தூத்துக்குடி மாநகர் 48 வார்டுஇந்திரா நகர் பகுதி மக்களுக்கு மூன்று ஆண்டுகாலமாக இலவசவேட்டி சேலை வழங்காததை கண்டித்தும் புழுங்கல்அரிக்கு பதிலாக பச்சை அரிசி வழங்குவதை கண்டித்தும் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநகர துணைதலைவர் காந்திமதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பி.பூமயில் மாவட்டதுணைத் தலைவர் மு கமலம், மாநகரதலைவர் காளியம்மாள், உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது கோரிக்கை களை உடணடியாக நிறைவேற்ற உறுதியளித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சென்னை, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் 10 பெண்கள் படுகாயம் அடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரின் அருகே உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் இருந்து வேலை முடிந்து பெண்கள் ஒரு வேனில் காஞ்சிபுரம் நோக்கி வந்துள்ளனர். அப்போது, பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் லாரி சாலையை கடக்க முயன்ற வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், வேன் தலைகீழாக கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. […]
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தின் முதல் மாடியில் தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் மட்டும் சேதம் அடைந்துள்ளது.உடனே பாளையங்கோட்டை தீயணைப்பு துறை வீரர்கள் தகவல் அறிந்து விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
தேனி மாவட்ட குரங்கணி காட்டுத்தீயில் படுகாயமடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தஞ்சையை சேர்ந்த சாய் வசுமதி இன்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அதேபோல், காட்டுத்தீயில் சிக்கி படுகாயமடைந்த சென்னையை சேர்ந்த நிவ்ய நிக்ருதி என்பவரும், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.இதனால், குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. தண்ணீரின்றி கருகிய பயிருக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்காததை கண்டித்து விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி ஆலிப் ரெசிடென்ஸி ஓட்டலில் 4வது நாளாக வருமானவரி சோதனை நடைபெறுகிறது. வரி ஏய்ப்பு புகாரில் திருவல்லிக்கேணியை சேர்ந்த தொழிலதிபர் நாசருக்கு சொந்தமான 8 இடங்களில் வருமான வரித்துறை 4வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
தஞ்சையில் குறைதீர் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் படுத்து உறங்கும் போராட்டம் செய்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் படுத்துக் கொண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் உள்ள செங்குன்றம் அருகே 11 ஆம் வகுப்பு மாணவி சர்மிளா பொதுத்தேர்வு நன்றாக எழுதாததால் பயத்தில் தூக்கிட்டு தற்கொலை. கணிதத் தேர்வு கடினமாக இருந்ததால் தற்கொலை செய்து கொள்வதாக மாணவி எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். மேலும் மாணவியின் தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணி விவசாயிகளின் ஒப்புதலின்றி அடாவடித்தனமாக பவர்கிரிட் கார்ப்பரேசன் செய்து வருகிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு விவசாய அமைப்புகள் தலையிட்டு மின்கோபுரம் அமைக்கும் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக மின்துறை அமைச்சரிடம் இப்பிரச்சனை தொடர்பாக, பிப்ரவரி 22ந்தேதியும், மார்ச் 6ந் தேதியும் நேரில் பேசப்பட்டது. இத்திட்டத்தை கேபிள் மூலம் செயல்படுத்த வேண்டும். நிலத்திற்கான இழப்பீடு குறித்து விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும். அதுவரை மாநிலம் […]
தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி காட்டுத்தீ சம்பவம் குறித்து நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா தேனி மாவட்டம் போடியில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனைதொடர்ந்து போடி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள், தீயணைப்புத் துறையினர், மீட்பு படையினரிடம் அதுல்ய மிஸ்ரா விசாரணை செய்து வருகிறார்.
