சென்னை : தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் குமரி, தூத்துக்குடி, நாகை மற்றும் கடலூரை சேர்ந்த 25 மீனவர்களின் குடும்பங்களுக்கு முதற்கட்டமாக நிதியுதவி வழங்கப்பட்டது. அதேபோல் ஒக்கி புயலால் மாயமான 177 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிதியை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள வடக்கு ரதவீதியில் செயல்படுகிற ஆட்டோ நிறுத்த தலைவர் சீனிவாசன் என்பவர் சில சமூக விரோதிகளின் கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளார். மேலும் இவர் புதிய தமிழகம் கட்சியை சார்ந்தவர் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச்செயலாளர் சாமுவேல் ராஜ் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீனிவாசனை சந்தித்தார்கள். ஆட்டோ நிறுத்தம் இங்கே செயல்படக்கூடாது என நகைக்கடை […]
நெல்லை : கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் 5 வது நாளாக 8000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடற்கரையோர பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
நெல்லை:கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்க கூடாது. ஆணையம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் வள்ளியூர் வழக்கறிஞர் சேவியர் என்பவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
சேலம் : ஏற்காடு, குண்டூர் ஆனைவாரி முட்டல், வழக்குப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மலையேற்ற பயிற்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வனப்பகுதியில் தீ வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சுபிக்ஷா ஒரு இந்திய சில்லறை சங்கிலிப் பொருள்களை விற்கும் ஒரு பல்பொருள் அங்காடி ஆகும், இது 1600 கடைகள், மளிகை பொருட்கள், பழங்கள், காய்கறிகள், மருந்துகள் மற்றும் மொபைல் போன்கள் ஆகியவற்றை இந்த நிறுவனம் விற்பனை செய்தது. இது 1997 ஆம் ஆண்டு ஆர் சுப்பிரமணியன் என்ற சென்னைகாரரால் இந்த நிறுவனம் துவங்கப்பட்டது. பின்னர் 2009 ஆம் ஆண்டில் நிதி மோசடி மற்றும் கடுமையான பண நெருக்கடி காரணமாக மூடப்பட்டது. பின்பு இந்த நிறுவனத்தின் மீது ரூ.750 கோடி வங்கி […]
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை தீங்கு தொடர்பான விழிப்புணர்வு பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி தொடர்ந்த வழக்கில் தூத்துக்குடி எஸ்.பி.யிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க அரசு சம்மந்தப்பட்ட வழக்கறிஞருக்கு மதுரை உயர்நீதிமன்றகிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்கள்,பெண்கள்,அ.குமாரரெட்டியார் புறம் கிராம பொதுமக்கள் இரு நாட்கள் தூத்துக்குடியில் போராட்டம் நடத்தி ,பின்னர் கைது செய்யப்பட்டனர் […]
ராமஸே்வரம் : பாம்பன் துறைமுகத்தில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். குமரி அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். ஆழ்கடலுக்குள் சென்ற 51 படகுகளில் 27 படகுகள் பல்வேறு கடற்கரை பகுதிகளில் கரை திரும்பின. எஞ்சியுள்ள 24 படகுகள் மட்டுமே கரை திரும்ப வேண்டியுள்ளது. வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தகவல்
கிருஷ்ணகிரி : போச்சம்பள்ளி அருகே 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை. சக மாணவர்கள் 2 பேர் ஹால் டிக்கெட், புத்தகத்தை கிழித்து எரிந்ததால் மனமுடைந்த மாணவி தமிழரசி தற்கொலை செய்துள்ளார். மேலும் தேர்வெழுத உதவும் ஹால் டிக்கெட் கிழித்ததால் தேர்வு எழுத முடியால் போகும் என்று அஞ்சி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக என தகவல் தெரிவிக்கக்கப்பட்டுள்ளது.
உரிய நுழைவு அனுமதிசீட்டு பெற்றுத்தான் குரங்கணி வனப்பகுதிக்கு ட்ரெக்கிங் சென்றோம். மலைப்பகுதி விவசாயிகள் வேளாண் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை காலை கீழே இறங்கும்போதுதான் புற்களுக்கு தீ வைத்துள்ளனர்.வழக்கத்தை விட காற்று அதிகமாக வீசியதால் தீ மளமளவென பரவியது. குரங்கணி வனப்பகுதிக்கு சென்றபோது அங்கு காட்டுத்தீக்கான அறிகுறி இல்லை.மேலும் அனுபவம் மிக்க வலிக்காட்டிகள், மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் உடன் சென்றனர். குரங்கணியில் இருந்து, கொழுக்குமலைக்கு வழக்கமாக செல்லும் பாதையில் தான் ட்ரெக்கிங் சென்றோம்..குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து சென்னை […]
தமிழகத்தில் உள்ள தஞ்சை உட்பட 21 மாவட்டங்களில் தென்னை பயிரிட்ட விவசாயிகளுக்கு மழை பொய்த்து போனதன் காரணமாக வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி தமிழக தேங்காய் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கானது இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரனைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தது .
