உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழுவை அமைப்பது குறித்து அகில இந்திய பார்கவுன்சிலிடம் கருத்துக் கேட்டு தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது. பார்கவுன்சில் தேர்தலில் முறைகேட்டைத் தடுக்கக் கோரி பாஸ்கர் மதுரம் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் விஜய் நாராயணன், தேர்தலில் வாக்குக்கு 30 ஆயிரம் ரூபாய், வெளிநாடு சுற்றுலா, இருசக்கர […]
தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்து கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, இரண்டாம் நாளாக வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிக்குள் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தூத்துக்குடியில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி செய்து செய்து, உடலை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து சிறுவன் கொடூர செயல். தூத்துக்குடி மாவட்டம் கீழத்தட்டாப்பாறை கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் படித்து வந்தார். நேற்று இரவு சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றுவிட்ட நிலையில், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதையறிந்த அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனால் அலறிய சிறுமியின் கழுத்தை துண்டால் […]
ரெயில்வே காவல் கண்காணிப்பாளர் சென்னை மின்சார ரெயிலில் பட்டாகத்தி போன்ற ஆயுதங்களுடன் சென்று ரகளையில் ஈடுபடும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓடும் ரெயிலில் பட்டாக்கத்திகளை உரசிக்கொண்டு சென்ற 9 மாணவர்கள் ஆயுத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு வருங்காலத்தில் பாஸ்போர்ட், மற்றும் காவல்துறையின் நன்னடத்தை சான்று வழங்கப்படாது என்று காவல்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை கெத்து காட்டுவதாக நினைத்து பட்டரவாக்கம் ரெயில் நிலையத்தில் […]
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆவடி உட்பட நாட்டின் 5 ராணுவ சீருடை தொழிற்சாலைகளை மூடக்கூடாது என்று கூறியுள்ளார். சீருடைகளுக்கு பதில் சீருடைப்படி வழங்கும் 7-வது ஊதியக் குழு பரிந்துரையை அடுத்து இந்த தொழிற்சாலைகள் ஏப்ரலுடன் மூடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஆவடியில் 2 ஆயிரத்து 321 பேர் உட்பட 12 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்றும் கூறியுள்ளார். ராணுவ சீருடைகளின் சிறப்பே மிடுக்கு என்று தெரிவித்துள்ள அவர், ஒரே மாதிரி சீருடையில் பயிற்சி மற்றும் […]
கடந்த மாதத்தை விட இந்த மாதம் காய்கறிகளின் விலை பாதிக்குமேல் சரிந்து காணபடுகிறது. இதற்க்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்து மார்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் லாரிகளும் அதிகமாக வர ஆரம்பித்து விட்டன. இதன் காரணமாக சென்னை கோயம்பேடு மார்கெட்டில் கடந்த மாதம் கிலோ ரூ.120 ஆக உயர்ந்து இருந்த சின்ன வெங்காயம் தற்போது 30 ரூபாயிலிருந்து 60 ரூபாய் வரை விற்க்கபடுகிறது. கேரட் மற்றும் பீன்ஸ் ஆகியவை ரூ.15 ஆகவும் விற்பனையாகிறது. மேலும் தக்காளி ரூ.8 ஆகவும் விற்பனையாகிறது. […]
பேருந்து கட்டணத்தை தமிழக அரசு அதிகமாக உயர்த்தி சில பைசாமட்டும் பல போராட்டங்களுக்கு பிறகு குறைக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற கோரி வேலூர் மாவட்டம் ஓட்டேரி சாலையில் முத்துரங்கம் கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி உள்ளனர். source : dinasuvadu.com
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் ராணுவத்திற்கான ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலை 56 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 2,200 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி இந்த ஆலையை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக இங்கு வேலை செய்யும் சுமார் ஆயிரகணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. source : dinasuvadu.com
கனிம வளத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மதுரைப் பெருமாள் மலையில் உள்ள சமூக நலக்காடுகளை அழித்து கல்குவாரிகள் அமைக்க தடைவிதிக்கக் கோரி மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த சண்முகவேல் என்பவர் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அடங்கிய அமர்வு, தமிழகத்தில் எந்தெந்த மலைகள், குன்றுகளில் குவாரிகள் நடத்தப்படுகின்றன? அவற்றில் எத்தனைக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது ? என மாவட்ட வாரியான விரிவான விவரங்கள் அடங்கிய அறிக்கையுடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க […]
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்கள் பின்நோக்கி நடந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை பஸ்நிலையம் முன்பு பேருந்து கட்டண உயர்வை ரத்துசெய்ய கோரியும், தமிழக அரசை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்கள் பின்நோக்கி நகர்ந்து செல்லும் போராட்டம் செய்தனர். இதில் 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவரை குளித்தலை காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு தனியார் திருமணமகாலில் தங்கவைத்துள்ளனர். https://www.facebook.com/100011243927225/videos/543527182698741/ https://www.facebook.com/100011243927225/videos/543527182698741/
