தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் லெவஞ்சிரம் அருகில் சோலத்தட்டை ஏற்றி வந்த மினி லாரி மின் வயரில் உரசி தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.உடன் பொதுமக்களும் பலர் உதவினர்.
சென்னை தாம்பரம் அருகில் ஹஸ்தினாபுரம் மற்றும் சேலையூரின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டு சிட்லபாக்கத்தில் நேற்று புது அஞ்சலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் தென் சென்னையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன், தமிழ்நாடு அஞ்சலகத்துறை இயக்குனர் உயர்திரு.எம்.சம்பத் IPoS, சென்னை மாநகர அஞ்சலகத்துறை இயக்குனர் உயர்திரு.ஆர்.ஆனந்த் IPoS ஆகியோர் பங்கெடுத்தனர். இதன் முதற்கட்டமாக அரசு பள்ளியில் பயிலக்கூடிய 182 பெண் குழந்தைகளுக்கான SSA கணக்கானது (Account) நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன் பங்களிப்பின் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அஞ்சலகத்தின் பின் கொடு நம்பர் […]
சென்னையில் மருத்துவமனைக்கு செல்லும்போது ஆட்டோவில் தவறவிட்ட 15 ஆயிரம் பணம் மற்றும் அடையாள அட்டை, ஆவணங்களை உரிய வெளிமாநில பெண் பயணியிடம் சென்னை சாமியார் தோட்டம் பகுதி ஆட்டோ ஓட்டுநர் முத்துராஜ் காவல்துறை மூலம் ஒப்படைத்தார். ஏற்கனவே கோயம்புத்தூரில் இது போன்ற நிகழ்வு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை : பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் 8000 நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூத்தென்குழி என்னும் கடற்கரை கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றத்தின் போது வரும் கடல் மண் அரிப்பை தடுக்கும் எண்ணத்தில் தமிழக அரசால் சுமார் 8 கோடி மதிப்பிட்டில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னை கே.கே.நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவி அஸ்வினியை அவரது முன்னாள் காதலர் அழகேசன் கொலை செய்தார். தெற்கு மண்டல கூடுதல் ஆணையர், தி.நகர் துணை ஆணையர் அரவிந்தன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள் தரப்பில் இருந்து ஒரு நபர் மட்டும் காவல்துறை துணை ஆணையர் அரவிந்தனிடம் எப்படி இப்படி நடக்கலாம், போலீஸ் என்ன செய்கிறது, பெண்களுக்கு என்ன பாதுகாப்பு என்று கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தார். அந்த நபரின் […]
பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா சிறும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நெசவாளர்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் பொருட்டு நெசவாளர்களை பாதுகாப்போம்,கைத்தறி ஆடைகளை உடுப்போம், நெசவுக்கு உயிர் கொடுப்போம் என வாசகங்கள் கொண்ட ஒரு பெண் தறி நெய்வது போன்ற ஓவியத்தை வரைந்து மாணவிகள் உறுதியேற்றுக் கொண்டனர். இதனைதொடர்ந்து தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள்,போட்டிகள் உட்பட பல்வேறுபட்ட நிகழ்சிகள் நடைபெற்று வருகின்றன.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் பெண்கள் கல்லூரியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட மகளிர் தின விழாவில், திருமதி.பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி, சிறப்புரையாற்றினார்.
திருச்சி கணேசா ரவுண்டானா அருகில் ஹெல்மெட் சோதனையின் போது ஹெல்மெட் அணியாமல் சென்ற ஒரு கணவன் மனைவி துரத்தி சென்ற காமராஜ் SI_ பிடிக்க முடியாமல் எட்டி உதைத்ததில் உஷா என்ற 3 மாத கர்ப்பிணி பெண் துடிதுடித்து இறந்து உள்ளார் . அவர் கணவர் படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் கர்ப்பிணி பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமான போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் சஸ்பென்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் துவாக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் […]
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை சார்பில் மாநில அளவிலான சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள தியாகராய அரங்கில் நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் ஜெயக்குமார் ,சரோஜா பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள்,பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருச்சி கணேசா ரவுண்டானா அருகில் ஹெல்மெட் சோதனையின் போது ஹெல்மெட் அணியாமல் சென்ற ஒரு கணவன் மனைவி துரத்தி சென்ற காமராஜ் SI_ பிடிக்க முடியாமல் எட்டி உதைத்ததில் – உஷா என்ற 3 மாத கர்ப்பிணி பெண் துடிதுடித்து இறந்து உள்ளார் – அவர் கணவர் படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் இறந்த கர்ப்பிணி உஷாவுக்கு நீதி கேட்டு போராடிய 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கு நின்று […]
மலை வாழ் மக்களை பாதுகாக்க கோரியும் ஆந்திராவில் படுகொலை செய்யபட்ட தமிழக மலைவாழ் மக்களுக்கு நீதி கேட்டும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மலைவாழ் மக்கள் இளைஞர் சங்கம் சார்பில் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.பாலா மற்றும் மலைவாழ் மக்கள் இளைஞர் சங்கத்தின் மாநில செயலாளர் பிரவீன்குமார் உள்ளிட்டு ஏராளமான வாலிபர்கள் பங்கெடுத்தனர்.
