கட்சியில் குரல்கள் வலுத்து வருகிறது. இது குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கூட பொது மேடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக […]
சென்னை : இன்று 78வது சுதந்திர தின விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார். இன்று 78வது சுதந்திர தினவிழா நாடெங்கிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை, கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். அவ்வாறு இன்று முதலமைச்சரிடம் இருந்து விருது வாங்கியவர்களின் பட்டியலை கீழே காண்போம். “தகைசால் தமிழர் விருது” காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. “டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் […]
சென்னை : சுதந்திர தினவிழா நிகழ்வில், “முதல்வர் மருந்தகம்”,” முதல்வரின் காக்கும் கரங்கள்” ஆகிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து அது பற்றிய கடனுதவி, மானிய விவரங்களை விரிவாக கூறினார். இன்று நாடு முழுவதும் 78வது சுதந்திர தினவிழா நிகழ்வுகள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தலைநகர் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார். பின்னர், நல்லாளுமை விருதுகள், கல்பனா சாவ்லா விருது, தகைசால் விருது, முதலமைச்சரின் இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருது பாட்டில்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு முதலமைச்சர் விருதுகள் வழங்கி […]
சென்னை : சுதந்திரதினம் உள்ளிட்ட தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து செல்லும் உள்ளூர் விமான டிக்கெட் விலை தற்போது கடுமையாக ஏற்றம் கண்டுள்ளது. நாளை ஆகஸ்ட் 15 (வியாழன்) சுதந்திரதின பொது விடுமுறையை அடுத்து வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை என அடுத்தடுத்த நாட்களில் பெரும்பாலான நிறுவனங்கள், கல்வி மையங்களில் 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், தலைநகர் சென்னையிலிருந்து பணிபுரியும் தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இம்மாதிரியான தொடர் விடுமுறை நாட்களில் பேருந்து, ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். […]
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 15 தொழில்துறை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா, பொன்முடி, கே.என்.நேரு, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ், சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். பாரிஸ் பயணம் மேற்கொண்டுள்ளதால் அமைச்சர் உதயநிதி இந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அமெரிக்க பயணம் […]
சென்னை : இன்று அதிகாலை சென்னை டி.பி சத்திரம் பகுதியில் ரவுடி ரோஹித் ராஜன் காவல்துறையினரிடம் இருந்து தப்ப முயன்றபோது பெண் எஸ்.ஐ-யால் சுட்டுப்பிடிக்கப்பட்டார். கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதியன்று பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவராக அப்போது பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங் ஓர் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். தேசிய கட்சியின் மாநில தலைவர், அப்பகுதி மக்கள் மத்தியில் மிகப்பெரும் செல்வாக்கை பெற்ற மனிதராக வலம் வந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவமானது நாடு முழுவதும் அதிர்வலையை […]
சென்னை : போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதற்கான விழிப்புணர்வு வீடியோக்களும் வெளியாகி உள்ளன. இன்று சென்னை பல்கலைக்கழகத்தில் காவல்துறை “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இதில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் போதைப் பொருள் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் சிறப்பு பதக்கங்களை வழங்கி கெளரவித்தார். இந்த நிகழ்ச்சியில் […]
சென்னை : சில தினங்களுக்கு முன்னர் சென்னை மாநகராட்சியில் பல்வேறு பிரதான இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் Zero Is Good எனும் பதாகைகள் வைக்கப்பட்டன. Zero Is Good எனும் விழிப்புணர்வு பதாகைகளின் அர்த்தம் விபத்து எண்ணிக்கை பூஜ்ஜியம் என்பதை குறிக்கிறது. இந்த பதாகைகளை பல்வேறு இடங்களில் மட்டுமின்றி, ஆட்டோக்கள் மூலமும், போக்குவரத்து காவலர்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது விபத்து ஏற்படுத்த கூடாது என்பது பற்றிய புதிய விழிப்புணர்வு முயற்சியை சென்னை […]
கோவை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவைக்கு பயணம் மேற்கொண்டு அங்கு பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு துவங்கி வைக்க உள்ளார். இதற்காக இன்று (ஆகஸ்ட் 9) காலை 11 மணி அளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வரவுள்ளார். புதுமை பெண் திட்டம் : தமிழக முதலமைச்சர், அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் பயன்பெறும் வகையில் கடந்த 2022ஆம் ஆண்டில் தொடங்கிய ‘புதுமை பெண்’ திட்டத்தின் நீட்சியாக, இன்று ‘தமிழ் புதல்வன்’ […]
மதுரை : இன்று (ஆகஸ்ட் 8) முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) வரையில் மதுரையின் சிறப்புகளை போற்றும் வகையில் ‘மாமதுரை’ விழா நடைபெற உள்ளது. மதுரையில் பெருமைகளை போற்றும் வகையில் ஆண்டுதோறும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. யங் இந்தியன்ஸ் எனும் அமைப்பு இந்த விழாவை நடத்தி வருகிறது. மாமதுரை விழா தொடக்கம் : மதுரை தமுக்கம் மைதானத்தின் இன்று மாமதுரை விழா தொடங்கியது. இந்த தொடக்க நிகழ்வில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன், அமைச்சர்கள் பி.டி.ஆர் […]
திண்டுக்கல் : கேரள மாநிலம் வயநாட்டில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தற்போது வரையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. வயநாடு பகுதி மக்கள் தங்கள் வீடுகளை , உடமைகளை இழந்து தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க போராடும் நிலையில் உள்ளனர். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாநில அரசுகள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், தன்னார்வலர்கள் என பலரும் தங்களால் இயன்ற நிதியுதவி மற்றும் பொருளுதவிகளை அளித்து வருகின்றனர். […]
சென்னை : இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 5வது திட்டக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திட்டக்குழுவின் வரையறை கொள்கைகள், தமிழக அரசுசெயல்படுத்தி வரும் , செயல்படுத்தபோகும் திட்டங்கள் , அதன் செயல்பாடுகள் , அதற்கான நிதி ஆதாரங்கள், சாத்தியக்கூறுகள் என பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்படும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு , திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன், தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, கூடுதல் தலைமை […]