மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒரு கோயில் திருவிழாவை முன்னிட்டு முக்கம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 900 காளைகளும், 425 மாடுபிடி வீரர்களும் உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர்.
சென்னை : சிறப்பாக பணியாற்றிய 298 தலைமை காவலர்களுக்கு பதக்கம் வழங்கும் விழா எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறுகிறது. நடைபெற்ற இவ்விழாவில் காவல் ஆணையர் பங்கேற்றனர். காவல் பணி என்பது கடினமானது, மக்களுக்கு சேவையாற்றும் பணியை காவலர்கள் செய்து வருகின்றனர். சவாலான காலத்திலும் பெண் காவலர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர் என்றார் காவல் ஆணையர் விஸ்வநாதன்
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் சிக்கி, அங்கு மலையேற்றத்திற்காகவும், சுற்றுலாக்காகவும் சென்ற கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என 14 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த சக்திகலா சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அதேபோல், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேலம் எடப்பாடியை சேர்ந்த தேவி என்பவரும் சிகிச்சை பலனின்றி மாலை வேளையில் உயிரிழந்தார். இதனால், […]
சென்னை பெருநகர வளர்ச்சி கழகம் (Chennai Metropolitan Development Authority, CMDA Chennai-சிஎம்டிஏ)யின் எல்லை விரிவாக்க அரசாணைக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் சுப்பிரமணியன் தொடர்ந்த வழக்கில் விசாரணை மார்ச் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இந்தியா அமைப்பைத் தடை செய்த பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் சீமான், வேல்முருகன், திருமுருகன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். நாம் தமிழர்,தமிழக வாழ்வுரிமை கட்சி,விசிக,முஸ்லிம் மக்கள் முன்னேற்ற கழகம்,மே 17 இயக்கம்,பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்புகளின் தொண்டர்கள் ஏராளமானோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி காவல் நிலையத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் மீது புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆம் தேதி பெருமாநல்லூரில் விவசாயி ஸ்தூபியை கமல்ஹாசன் அவமதித்ததாக காவல் நிலையத்தில் அளித்த அப்புகார் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உட்பட்ட புதுமண்டப கடைகளை பராமரிப்புக்காக திறக்க உயர்நீதிமன்ற கிளை அனுமதி. ஒரு வாரத்திற்குள் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும், வியாபாரம் செய்வதற்கு அனுமதி இல்லை . மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து புதுமண்டபத்தில் 300 க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. தமிழகத்தில் முக்கிய கோயில்களில் உள்ள கடைகளை அகற்றும் நடவடிக்கை மீதான இடைக்காலத்தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்துசமய அறநிலையத்துறை மார்ச் 20 ஆம் தேதிக்குள் பதில் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலேஷ்வரம் அருகே உள்ள புனித அருளானந்தர் கருணை இல்லத்தில் மர்ம மரணங்கள் தொடர்பான புகாரை சிபிஐ விசாரணைக்கோரிய வழக்கு. தமிழக உள்துறை செயலர் 3 வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி மலை காட்டுத்தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த புனிதா குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை காஞ்சிபுரம் ஆட்சியர் வழங்கினார்.
கோவில்பட்டி அருகேயுள்ள அய்யனேரி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலமாக அய்யனேரி, கொம்பங்குளம், பழைய அப்பனேரி,புதுஅப்பனேரி மற்றும் சித்தரம்பட்டி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் உளுந்து, பாசி,கம்பு, மக்கச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு 2016-17ம் ஆண்டுக்கான பயிர்காப்பீடு செலுத்தி இருந்தனர். இந்நிலையில் அய்யனேரியை தவிர மற்ற கிராமங்களுக்கு பயிர்காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருவதால், விவசாயிகளிடையே தவறான தகவல்கள் தெரிவிக்கப்படுவது மட்டுமின்றி, குழப்பம் நிலவி வருவதால் விடுபட்ட அய்யனேரி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு உடனடியாக பயிர்காப்பீட்டு தொகையினை […]
கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் பேரூராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ சுமார் 35லட்ச ரூபாய் மதிப்பிட்டில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணியினை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் கடம்பூர்.ஜனார்த்தனன், நாகராஜா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், அதிமுக நகர பொருளாளார் வாசமுத்து, ராமசந்திரன், வண்டானம் கருப்பசாமி, செல்லையா, ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து அமைச்சர் செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் மறைந்த […]
10ம் வகுப்பு பொதுத் தேர்வினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் – தூத்துக்குடி மாவட்டத்தில் 95 மையங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (16.3.2018) முதல் (20.4.2018) வரை நடைபெறுகிறது. திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் என்.வெங்கடேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெறுகிற 10ம்வகுப்பு பொதுத்தேர்வில் 296 பள்ளிகளில் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனல் மின் நிலையத்தில் பாய்லர் பழுது காரணமாக 5வது யூனிட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. உடனடியாக இந்த பாய்லர் சரி செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது அனல் மின் நிலைய நிர்வாகமும்,அதன் ஊழியர்களும்,சரி செய்யப்படும் கால அளவு குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
தேனி மாவட்டம் குரங்கணி அருகே கொழுக்குமலைக்கு சென்னை, ஈரோடு உள்பட பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் டிரக்கிங் சென்றபோது குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, திருப்பூரை சேர்ந்த சக்திகலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இதில் நேற்று வரை பலி எண்ணிக்கை 14ஆகவே இருந்தது.இந்நிலையில் சக்திகலாவைத்தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.
