தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதி மறுத்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும், விரிவாக்கப் பணிகளை தடுக்கக் கோரியும் அ.குமரெட்டியாபுரம் மக்களின் போராட்டம் நேற்று 57-வது நாளாக தொடர்ந்தது. பொதுமக்களின் இப்போராட்டத்துக்கு திமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்கிடையில் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் ஸ்டெர்லைட் ஆலைக்கான அனுமதிக் காலம் முடிந்தது. தொடர்ந்து இயங்க அனுமதிக்கக் கோரி, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஆலை நிர்வாகம் […]
ராசிபுரம் அருகேயுள்ள தட்டான்குட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவில், தண்ணீரில் விளக்கு எரிந்தது பக்தர்களை பரவசப்படுத்தியது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள தட்டான்குட்டையில் பிரசித்தி பெற்ற பச்சைத் தண்ணிர் மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் விமர்சையாக திருவிழா நடக்கும். அதேபோல், இந்த ஆண்டு திருவிழா கடந்த ஏப்ரல் 3ம்தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதன் தொடர்ச்சியாக ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், மாவிளக்கு படைத்தும், நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் […]
தூத்துக்குடி மாவட்டம் கோவளத்தில் ஏராளமான மீன்கள் செத்து கரையொதுங்கின. பவளப்பாறைகளுக்கு இடையே குஞ்சு பொறிக்கும் மூஞ்சான், ஊளி, ஓரா வகை மீன்கள் கடற்கரையில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இறந்து கிடந்தன. கடற்கரையை ஒட்டியுள்ள ஸ்பிக் உரத் தொழிற்சாலையின் கழிவு நீரே மீன்கள் இறப்புக்கு காரணம் என்று மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 டன்னுக்கும் அதிக மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கும் மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகள் இறந்த மீன்களையும், கடல்நீரையும் ஆய்வுக்காக […]
கருணாஸ்-ன் முக்குலத்தோர் புலிப்படையை சார்ந்தவர்கள் சி.எஸ்.கே ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு முன் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் கதவை இழுத்து பூட்டு போட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். தற்போது சென்னை அண்ணா சாலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் ஐபிஎல் டிக்கெட்களை எரித்து […]
நாகர்கோவில்:முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து, நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று காலை கலெக்டர் பிரசாந்த் வடநேரே அரசின் சாதனைகள் குறித்து செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை,துவங்கி வைத்தார். எம்.பி.விஜயகுமார் குத்து விளக்கேற்றினார். இந்த கண்காட்சியில் இலவச ஆடுகள் வழங்கும் திட்டம், கல்வி உதவி தொகைகள், மகப்பேறு நிதி உதவி, திருமண நிதி உதவி போன்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் […]
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத விவகாரத்தில் மத்திய – மாநில அரசுகளை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே டி.டி.வி.தினகரன் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்..,
நெய்வேலியில் இருந்து கர்நாடகத்திற்கு மின்சாரம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் என்.எல்.சி.யை முற்றுகையிட திட்டமிட்டுள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், தண்ணீர் தரமறுக்கும் கர்நாடகத்திற்கு மின்சாரம் தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு, காவிரி மீட்புக் குழு மற்றும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் என்எல்சி முற்றுகைப் போராட்டம் அறிவித்துள்ளனர். இதற்காக நெய்வேலி அரசு மருத்துவமனையில் இருந்து புறப்படும் பேரணியில் பழ.நெடுமாறன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சித் […]
ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கான அனுமதி கோரிய விண்ணப்பம் மும்பை பங்கு சந்தை நிராகரிப்பு. ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கான அனுமதி கோரிய விண்ணப்பம் நிராகரிக்கபட்டது.விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் பராமரிப்பு பணிகளை மேலும் நீட்டித்தது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம். பராமரிப்பு பணிக்காக ஆலை மூடப்பட்டுள்ள நிலையில், திறக்கப்படுவது மேலும் தாமதம் ஆகலாம். இந்நிலையில் மும்பை பங்கு சந்தையில் வேதாந்தா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.மேலும் சில தகவல்கள் கேட்டு மனு நிராகரிப்பு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை . மேலும் […]
நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோயில் குடமுழுக்கு விழா நடத்தும் மரபு குறித்து, பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில், செய்தியாளர் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் கோயில் இணை ஆணையர் திணறினார். வரும் 27-ஆம் தேதி நெல்லையப்பர் கோவிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவிற்கு நேரம் குறிக்கப்பட்டது. பணிகள் நிறைவடையாதது மற்றும் ஆகம விதிகள் மீறல் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து விளக்கமளிக்க நடந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற கோயில் செயல் அலுவலர் ரோஷினி […]
தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் அரண்மனை, கேணிக்கரை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேராவூர், காட்டூரணி, பட்டினம்காத்தான், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. அதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலான மழை பெய்த நிலையில் இன்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த இடங்களில் தொடர்ந்து கோடைவெயில் தகித்து வந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் […]
அரசுப் பள்ளியில் பயிலும் 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, 3 சிறுவர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கைது செய்யப்பட்டுள்ளனர். சீனிவாசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடந்த மருத்துவ முகாமில், 10 வயதுக்குட்பட்ட 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைக்குள்ளானது கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் அளித்த தகவலின்பேரில், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகள் சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள், பாலியல் தொல்லை அளித்தது […]
வாடிப்பட்டி:செம்மினிப்பட்டி கிராமம் வாடிப்பட்டி ஓன்றியத்திற்குட்பட்டது . வாடிப்பட்டி துணை மின்நிலைய கட்டுப்பாட்டில் உள்ள இக்கிராமத்தில் உள்ள நடுத்தெருவில் இரும்பு மின்கம்பம் ஒன்று அடிப்பகுதி துருப்பிடித்து ஒடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் பலமுறை மின்சாரா வாரியத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து இரும்பு மின்கம்பத்தினை சரிசெய்யும் வகையில் புதிதாக சிமெண்ட் மின்கம்பம் அமைக்கப்பட்டது.ஆனால், இதுவரை மின் இணைப்பு அந்த சிமெண்ட் கம்பத்திற்கு மாற்றப்படவில்லை. ஒடிந்து கிழே விழும் நிலையில் உள்ள அந்த பழைய இரும்பு மின்கம்பத்தில் தான் […]
மதுரை: மதுரை மாநகரில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.காலை மற்றும் மாலை நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என போலீஸ் அதிகாரிகள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் கமிஷ்னர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் போலீசார் ரோந்து பணியில் கடந்த சில நாட்களாக தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் கட்டபஞ்சாயத்து,மற்றும் வசூல் வேட்டையில் […]
சென்னை உயர் நீதிமன்றம் , உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கிய காளி படத்தை வெளியிட தடை விதித்துள்ளது. காளி திரைப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் ஆன்டனி மனைவி பாத்திமா, ஏற்கனவே அண்ணாதுரை என்ற படத்தை தயாரித்திருப்பதாகவும், அதனை வெளியிட்டதில் தமக்கு 5 கோடியே 79 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறி பிக்சர் பாக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அலெக்சாண்டர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இழப்பு தொகையைத் தராமல் காளி படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். […]
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ,ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையை தற்போது வெளியிடுவது உகந்ததாக இருக்காது என தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், நீட் நுழைவுத் தேர்வுக்கான உண்டு, உறைவிட பயிற்சி முகாமை அமைச்சர் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு செய்து கொடுத்துள்ளதாக கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நெல்லையில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கடந்த 5 – ந்தேதி ஓடும் பேருந்தில் இருந்து குதித்து படுகாயம் அடைந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செல்வம் , இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு முன் கடந்த 5 – ஆம் தேதி காவிரி வாரிய போராட்டத்தின் போது ஓடும் பேருந்தில் இருந்து இளைஞர் செல்வம குதித்தார் .நெல்லை – நாகர்கோவில் சென்ற பேருந்தில் பயணம் செய்த கோவைக்குளம் கிராமத்தைச் […]
ஜெர்மனியின் மூனிச் நகரில் வாழும் தமிழர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டனர். மூனிச் நகரில் ஒலிம்பிக் விளையாட்டு அரங்கம் அருகே ஒன்றுகூடிய தமிழர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், நியுட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடவும், ஆறுகளை இணைக்க வேண்டும் என்றும் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்ட அவர்கள், தமிழகத்தையும், விவசாயத்தை காக்க வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தித் முற்றுகையிடப்பட்டது. ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வலியுறுத்தித் தூத்துக்குடியில் பல்வேறு போராட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று தூத்துக்குடி குமரரேட்டியாபுரம்,சில்வர்புரம்,மடத்தூர், முருகேசன் நகர்,பாலையாபுரம்,சுப்ரமணியாபுரம்,தெற்கு வீரபாண்டியாபுரம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அவர்கள் முழக்கமிட்டனர்.இந்நிலையில் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு உள்ளே […]
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொள்வதாக இருந்த திட்டத்தை ரத்து செய்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வார காலமாகவே தமிழகம் போராட்டக்களமாகவே மாறியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதற்கு […]