தேனி மாவட்டம் குரங்கணியில் உள்ள மலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்க வேண்டும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 25 லட்சமும், வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலையும் தர வேண்டும். தீக்காயங்களுடன் சிகிச்சை பெறுகிறவர்களுக்கு 5 லட்சமும் நிவாரணம் தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குரங்கணி காட்டுத்தீயில் காயமடைந்தவர்களை சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி,மாநில செயற்குழு […]
திருநெல்வேலி மாவட்டத்தில் சிரியா நாட்டில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து அமைதி நிலவ வேண்டி பணகுடியில் உள்ள கத்தோலிக்க திருச்சபையான புனித சூசையப்பர் திருத்தல பங்கைச் சேர்ந்த இறைமக்கள் சுமார் 500 பேர் தவக்கால புனித யாத்திரை சென்றனர்.
தேனி மாவட்டம் குரங்கணியில் உள்ள மலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய மாணவ ,மாணவிகளை காப்பாற்றிய குரங்கணியைச் சேர்ந்த மரக்காமலை, காமராஜ், பாக்கியராஜ், சங்கர் ஆகியோருக்கும் அந்த கிராமத்து மக்களுக்கும் வீரச்செயலுக்கான விருதுகளை வழங்க என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM) சார்பில் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் வலியுறுத்தினர். இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி,அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (AIKS) மாநிலச்செயலாளர் P.சண்முகம் உள்ளிட்டு ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி அருகே உள்ள ஒரு குளத்தில் மீன்பிடித்து கொண்டிருந்தவர் அக்குளத்தில் உள்ள சகதியில் சிக்கி உயிரிழந்துள்ளார். கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற தேடுதல் வேட்டைக்கு பிறகு அந்த மீனவரின் உடல் இன்று மீட்கப்பட்டது .பின்னர் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மேலூரில் டிடிவி தினகரனின் புதிய கட்சிப்பெயர் அறிவிப்பு விழாவின் பந்தக்கால் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்சியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் சசிகலா தலைமையிலான அதிமுக (அம்மா) கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்…
தேனி மாவட்டம் கேரளாவை ஒட்டியுள்ள குரங்கனி மலைப் பகுதிகளில் கடந்த 20 நாட்களாகவே தீ பற்றி எரிந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். அப்படி இருக்கும்போது இந்த குரங்கணி மலைக்கு டிரெக்கிங் செல்ல மாணவிகளை அழைத்துச்சென்றது சரியா? “அவர்கள் எங்களுடைய அனுமதி பெறவில்லை” என்று வனத்துறையினர் சொல்கின்றனர். “இவ்வாறு அனுமதி இன்றியே எப்போதும் அவர்களது விருப்பத்துக்கேற்ப அவர்கள் டிரெக்கிங் செல்கின்றனர்” என்றும் சொல்கிறார்கள். இது குறித்தும் நீதி விசாரணை தேவை என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்,அரசியல் தலைவர்களும் தமிழக அரசிற்கு […]
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் பிறந்து 110 நாட்களே ஆன பெண் குழந்தையை விட்டுச் சென்றவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். குழந்தையை மீட்ட மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் தேவானந்த், காப்பகத்தில் குழந்தையை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நெல்லை : பணகுடியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் 10 வருடமாக வாடகை கட்டிடத்தில் இயங்கும் வருகிறது. புதிய கட்டிடம் கட்ட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மதுரை-அலங்காநல்லூர் அருகே உள்ள சிக்கந்தர்சாவடி, சதங்கை கலை மையம் அருகிலுள்ள சர்ச் மற்றும் கூடல்புதூர் பகுதியிலுள்ள இரண்டு சர்ச் களுக்கு ஞாயிறன்று ஐம்பது பேர் கொண்ட இந்துத்துவ வெறிக்கும்பல் ஒன்று சென்றுள்ளது. இனிமேல் நீங்கள் யாரும்சர்ச் நடத்தக்கூடாது. அடுத்த வாரம் சர்ச் நடத்தினால் உங்களை எல்லாம் இங்கிருந்து விரட்டியடிப்போம் என அந்தக்கும்பலில் இருந்தவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.மேலும் இச்சம்பவம் குறித்து சிக்கந்தர்சாவடி மந்தையம்மன் கோவில் தெரு பகுதியில் சர்ச் நடத்தி வரும் ரவிஜேக்கப் என்பவர் கூறுகையில், ஞாயிறு […]