இயற்கை வேளாண்மை செய்ய விரும்புவோர் பார்க்க வேண்டிய பண்ணை! இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் கனவுகள், தற்போதுதான் மெல்ல மெல்ல நனவாகி வருகின்றன. அதற்கு நல்ல முன்னுதாரணமாக இருப்பது திருவள்ளூர் அருகே, அரக்கோணம் சாலையில் உள்ள லியோ இயற்கை சுயசார்பு பண்ணை. இப்பண்ணையானது சுமார் 200 ஏக்கர் சுற்றளவில் அமைந்துள்ளது. காற்று, சூரியசக்தி தவிர வெளியிலிருந்து எதுவும் எடுத்துச் செல்லப்படுவதில்லை. இப்பண்ணையில் 17 வகை மாமரங்கள், நெல்லி, சப்போட்டா, மாதுளை, வாழை என பல வகை பழ மரங்கள் […]
தமிழகத்தில் உள்ள கண்மாய், குளங்களில் மீன் வளர்ப்பதற்கும், ஏலம் விடுவதில் தமிழக அரசால் வெளியிடபட்டுள்ள அரசாணையின் வழிமுறையானது முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் இவ்வழக்கு விசாரணையை வரும் மார்ச் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவுறுத்தல் செய்துள்ளார்.
சென்னை மாநகரில் மாநகராட்சிக்குட்பட்ட உத்தண்டி கடற்கரைக்கு அருகே உள்ள பகுதிகளில் அரசின் விதிமுறைகளை மீறி பங்களா கட்டியுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட 138 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த விதி முறை மீறல்கள் குறித்து விளக்கமளிக்கவும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
மார்ச் 6,, 1790.- வரலாற்றில் இன்று. மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது – ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியாரின் நிர்வாகத்தில் பெரும்பான்மையான தமிழகம் இருந்தபோது அவர்கள்தான் நிர்வாக வசதிக்காக இதுபோல் மாவட்டங்களை உருவாக்கினார்கள். அவ்வாறே மதுரை மாவட்டமும் உருவாக்கப்பட்டது. இது தற்போது மதுரையை சுற்றியுள்ள திண்டுக்கல், தேனி, விருதுநகர்,ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. தற்போதைய மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி தவிர, 5 நகராட்சிகள், 12 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள், இந்த ஊராட்சி ஒன்றியங்களின் […]
ஆளுநர், முதல்வர் வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்தை நிறுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.மேலும் 10 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்தை தடை செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கறிஞர் துரைசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அரசியல்,அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் செல்லும் பொது 10 நிமிடம் வரை போக்குவரத்து நிறுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் 3 குழந்தைகளை விஷம் கொடுத்து ஜெயக்குமார் என்பவர் கொலை முயற்சி செய்துள்ளார் . இவருக்கு உள்ள அஸ்வினி, கொடைசெல்வி, காவியா என்ற 3 குழந்தைகளை கொல்ல முயற்சி செய்துள்ளார். நிலத்தகராறு காரணமாக ஜெயக்குமார் தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொல்ல முயற்சி என தகவல் தெரிவிக்கக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார் ரவிச்சந்திரன். ராஜீவ் காந்தி கொலையில் 16வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட விருதுநகர் – அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரனுக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியது. இவர் ராஜீவ்காந்தி கொலையில் குற்றவாளிகளுக்கு உதவியதாக குற்றம் சாற்றப்பட்டுள்ள்ளது. 26 ஆண்டுகள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்த ரவிச்சந்திரன் இன்று முதல் 15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார். தமது சொத்துக்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தன்னை பிணையில் விடுதலை செய்யுமாறு […]
புற்றுநோயினால் பாதிக்கபட்டிருந்த டெல்லியை பெண் கரிமா சரஸ்வத்.அவருக்கு வயது கிட்டத்தட்ட 37 ஆகும்.இந்நிலையில் அப்பெண்ணின் உயிரை காப்பாற்ற தனது ரத்த ஸ்டெம்செல்களை தானமாக வழங்கியுள்ளார் கோவையைச் சேர்ந்த வாலிபர் குருமூர்த்தி.இவருக்கு வயது 27 ஆகும்.