திருச்செந்தூரில் கூரை கொட்டகையில் இயங்கிவரும், செந்தில்முருகன் மேல்நிலைப் பள்ளிக்கு, நபார்டு திட்டத்தின் கீழ், புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் தமிழக சட்டமன்ற பேரவையில் பதில் அளித்துள்ளார். அதேபோல் பர்கூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார்.
கரூரை அருகே உள்ள காந்திகிராமம் பகுதியில் உள்ள தனியார் நகைகடையில் மர்ம நபர்கள் 10 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்றனர். கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரகதீஸ் என்ற தனியார் நகை கடை உள்ளது. இந்த கடையில் மர்ம நபர்கள் சிலர் நேற்றிரவு நுழைந்து, கடையில் இருந்த சுமார் 10 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தேசமயம் தங்க பொருட்கள் பாதுகாப்பான இரும்பு அறையில் வைத்ததால், அப்பொருட்கள் கொள்ளை போகாமல் தப்பித்துள்ளது. இதனையடுத்து, […]
சேலம் மாவட்டத்தில் உள்ள ஊத்துமலை வனத்தில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சேலம் மாநகரத்திற்கு அருகே உள்ள ஊத்துமலை வனத்தில், நேற்று மாலை திடீரென காட்டுத்தீ பரவியது. மலை மீதுள்ள முருகன் கோயிலுக்கு கிழக்கு பகுதியில் தீ பற்றி எரிந்து வருகிறது. மலையில் உள்ள காய்ந்த மரங்கள், செடி, கொடிகள் கொளுந்து விட்டு எரிவதால், அந்த பகுதிக்கு யாராலும் செல்ல முடியவில்லை. தீ எரிவதை அறிந்த சமூக காடுகள் கோட்ட வனச்சரகர் வைரம் தலைமையில் 20 […]
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி அருகே அயப்பாக்கத்தில் தனியார் புக் ஸ்டால் உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1.40 லட்சம், 85 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து ஆவடி போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி : ஓசூர் அருகே தேவரபெட்டாவில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி கணேசனை சுட்டுக் கொன்றுவிட்டு அண்ணன் சண்முகம் தப்பியோடினார். இந்நிலையில் இக்கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை சர்வேதச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு, வரும் 26ம் தேதி மறுமணம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரான சசிகலா புஷ்பா,தூத்துக்குடி முன்னாள் மேயரான இவர் தற்போது டில்லியில் வசித்து வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, அவரும், சசிகலாவும் தன்னை சேர்ந்து தாக்கியதாக கூறி, மாநிலங்களவையில் பெரும் பரபரப்பை அவர் ஏற்படுத்தினார். இதன் காரணமாக அவர் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் இன்றைய தேதி வரை, அது தொடர்பாக எந்த அறிக்கையும் மாநிலங்களவையில் […]
துத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் அனுமதியின்றி செயல் படும் கல்குவாரியல் அப்பகுதி மக்கள் செவித்திறன் இழக்கும் அளவிற்கு பாதிப்பு அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தின் வடகோடி எல்லையில் அமைந்துள்ள நரசிம்மபுரம், பாறைப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு முக்கிய தொழிலாக விளங்குவது விவசாயமும் ,கால்நடைகள் வளர்ப்பதும் ஆகும். இந்த கிராமங்கள் முழுவதும் வானம் பார்த்த பூமி. இந்த நிலையில் சிப்பிப்பாறையை என்ற இடத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் நரசிம்மபுரத்தில் 2013ம் ஆண்டு ஒரு ஏக்கர் 25 சென்ட் நிலப்பகுதியில் குவாரி அமைக்க அனுமதி பெற்றதாகவும், […]
சேலம் : சேலம் மாவட்டத்தில் உள்ள வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையில் திடிரென பிடித்த தீ 4 மணி நேரமாக எரிந்து வருகின்றது. தீ பிடித்த உடன் தீ அணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த 50 தீயணைப்பு வீரர்கள் தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவில்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்தது. இன்று காலையில் பலத்த வெயில் அடித்தாலும், மதியத்திற்கு மேலாக வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. தொடர்ந்து பலத்த இடி,மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.தொடர்ந்து சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததது. இந்த மழையினால் கோவில்பட்டி புதுரோடு, மார்க்கெட் சாலைகளில் மழைநீர் வெள்ளபோன்று போனதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.