பெரம்பலூர் மகிளா நீதிமன்றம், பெரம்பலூர் அருகே, சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. பெரம்பலூர் மாவட்டம், கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவர், கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி இதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியிடம் இரு சக்கர வாகனம் கற்றுத்தருவதாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, சிறுமியின் தாய் மஞ்சுளா, பெரம்பலூர் அனைத்து […]
தூத்துக்குடி மாவட்டத்துக்கு, தமிழகத்தில் பல்வேறு பகுதிக்கு சென்ற ராம ராஜ்ஜிய ரதம் வியாழக்கிழமை(நேற்று) வந்தது. இதற்கிடையே ரதத்துக்கு எதிர்ப்பு தெரிவிததாக 7 பேரை போலீஸார் கைது செய்தனர். விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை கடந்த 13 ஆம் தேதி அயோத்தியில் தொடங்கி நாடு முழுவதும் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் வழியாக சென்ற ரதம் திருநெல்வேலி மாவட்டத்துக்கு 20 ஆம் தேதி வந்தது.தொடர்ந்து […]
கடந்த மார்ச் 19 ஆம் தேதி விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் ரத யாத்திரை வருவதை முன்னிட்டு செங்கோட்டை, தென்காசிக்கு 144 தடை உத்தரவை நெல்லை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தார். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் ரத யாத்திரைக்காக விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு காலை 6மணி முதல் தளர்க்கப்பட்டதாக அறிவித்துள்ளது. ரத யாத்திரையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக 144 தடை உத்தரவு அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவில்பட்டியில் மதிமுக கட்சி நிர்வாகி ஒருவர் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார், தொடர்ந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் மதநல்லிணக்கமும், ஒற்றுமையும் உள்ளது. தமிழகத்தில் மதசார்பின்மையை சிதைக்கும் வகையிலும், சீர்குலைக்கும் வகையிலும் சதி நோக்கத்தோடு, ராம ராஜ்ய ரத யாத்திரை என்ற பெயரில், வடநாட்டில் தொடங்கி இங்கு வந்துள்ளனர். இதற்கு முழுபாதுகாப்பு தமிழக அரசு கொடுக்கிறது.அண்ணா திமுக என்ற அண்ணா பெயரை சொல்ல […]
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தம்பித்துரை ஆகியோர் பார்த்ததாகவும், அப்போது கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவைப் பார்த்து அவர் கையசைத்ததாகவும் விசாரணை ஆணையத்தில் சசிகலா வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் இதுவரை 30க்கும் மேற்பட்டோரிடம் நீதிபதி ஆறுமுகச்சாமி விசாரணை நடத்தி உள்ளார். அவர்களில், பெரும்பாலானோர் சசிகலாவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 21ம் தேதி நீதிபதி […]
தென்மாவட்டத்தில் புகழ்பெற்ற குடவரை கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் இருக்கும் கழுகசாலமூர்த்தி திருக்கோவிலாகும், இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவானது வருட வருடம் வெகுவிமரிசையாக நடைபெறும். 13நாள் நடைபெறும் இத்திருவிழா நடைபெறும். இந்தாண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள மூலவர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே உள்ள சுபாநகாில் அடையாளம் தொியாத 80 வயது மூதாட்டி சடலத்தினை கைப்பற்றி கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாா் தீவிரமாக விசாரணை செய்துவருகின்றனர்..
குலசேகரப்பட்டினத்தில் பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் ஐசுவர்யா நகரைச் சேர்ந்த கொடிமுத்து. இவருடைய மகன்கள் விஜயகுமார் (வயது 31), ரமேஷ் (29). விஜயகுமார், நெல்லை கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் விஜயகுமார் தன்னுடைய தம்பி ரமேஷ் மற்றும் உறவினர்கள் 4 பேருடன் ஒரு காரில் திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், மணப்பாடு ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்றார். பின்னர் அவர்கள் அனைவரும் இரவில் குலசேகரன்பட்டினம்- உடன்குடி ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது பாரில் வாங்கிய […]
நேற்று விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பினர் ராமராஜ்யம் அமைக்க கோரி ரதயாத்திரை வந்தனர். உத்திரபிரதேசம் என தொடக்கி 6 மாநிலங்கள் வழியாக கேரளா கடந்து தமிழக எல்லைக்குள் வந்தது. ரதயாத்திரை அனுமதி அளிக்க கூடாது என பல்வேறு கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தி கைது செய்ய பட்ட வேளையில் சட்ட மன்றத்தில் எதிர் கட்சிகள் கடும் புயலை கிளப்பினார்.. திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் வெளிநடப்பு செய்து மறியல் போராட்டம் செய்தனர்.திமுக செயல் தலைவர் முக. […]
நெல்லை மாவட்டம் செங்கோட் டையில் ராமராஜ்ய ரத யாத்திரை என்கிற பெயரில் வகுப்புவாத அடிப்படையில் பதற்றத்தை ஏற்படுத்தும் விஸ்வ ஹிந்து பரிஷத்திற்கு எதிர்ப்புதெரிவித்து, பல்வேறு காட்சிகள், பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. இதில் நெல்லை மாவட்டம் முழுவதும் 800 பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர். விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் மதநல்லிணக்கத்துக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதற்காக அவர்கள் ராமராஜ்ஜிய ரத […]