கோவை மாநகராட்சியில், 14 வருடங்களாக குப்பை லாரி டிரைவராகப் பணிபுரிபவர் மணி. நாற்பதுகளை கடந்த வயதுக்காரர். `சென்ற வாரம் குப்பை அள்ளும் இடத்தில், ஒரு பெண்ணுக்கு `லாரியில் அமர்ந்தவாரே பதில் சொன்னார்’ என்ற காரணத்துக்காக.. மணியை செருப்பால் அடுத்திருக்கிறார் அந்தப் பெண்ணின் மகன்’ என்ற தகவலைக் கேட்கவே நெஞ்சம் பதைபதைக்கிறது. `மணியை சாதிப் பெயரைச் சொல்லி செருப்பால் அடித்து இழிவுப்படுத்தியவரை, கைதுசெய்ய வேண்டும்’ என்று மணியும் அவரோடு பணிபுரியும் சக துப்புரவுப் பணியாளர்களும் சேர்ந்து வழக்கு பதிந்துள்ளனர் நடந்தது […]
இன்று (15.3.18) காலை கோவில்பட்டி வாட்டாச்சியர் அலுவலகத்தில் காட்டு நாயக்கன் சமுகத்திற்க்கு பழங்குடியின சான்றிதழ் வழங்க கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.இந்த போராட்டத்தில் மலைவாழ் மக்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் பி.டெல்லிபாபு ex.MLA, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ஜுனன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் மல்லிகா, நகர செயலாளர் முருகன்,ஒன்றியச்செயலாளர் ஜோதிபாசு,மலைவாழ் மக்கள் நல சங்கத்தின் செயலாளர் சக்திவேல் முருகன், சிஐடியு மாவட்டகுழு உறுப்பினர் தெய்வேந்திரன் உட்பட சுமார் […]
குரங்கனி தீ விபத்தில் படுகாயம் அடைந்து மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது கணவர் விபின் சம்பவதன்று உயிரிழந்தது குறிப்பிடதக்கது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் ஷியான் ஹோண்டா ஷோரூம் பின்னால் ரெயில்வே ஸ்டேஷன் அருகில் 2 வயது மதிக்கதக்க சிறுவனின் நாய் கடித்த நிலையில் பிணம் காணப்பட்டது. இது சம்பந்தமாக காவல்துறையினருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்..
பத்துக்குப் பத்து அளவுக் கூட அந்த வீடு இருக்காது. இங்கிருந்து தான் டெல்லி ஜெவஹர்லால் பல்கலைக் கழகத்தின் ஆய்வு மாணவனாய்,ரோஹித் வெமுலாவின் உற்றத் தோழனாய் வாழ்ந்து பல்கலைக் கழகங்களின் சாதி வெறியை நமக்கு அடையாளம் காட்டிச் சென்றான் சேலத்தை சேர்ந்த முத்துக் கிருஷ்ணன். மஞ்சல் சேகரித்து விற்ற வருமானத்தில்,கண் விழித்து செக்ரூட்டி வேலைப் பார்த்த பெற்றோரின் வருமானத்தில் தான் முத்துக் கிருஷ்ணனும் அவரது மூன்று தங்கைகளும் எம்.பில்,பி.ஏ.தமிழ் இலக்கியம்,செவிலியர் என படித்தார்கள்.இவர்கள் மலையாய் நம்பிய முத்துக்கிருஷ்ணனின் உசுரு […]
அருப்புக்கோட்டை நகர் கட்டகஞ்சம்பட்டி பகுதியை சார்ந்த மாரிச்சாமி,போதும்பொண்ணு தம்பதியர்களின் (குறவர் சமூக) குடும்பத்தை அருப்புக்கோட்டை காவல்துறை எந்த முகாந்திரமும் இன்றி இழிவு படுத்தியுள்ளது.வீடு புகுந்து அராஜகம் செய்துள்ளது.ஒரு வாரமாக இரவு 11 மணி வரை காவல்நிலைய வாசலில் நிற்க வைத்துள்ளது.மீன் வாங்கி விற்கும் சுயமரியாதை உள்ள அந்த குடும்பத்திற்கு நீதி கேட்டும்,காவல் ஆய்வாளர் திரு அன்னராஜா மீது நடவடிக்கை கோரியும் அருப்புக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. […]