உடல் உறுப்புகள் விற்பனை சேலம் மணிபால் மருத்துவமனையில் நடைபெறுவதாக எழுந்த புகாரின் பேரில் அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை மேற்கொண்டனர். சேலத்தில் விபத்தில் மூளைச்சாவடைந்த இளைஞர் ஸ்ரீரங்கனின் குடும்பத்தினர் சிகிச்சைக் கட்டணமான 50 ஆயிரம் ரூபாயை செலுத்த முடியாமல் தவித்த நிலையில், அவரது உடல் உறுப்புகளுக்கு மணிபால் மருத்துவமனை நிர்வாகம் 2 லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ரோகிணி உத்தரவின் பேரில், சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் […]
நாடார்மக்கள் சக்தி அமைப்பின் தலைவர் ராக்கெட் ராஜா உள்ளிட்ட 9 பேரை நெல்லையில் கொடியன் குளம் குமாரின் மருமகன் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தேடிவருகின்றனர். நெல்லை மாவட்டம் கொடியன்குளத்தை சேர்ந்தவர் குமார். அதிமுக பிரமுகரான இவர் பாளையங்கோட்டை அடுத்த அண்ணா நகரில் உள்ள தோட்டத்து வீட்டில் தனது மருமகன் செந்தில் குமாரிடம் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று குமார் மீது வெடி குண்டு வீசி கொலை செய்ய முயன்றது. கொடியன் குளம் குமார் […]
சரக்கு லாரியில் தூத்துக்குடி அருகே தீப்பிடித்ததில் 40 டன் கோதுமை மூட்டைகளுடன், லாரி எரிந்து சேதமடைந்தது. தூத்துக்குடியில் இருந்து 40 டன் கோதுமை மூட்டைகளை ஏற்றி வந்த லாரி அருப்புக்கோட்டைக்கு புறப்பட்டது. அப்போது மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென லாரியின் முன்பக்க சக்கரம் வெடித்ததால் தீப்பிடித்தது. லாரியில் தீ பரவத் தொடங்கியதும், ஓட்டுநர் சாலையோரம் நிறுத்தி வைத்து அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதையடுத்து தூத்துக்குடியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை […]
126 ஆண்டு பாரம்பரியமிக்கது சென்னை சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்வதா..? தடுத்திடும் வகையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம். இந்தியாவின் தொன்மையான கல்வி நிறுவனங்களில் ஒன்றாக திகழக்கூடிய தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை தமிழக அரசு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.இதற்கு இந்திய மாணவர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்போது சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கம் தனது ஆதரவு தெரிவித்தது. மாணவர்களின் நலன் கருதி சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்யும் முயற்சியை […]
அகில இந்திய சிலம்பம் சம்மேளனம், உலக சிலம்பம் பெடரேசன் ஆகிய அமைப்புகள் இணைந்து 14வது தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகள் நடத்தியது. இந்தியா முழுவதிலும் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் மினி சப் ஜூனியர், ஜூனியர்,சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் சென்னை, மாம்பலம் அருகே உள்ள தனலெட்சுமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. கடந்த 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், தமிழகம் சார்பில் பல்வேறு […]
இனி புதிதாக திருமணம் ஆகும் புதுமண தம்பதிகள் திருமண பதிவு அலுவலகத்தில் பதிந்து திருமண சான்று பெற மணமக்களின் மருத்துவ தகுதிச் சான்றிதழை கட்டாயமாக்க கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
தஞ்சாவூர், கங்கைகொண்டசோழபுரம்,தஞ்சை பெருவுடையார் கோவில்,அருங்காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கல்விசுற்றுலா செல்லும் பெரம்பலூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 200 பேர் செல்லும் வாகனங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழிதேவி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூரில் ராணி என்பவர் வீட்டில் சுமார் 30 சவரன் தங்கநகைகள் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப்பொருட்கள் மர்ம நபர்கள் சிலரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் கடந்த 16ம் தேதி திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையில் காதலிக்க மறுத்ததால் தீவைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சித்ராதேவியை பாலமுருகன் என்ற வாலிபர் தீவைத்து எரித்தார். இந்நிலையில் தீவைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சித்ராதேவி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். சித்ராதேவி மீது பெட்ரோலை ஊற்றி எரித்த பாலமுருகன் ஏற்கனவே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்கா கந்தூரி விழா வெகுவிமர்சனமாக நடைபெறுவது வழக்கம்.இது முஸ்லிம் மக்களின் விழா எனினும் ஜாதியம் கடந்து ,மதம் கடந்து அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் விழாவாக இந்த விழா இருந்து வருகிறது. அகவே இவ்விழாவை முன்னிட்டு, நாகைப்பட்டினம் மாவட்டத்திற்கு இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் அறிவிப்பு செய்துள்ளார்.
