நேரம் தவறாத விமான நிலைய பட்டியல் – பட்டியலில் இடம் பிடித்த கோவை…!
உலக அளவில் நேரம் தவறாமல் விமானங்களை இயக்கும் முதல் 20 விமான நிலைய பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கோவை விமான நிலையம், 13வது இடத்தை பிடித்துள்ளது. உலக பயண தகவல்களை வெளியிடும் ஓஏஜி நிறுவனம் உலக அளவில் நேரம் தவறாமல் விமானங்களை இயக்கும் முதல் 20 விமான நிலைய பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில், கோவை விமான நிலையம், 13வது இடத்தை பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தபட்டியலில் ஜப்பானின் ஒசாகா சர்வதேச விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.