கோவில்பட்டியில் கிருஷ்ணன் கோவில் திடலில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசுகையில் சிலர் முதல்வராக வேண்டும் என்று கட்சி தொடங்குகின்றனர். கொள்கை கோட்பாடு கிடையாது, தமிழகத்தில் வெற்றிடம் இல்லை அதிமுகவில் தான் வெற்றிடம் உள்ளது.ஊழல் குற்றச்சாட்டுக்களை வைத்து பிரதமர் மோடி ஆட்டுவிப்பதால் முதல்வர், துணைமுதல்வர் மற்றும் அமைச்சர்கள் தலையாட்டி பொம்மைகளாக, அடிமைகளாக செயல்படுகின்றனர். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டுள்ளது, […]
நெல்லை : ஏர்வாடியில் பள்ளி ஆண்டு விழாவில் அதிக மின்விளக்கு வெளிச்சத்தால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கண்பாதிப்பு சம்பவத்தில் பள்ளி தாளாளர், ஒளி, ஒலி அமைப்பாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட்ட விவகாரத்தில் பள்ளி தாளாளர் பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோடைக்காலம் தொடங்கியதையொட்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விசுவநாதன் சென்னை மெரினா காந்தி சிலை அருகில் போக்குவரத்து காவலர்களுக்கு மோர் வழங்கினார்.
நெல்லை மாவட்டம் தென்காசியில் ராமநதி – ஐம்பு நதி இணைப்பு திட்டம் பணி தொடர்பான ஆய்வுக் கூட்டம் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், டி.ஆர்ஓ முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் வைக்கோல் ஏற்றிவந்த லாரி தீப்பிடித்தது. அதிக உயரத்தில் வைக்கோல் ஏற்றிவந்தபோது தாழ்வான மின்கம்பி உரசியதில் தீப்பிடித்ததால் லாரி சேதம் அடைந்தது. தீயனைப்பு துறையினர் தீயை அனைத்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகரத்தில் உள்ள கிராம தேவதை மேலூர் அருள்மிகு பத்திரகாளி அம்பாள் திருக்கோவிலில், 48 வது மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு 1008 சங்குகளை வைத்து சங்காபிஷேகம் மற்றும் 1008 கலசங்களை வைத்து சலசாபிஷேகம் நடைபெற்றது.
கிறிஸ்துவ வழிபாட்டுதலங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதை கண்டித்து மதுரை ஆனையூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,விடுதலை சிறுத்தைகள் கட்சி,திமுக,மதிமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்டு பலர் பங்கெடுத்ததுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் தொழிலாளர் நீதிமன்றத்தை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி திறந்து வைத்தார். இந்த நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் , திருவள்ளுர், திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி ஜார்ஜ்ரோட்டில் அமைந்துள்ள புல்லுத்தோட்டம் பகுதியில் மழை பெய்து முடிந்து நான்கு நாட்கள் ஆகியும் மக்கள் வசிக்கும் பகுதியில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நோய் பரவும் அபாயம் கருதி உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நெல்லை : ஏர்வாடியில் தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற 35 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கண் பாதிப்பு அடைந்துள்ளனர். பள்ளியின் ஆண்டு விழாவில் பொருத்தப்பட்டு இருந்த அதிக ஒளி கொண்ட மின்விளக்குகளால் கண் பார்வை பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. பள்ளி ஆண்டு விழாவிற்காக இரவு அமைக்கப்பட்ட மின் விளக்குகளால் மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிப்பு. கண் பார்வை பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்டோருக்கு நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி குழந்தைகள் கண் பாதிக்கபட்ட […]