திருநெல்வேலியில் கொடியன்குளம் குமார் என்ற அதிமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி, கத்தியால் சரமாரியாக தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் கொடியன்குளம் குமார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் உறவினர் செந்தில்குமார் ஆகியோர் ஒன்றாக பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் குமாரின் அலுவலகத்தின் மீது திடீரென நாட்டு வெடிகுண்டை […]
காங்கேயம் அருகே கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 4 பேர் பலி ஆனார்கள். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, தங்களது சொந்த ஊருக்கு ஜோதி, லட்சுமி, ஜெனிதா உட்பட 7 பேர் சென்றுக கொண்டிருந்தனர். அப்போது திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் உள்ள திட்டுப்பாறை என்கிற இடத்தில் வளைவான பகுதியில் பயணித்த போது கார் ஓட்டுனரின் கட்டுபாட்டை மீறி நிலைகுலைந்து கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 7 நபர்களில் 3 பெண்கள் உட்பட நான்கு […]
திண்டுக்கல் : வேடசந்தூர் பாளையம் அருகே, மகனை மீட்டு தரக்கோரி தாயும் மகளும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வான்ராயன்பட்டியை சேர்ந்த ஜெகஜோதி என்பவர் தனது மகன் குமரவேல் மைசூருக்கு வேலைக்கு போய் 3 மாதம் ஆகியும் என்ன நிலமை என தெரியவில்லை என்றும், மகனை வேலைக்கு அனுப்பிய புரோக்கர் மணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தீ குளிக்க முயற்சி செய்தார்கள்.
2018 ஆம் ஆண்டுக்கான காஞ்சிபுரம் மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு: 18 முதல்-65 வயது வரை . மேலும் விவரங்களை அறிய : https://goo.gl/oUBqgE விண்ணப்பத்திற்கான கடைசி நாள்: 02.03.2018 பதவியின் பெயர்:மருத்துவ அலுவலர், சுகாதார வருகையாளர், லேப் டெக்னீசியன் மற்றும் பல வேலைகள்
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் உள்ள விஸ்வநாதர் உலகம்மன் கோயிலில் மாசி திருவிழாவானது தற்போது நடைபெற்று வருகிறது. இக்கோவில் திருவிழாவில் நேற்று நடந்த வானவேடிக்கையிலிருந்து வந்த தீப்பொறி ஒன்று கோயில் வளாகத்தில் பைரவர் சன்னதியின் பின்புறம் உள்ள மரம் ஒன்றில் விழுந்தது. உடனே அந்த மரம் தீப்பிடித்து எரிந்தது. இதனை கேட்டு தகவல் அறிந்த தீயணைப்பு படையினர்,தீயணைப்பு படை அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் அங்கு விரைந்து வந்தனர்.பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் […]
சென்னை ஐஐடியில் நடைபெற்ற மத்திய அரசு சார்பாக நடைபெற்ற விழாவில் வாழ்த்து பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதில் சமஸ்கிருத பாடலான ‘ மகா கணபதி ‘ வாழ்த்து பாடல் ஒலிப்பரப்பப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் மாவட்டம் – உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கம் அடுத்த பாலேஸ்வரம் கிராமத்தில் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த தாமஸ் என்கின்ற தனியாருக்குச் சொந்தமான தொண்டு நிறுவனம், ஏழு ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. ஆதரவு அற்றோர், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் என முந்நூறுக்கும் மேற்பட்டோரைத் தங்க வைத்து இருக்கின்றனர். அவர்களைக் கடுமையான சித்திரவதைக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாக்குகின்றனர். ஒருமுறை உள்ளே சென்று விட்டால் பின்பு வெளி உலகத்தைக் காணவே முடியாது என்ற நிலைமை இருக்கின்றது. சேவை மனப்பான்மையுடன் […]
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா அத்தியூர் திருக்கை கிராமத்தில் தலித் இளைஞன் பிரபு பிற்படுத்தப்பட்ட வன்னிய சமூகத்தை சேர்ந்த சரண்யா காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 .2.2018 அன்று இரவு வன்னிய சமூகத்தைச் சேர்ந்த சுமார்200பேர் கொண்ட கும்பல் தலித் மக்களின் சுமார் 60 வீடுகளில் தாக்குதல் நடத்தி தலித் மக்களின் பொருட்களை நாசப்படுத்தி யுள்ளனர். கண்ணில் கண்டவர்களை எல்லாம் அடித்து உததைத் துள்ளனர். டிவி, கேஸ் அடுப்பு, பீரோ, கட்டில் உள்ளிட்ட பண்ட பாத்திரங் களை […]
சென்னை மடிப்பாக்கத்தில் கடந்த வாரம் எரிசாராயம் வீசப்பட்ட தனியார் ரத்த பரிசோதனை மைய பெண் ஊழியர் யமுனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் யமுனா மீது எரிசாராயம் வீசியதாக ரத்த பரிசோதனை மைய உரிமையாளர் ராஜா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு அருகே நடந்த ஒரு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொண்டார். விழா நடந்துக்கொண்டிருக்கும் போது திடிரென்று தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. ஆளுநர் அமர்ந்திருந்த மேடை எதிரில் பெரும் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து கல்லூரியில் இருந்து ஆளுநர் பன்வாரிலால் பத்திரமாக புறப்பட்டுள்ளார்.