நாமக்கல் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி மற்றும் குமாரபாளையம் அரசு கலைக் கல்லூரியில் கருப்பு பேட்ச் அணிந்து 2500 மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போரட்டம் மற்றும் நாமகிரிப்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் ஒன்றிய செயலாளர் P. இளங்கதிர் தலைமையில் 1000 மாணவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து வகுப்புக்கு 130 மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்பு வகுப்புக்கு சென்றனர் நடைபெற்றது மற்றும் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் இராசிபுரம் ஒன்றிய செயலாளர் R. காயத்திரி தலைமையில் 3000 மாணவர்கள் […]
பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வரும் வேளையில் மூன்றாவது முறையாக தூத்துக்குடி மாவட்டம் கீழ ஈரால் பகுதியில் உள்ள தொண்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் இந்திய மாணவர் சங்க கோவில்பட்டி ஒருங்கிணைப்பாளர் சங்கரலிங்கம் மற்றும் விளாத்திகுளம் ஒருங்கிணைப்பாளர் சத்தியநாதன் தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசின் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் 1320 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா சென்னை கலைவானர் அரங்கில் நடைபெறகிறது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். மத்திய அரசின் பாரத மிகு மின் நிலையத்துக்கும், தமிழ்நாடு அரசின் மின்சார வாரியத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முதலில் உடன்குடி மின் திட்டத்துக்கு அடிக்கல் முதலமைச்சர் பழனிசாமி நாட்டினார். பின்னர் நிகழ்ச்சியை […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணிபுரிந்த ஸ்ரீஜா என்ற பெண் தனது 2 குழந்தைகளுக்கும் விஷ ஊசி செலுத்தி கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார் குடும்பப்பிரச்னை காரணமாக கொலை மற்றும் தற்கொலை நடந்ததா…?? என்ற கோணத்தில் ஈரோடு மாவட்ட போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை உள்நாட்டு விமானநிலையத்தின் மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை செய்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் உள்ள 50 அடி உயர மேம்பாலத்தில் இருந்து குதித்து விஜயவாடாவைச் சேர்ந்த சைத்தன்யா (30) என்ற நபர் தற்கொலை செய்து கொண்டார். இவர் குதித்தது 4வது நுழைவாயிலில் உள்ள மேம்பாலத்தில் இருந்து குதித்தார். மேலும் அவரது தற்கொலை குறித்து சென்னை விமான நிலைய போலீசார் தீரவமாக விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் இராஜாஜி அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்த தான முகாமை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் திரு. ஜவாஹிருல்லாஹ் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் அவதிப்படும் வேளையில், பலருக்கு மிதிவண்டி பக்கம் கவனம் திரும்பியுள்ளது. ஆகவே யாருக்கும் கவலை வேண்டாம்.. சென்னையில் மிதிவண்டி பயணத்திற்கு இலவசமாக வாய்ப்பளித்துள்ளது மெட்ரோ ரயில் நிறுவனம்.. அசோக் நகர், வடபழனி, திருமங்கலம், அண்ணாநகர் கிழக்கு, செனாய் நகர், நேரு பூங்கா ஆகிய 6 நிலையங்களில் இருந்து மிதிவண்டிகளை இலவசமாக பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்பணமோ அல்லது கட்டத்தேவையில்லை என்று என அந்நிறுவனம் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஜிஜி காலனி பகுதியில் உள்ள அளத்து பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. நேற்று இக்கோவிலின் கும்பாபிசேகமானது நடைபெற்றது. அப்போது கோவில் கருவறையில் உள்ள அம்மன் சிலைகளை நகட்டும் போது 1835ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்த ஆங்கில அரசாங்கத்தின் பழைமையான நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று தூத்துக்குடி ரசிகர்கள் நடத்திய கூட்டத்தில் வீடியோவில் பேசினார். அதில், தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவது தன் நோக்கம் என அவர் கூறியுள்ளார். மேலும், “அரசியல் என்பது சுயநலமல்ல பொதுநலம். மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே நமது நோக்கம். ஆண்டவன் அளித்துள்ள வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக, ஒழுக்கமாக இருக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம். தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டுவருவோம். குடும்பத்தை விட்டுவிட்டு […]
இன்று காலை சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து அளித்து துவங்கி வைத்தார் . இதன் ஒருபடியாக மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வீரராகவ ராவ் அவர்களும் முனிச்சாலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்தை குழந்தைகளுக்கு வழங்கினார்கள்.